Archive for the ‘கருணாநிதியின் செம்மொழி மாயாபஜார்’ Category

கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி

ஜூன் 30, 2010

கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28907

அரசியல் சார்பு ஆட்களுக்கு மரியாதை என்ற நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் அவமதிப்பிற்குள்ளாகினர்: கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடிகோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் கருத்தரங்கம் என்பது வருங்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.ஆனால், வெளிநாட்டு அறிஞர்களும், மற்ற அறிஞர்களும் அதிக சிரமப்பட்டனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். கட்சி, தெரிந்தவர்கள், ஜால்ராக்கள் என்றிருந்த ஆட்கள் எல்லோரும் பிழைத்துக் கொண்டனர். ஐந்து நாட்களிலும் நன்றாக அனுபவித்தனர்.

ஆய்வுக்கட்டுரைகளில் குளறுபடி: ஆய்வுக்கட்டுரை என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும் அம்சம். எல்லா ஆய்வரங்கங்களுக்கும் எல்லாரும் செல்ல முடியாது என்பதை அரசு முன்கூட்டியே அறியும். மாநாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களும் அறிவர். அரசு வெளியிட்ட தகவலின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த ஓட்டல்கள் எண்ணிக்கை 92. மொத்தம் 2,605 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தங்கும் இடங்களும், உணவும், அவர்களுக்கு பாதுகாப்பும், அவர்களை கூட்டிச் செல்ல தனி வண்டிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 50 நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் தாக்கல் செய்த கட்டுரைகள் 152 என்றும் கூறப்படுகிறது.

பல ஆய்வுக்கட்டுரைகள் விடுபடுள்ளன: பல ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்ட தேகிகளில் மின்னஞ்சல் மூலம் அனுப்பியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் பெயர்கள் பதிவு செய்யப் பட்டது என்று மின்னஞ்சல் செய்தி வந்தாலும், கடிதங்கள் அனுப்பப்பபடவில்லை. கட்டுரைகள் அனுப்பினாலும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கட்டுரைகள் உரிய தேதிகளில் அனுப்பினாலும், அவை, ஏதோ க்ஆரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மொத்த கட்டுரைகள் 913. ஆகவே உலகத் தனிமொழி,செம்மொழியை ஆய்வு செய்து தரப்பட்ட தகவல்கள் இனி நூலாக அல்லது குறுந்தகடாக வெளிவரும் என்பது வேறு விஷயம். அதே சமயம் கோவைக்கு வந்து ஆய்வரங்குகளில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் மாபெரும் அறிஞர்கள் சொல்லும் தகவல்களை நேரடியாகக் கேட்டு மகிழும் வாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வம் உள்ள ஆய்வாளர்களும், மாணவர்களும் இழந்தனர். இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் ஏற்பட்ட கெடுபிடிகள் ஒரு காரணம். இந்த அரங்குகளில் பங்கேற்று அரிய தகவல்களை கேட்க, நுழைவு அட்டை இல்லாவிட்டால் அரங்கில் நுழைய முடியாது.

நுழைவு அட்டை- மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் என்று அலைக்கழிக்கப் பட்ட ஆய்வாளர்கள்: நுழைவு அட்டை இருந்தும், மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்களுடன் இணைந்தில்லாததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பட்டிமன்றம் பங்கேற்றோர் எண்ணிக்கையை இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதைவிட, இங்கு பெறப்பட்ட கருத்தாய்வுகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டதற்கு சிலர் வருந்தினர். தாங்களே நேரடியாக அறிஞர்கள் பேசுவதைக் கேட்பதுடன், முக்கிய விளக்கங்கள் எனில் அதை அங்கேயே கேட்டுப் பெற வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் கருத்து தெரிவித்தனர்.மேலும் மேலைநாடுகளில், மற்ற பெரிய அளவில் நடக்கும் ஆய்வரங்குகள் என்பதில் பெரிய கல்லூரிகள் அல்லது தனியாக முழு வசதி கொண்ட இடங்களை தேர்வு செய்வது வழக்கம்.
ஆராய்ச்சி பின்தள்ளப்பட்டுவிட்டது, ஜால்ராக்கள் முன்னே வந்துவிட்டன: அதோடு அதில் பங்கேற்போருக்கு மதிய உணவு அல்லது காலைச் சிற்றுண்டிக்கு டோக்கன் தருவதும் உண்டு. அதன் மூலம் அங்கு வரும் அறிஞர்களும், மற்றவர்களும் இயல்பாக எந்தவித நெருக்கடியும் இன்றி அறிவுப்பூர்வமான கருத்துக்களை கேட்டு செல்வது உண்டு. உரிய நடைமுறைகளை பின்பற்றியிருந்தால், இன்னும் சற்று அதிகமாக ஆய்வரங்கில் அறிஞர்கள் எளிதாக கலந்து கொண்டு சிறப்பித்திருப்பர்.ஐந்து நாட்கள் நடந்த மாநாட்டில் நிறைய புதுக் கருத்துக்களை கேட்டு தமிழ் மொழிச் சிறப்பை மேலும் அறிய விரும்பிய பலரும் இந்த நிலைமை கண்டு ஒன்று அல்லது இரண்டு ஆய்வரங்குகள் உடன் முடித்துக்கொண்டு, தங்கள் அறைகளுக்கு திரும்பி விட்டனர். இந்த மாநாட்டின் பிரமாண்டத்தைக் கண்டு அதிசயித்த அவர்கள், அத்துடன் மனநிறைவு பெற்று திரும்பினதாக தெரிவித்தனர்.

கருணாநிதி என்ன கடவுளா? – பழ. கருப்பையா

ஜூன் 28, 2010

கருணாநிதி என்ன கடவுளா? – பழ. கருப்பையா

தினமணியில் முன்பு பதிவாகியிக்கும் கட்டுரை
First Published : 28 Apr 2010 12:44:04 AM IST

கருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே. எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், “அடித்து வைத்திருப்பதைக்’ காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும் கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள்.

ஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன்? இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும் கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம் உடையவரில்லை. மேலும் கருணாநிதி என்ன தயரதனா?

மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? “”எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்” என்று பற்றற்று உதற? வதற்கு! தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி? ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன? தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.

கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர். அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி.

அதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா? பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம்? இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸிக்கு? கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே! இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார்? கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல,கட்சியும் வலிவு பெற முடிந்தது.

அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும். அவரிடமிருந்த “செல்வம்’ அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர். தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர்.

மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார். அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி. தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி. ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம்.

ஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே. “உனக்கு இது, உனக்கு அது” என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா? ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும், அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே! சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாய்ப் பங்கிட முடியுமா என்ன? இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே?

இரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும்? கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி “திருமங்கலம் சூத்திரம்’ என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா? அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா? கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்? மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா? பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா?

அப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும்? அழகிரிக்குமல்லவா வந்திருக்கும்! “கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்’ என்று அழகிரி சொன்னதன் பொருள், “நீ விலகி நில் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதுதான்! கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார் பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி. தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி.

கட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி. இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு. இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன விசுவாசம்? மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி?

திமுக என்ன சங்கர மடமா? என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி! சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும். திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா? “அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்’ என்று வெளிப்படையாக
அந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே! “நீயாக ஏன் முடிவு செய்கிறாய்? குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்’ என்பது அழகிரியின் கூக்குரல். “என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்” என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி? யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே! 1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே!

முதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை. அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும். தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸால் களமிறக்கப்படுவார். தயாநிதியிடம் இல்லாத பணமா? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் “போதும்; போதும்’ என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும்? திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும்.

கருணாநிதி என்ன கடவுளா? தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்! தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும்என்பது இயற்கை விதி! அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?

செம்மொழி இலச்சினையில் ஏன் நமிதாவை போடவில்லை?

ஜூன் 26, 2010

செம்மொழி இலச்சினையில் ஏன் நமிதாவை போடவில்லை?

செம்மொழி இலச்சினையில் ஏன் நமிதாவை போடவில்லை? நக்கீரன் கோபால் இப்படி ஒரு கேள்வி கேட்டுள்ளார், 26-06-2010 அன்று மாலையில் நடந்த பட்டிமன்றத்தில்! நமிதா என்றதும் பலரின் முகங்கள் மாறியது நன்றாகவே தெரிந்தது. மனங்களில் உறுத்திக் கொண்டிருப்பது வெளிப்பட்டு விடும். கிட்டத்தட்ட, இது ஒரு திமுக உறவினர்கள், அபிமானிகள், என்ற மிகவும் நெருக்கமானவர்கள் எல்லோரும் கலந்து கொண்டுள்ள மாநாட்டுக் கூட்டம் என்பதனால், பழக்கமானவர்களுக்கு, ஏதோ பொதுக்குழு அல்லது முக்கியமான விஷயத்தை பேச வந்துள்ளது போன்ற உணர்வு ஏற்பட்டு விட்டது.

கருணாநிதியை சந்திக்கும் போது ரஞ்சிதா புகழ் லெனின் இருந்தது: அதுமட்டுமல்லாது, லெனினிற்கும் தனக்கும், ஒருவேளை கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு அல்லது சந்திப்புப் பற்றிய விவரத்தையும் போட்டு உடைத்துவிட்டார். ஆமாம், விழா மலரை கருணாநிதிக்குக் கொடுக்கும்போது, கூட லெனினும் வந்ததாகக் குறிப்பிட்டது ஆச்சரியமே. இந்த லெனிந்தான் அந்த லெனின் என்றால், அவன் எப்படி காணாமல் போயிருக்கமுடியும்? அப்படி புளூ ஃபிளிம் எடுக்கும் ஆள் எப்படி, ஒரு மாநில முதலமைச்சருடன் அத்தகைய நெருக்கமான உறவு கொண்டிருக்க முடியும்?

“நித்து” என்று ஜொல்லுவிடும் கோபால்: ஆமாம், “நித்து” என்று செல்லமாகக் குறிப்பிட்டு, தனது அடக்கமுடியாதத் தன்மையை செம்மொழி மாநாட்டில் கோபால் பேசியதும் இயற்கையே. “நித்து” என்ற நித்யானந்தா என்று குறிப்பிட்டு, அவர் ரஞ்சிதாகூட என்னெவெல்லாம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றதும், பின்னால் பலருக்கு குஷியாகி விட்டது. யாரோ ஒரு உற்சாகத் தொண்டர், வீடியோ போட்டு காண்பி என்ற கத்தவும் செய்தார்.

செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சி: கருணாநிதி

ஜூன் 20, 2010

செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சி: கருணாநிதி

சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:

கோவையில் நாம் நடத்தவிருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த பிறகு, எத்தகைய பயன்களை விளைவிக்கும் என்பதற்கு முன்னோட்டமாக ஓர் இனிய செய்தியை உடன்பிறப்பே, உனக்கும் தமிழ் உலகிற்கும் சொல்லுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நமது தமிழ் வல்லுநர்கள், மொழிக் காவலர்கள், ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்த அரிய கருவூலங்கள் பலவற்றை அடுத்தடுத்து பல்லாண்டு காலமாக அளித்து வருகிறார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய சென்னை உலகத் தமிழ் மாநாட்டின் போது- “காரைக்குடி கம்பர்” எனப்படும் சா.கணேசன் போன்றோர் தனி அரங்கம் ஒன்றில் கல்வெட்டு ஆராய்ச்சி பற்றி கற்பித்த உண்மைகளை அப்பொழுதே கேட்டறியும் வாய்ப்பை நான் பெற்றதால் அதிலிருந்தே கல் வெட்டுகளிலும், பழங்கால செப்பேடுகளிலும் மனத்தைப் பறி கொடுத்தவன்.

இப்போதுகூட இந்தக் கோவை மாநாட்டில் கூடம் ஒன்றில் குண்டூசியைத் தொலைத்து விட்டு தேடியவனுக்கு குதிர் நிறைய தங்க நாணயம் கிடைத்ததைப் போல ஒரு நிகழ்ச்சி. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். ஏன்; தமிழ் உலகோடும்தான்! என்ன அந்த நிகழ்ச்சி? ஏன் அதனால் மகிழ்ச்சி? என்பதை இதோ விளக்குகிறேன்.

கோவை மாநாட்டில் கண்காட்சி அரங்கம் ஒன்று அமைத்து; அதில் வைத்திட வேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்திடவும்; வைக்கப்படுகின்ற பொருள்கள் பற்றி காண வருவோர்க்கு விளக்கம் அளித்திடவும்-கண்காட்சிக் குழு ஒன்றை அறிவித்து-அக்குழுவுக்கு தலைவராக- அமைச்சர் தங்கம் தென்னரசை அமைத்திருக்கிறோம் அல்லவா; அவர் வாயிலாக நான் பெற்ற தகவல் ஒன்றை உன் செவி குளிர- சிந்தை குளிர தருகின்றேன்; படித்துப் பார்!.

கண்காட்சிக்கான பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது- சில நாட்களுக்கு முன்பு 20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது.

கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது-பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் போன்றவைகள் கிடைத்துள்ளன.

பொதுவாக செப்பேட்டு முத்திரைகளில் உள்ள சின்னங்கள் புடைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தச் செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் புலி, இரண்டு கயல்கள் (மீன்கள்), நாணுடன் கூடிய வில், இவைகளுக்கு இருபுறமும் குத்து விளக்குகள், இவைகளுக்கு மேல் நடுவில் வெண்கொற்றக் குடையும், அதன் இருபுறமும் சாமரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இம்முத்திரை 11 செ.மீ. விட்டமும், 2 செ.மீ. கனமும் கொண்டதாகும். தற்போது இவ்வளையத்தில் 86 செப்பேடுகள் கோக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு காணப்பட்டாலும், இவற்றில் உள்ளது எண்பத்தைந்து செப்பேடுகளே. இந்த செப்பேடுகள் கோக்கப்பட்ட வளையத்தில் முத்திரையிடப்பட்டு, பிரிக்கப்படாத நிலையிலே உள்ளன.

இச்செப்பேடுகள் ஒவ்வொன்றும் 44 செ.மீ.நீளம், 21 செ.மீ. அகலம் கொண்டதாகும். இச்செப்பேட்டு முத்திரையின் விளிம்புப் பகுதியில் “தர்ம ஏதத் இராஜேந்திர தேவஸ்ய பரகேசரி வர்மணக ஸ்ரீமச்சாசனம் ஊர்வி ச சிரோபிஹ சேகரி” என்று கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. இதன் பொருளானது “இந்தத் தர்மம் இராசேந்திர தேவன் என்கிற பரகேசரி வர்மனால் உலகத்தின் உச்சியின் மீது (தலை சிகரத்தின்) வைக்கப்படுகிறது”.

இந்தச் செப்பேடு கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்) தனது முப்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1053) அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது. இவர் கங்கைகொண்ட சோழன் எனவும் கடாரங்கொண்டான் எனவும் வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற அரசனாகக் குறிக்கப் பெறும் முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன் ஆவார். ஆம், ராஜராஜ சோழனின் பேரனே முதலாம் இராஜாதிராஜனாவார்.

முதலாம் இராஜாதிராஜனோடு உடன் பிறந்த மற்ற சகோதரர்கள், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், மற்றும் அதிராஜேந்திரன் ஆகிய மூவராவர். முதலாம் இராஜாதிராஜன் இந்த ஆணையினை முடிகொண்ட சோழபுரத்தில் அதாவது பழையாறையில் இராஜேந்திர சோழன் என்ற பெயர் கொண்ட அரண்மனையில் கீழைப் பகுதியில் அமைந்திருந்த விஜயராஜேந்திரக் காலிங்கராயன் என்ற அரச இருக்கையில் அமர்ந்து வழங்கியுள்ளான்.

இவ்வாணை இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டு நாட்டாருக்கும்(நாட்டுச்சபை உறுப்பினர்கள்), பிரம்மதேயக் கிழவர்களுக்கும் (காணி உரிமையுடைய பிராமணர்கள்) தேவதான, பள்ளிச்சந்தம், கணி முற்றூட்டு, வெட்டபேறு, அறச்சாலாபோகம் ஆகிய பிற அறக் கொடைகளுக்குரிய நிர்வாகத்தினரான ஊர்களிலார்க்கும் (ஊரவை உறுப்பினர்கள்), நகரங்களிலார்க்கும் (வணிகசபை உறுப்பினர்கள்) அனுப்பப்பட்டுள்ளது.

முதலாம் இராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய மக்கள் நால்வரையும் அருகிலே அழைத்து நால்வரும் ஒற்றுமையோடு எப்போதும் இருக்க வேண்டுமென்றும்-நாட்டு மக்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே அவர்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்றும் கூறி, அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக் கொண்டான் என்றும்-அவர்களும் அவ்வாறே தங்கள் தந்தைக்கு உறுதியளித்ததாகவும் இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.

பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாக அறியப்பெறும் விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடமிருந்து கைப்பற்றி-பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் காணப்படுகிறது. இதுகாறும் தஞ்சையை சோழர்கள் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியதாகவே அறியப்பட்டு வந்தது. மேற்சொன்ன இந்தச் செய்தி, ஒரு புதிய செய்தியாகும்.

இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டினைச் சேர்ந்த தத்தமங்கலம், கூத்தனூர், பஞ்சவன்நல்லூர், கரம்பைக்குடி, மேல்நாகக் குடி, கீழ்நாகக்குடி, கொற்றநல்லூர், பெரியங்குடி ஆகிய எட்டு ஊர்களையும், திருவிந்தளூருடன் இணைத்து, அந்தந்த ஊர்களில் இவ்வாணைக்கு முன்னர் காணி உரிமையுடையோராய் இருந்த குடிகளை நீக்கியும், அதன் மீதுள்ள காராண்மை, மீயாட்சி ஆகிய உரிமைகளை நீக்கியும், வெள்ளான் வகை நிலங்கள் அனைத்தையும் மாற்றி, முப்பத்து மூன்றாவது பசானம் (ஆண்டு விளைச்சல்) முதல் சதுர்வேதிமங்கலமாக்கி அறிவித்து இவ்வாணை வழங்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளான புரவுவரிக் கண்காணி சோலை திருச்சிற்றம்பலமுடையான், ஜெயங்கொண்ட சோழ கோசலராயன், நாடுவகை செய்கின்ற சோழவளநாட்டு விளாநாட்டு கரிகால சோழ நல்லூருடையான் கேகயன் ஆதித்தனான கண்டராதித்த மூவேந்த வேளான், புரவுவரித்திணைக்களத்துக் கீழ்முகவெட்டி உள்ளிட்ட பலரும் உடனிருந்து ஊர்களனைத்தையும் அளந்து, ஒன்றாக்கிச் சதுர்வேதிமங் கலமாக அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணையினை அளித்த மன்னன் முதலாம் இராஜாதிராஜனின் இறுதி ஆட்சி ஆண்டு முப்பத்தாறு (கி.பி. 1054) ஆகும். 36 ஆண்டுகள் ஆட்சி செய்து, மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லன் சோமேஸ்வரனை எதிர்த்துக் கொப்பத்தில் செய்த போரில் போர்க் களத்திலேயே யானையின் மீதமர்ந்தவாறே உயிரை ஈந்தவன் இம்மன்னன்.

ஏற்கனவே அண்ணன் இராஜாதிராஜனால் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றிருந்த இரண்டாம் இராஜேந்திரன் அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடி சூட்டிக் கொண்டு, தலைமையின்றி சிதறிய சோழப் படையை ஒழுங்குபடுத்தி தலைமையேற்று, ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கொல்லாபுரத்தில் தன் வெற்றித் தூணையும் நிறுவியவன்.

கொப்பத்துப் போருக்குச் செல்லும் முன்னர் அதற்கு முன்னாண்டில் (கி.பி. 1053) அண்ணனால் அளிக்கப்பட்ட இவ்வாணை அவனது தனயன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1061) வரியிலிட்டுச் செப்பேடாக்கித் தரப்பட்டுள்ளது. இரண்டாம் ராஜேந்திரச் சோழன் சோழ நாடு திரும்பிய பின்னர் தன் அண்ணன் முதல் ராஜாதிராஜன் போருக்குச் செல்வதற்கு முன்பாக வழங்கிய தானத்தை உறுதி செய்து வழங்கிய செப்பேடு இப்போது கிடைக்கப் பெற்ற செப்பேடாகும்.

மேற்குறித்த எட்டு ஊர்களிலுமுள்ள நிலங்கள் அனைத்தும் அளக்கப்பட்டு நீக்க வேண்டிய வற்றை நீக்கி, வெள்ளான்வகை, நிலங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, கொடுக்கப்பட்ட நிலங்களுக்கான அளவுகளை மிக விரிவாகக் கூறுகிறது செப்பேடு. பின்னர் சதுர்வேதி மங்கலத்தில் கொடுக்கப்படும் பங்குகளும், அளிக்கப்பட்டோரின் பெயர்களும், அவரவர் ஊர், குடும்பப் பெயர்களோடு வரிசையாகக் கூறப்பட்டுள்ளன.

தொடர்ந்து அவர்கட்குப் பணி செய்யும் நாவிதர், ஈரங் கொல்லிகள் (வண்ணார்), மற்றும் பறை அறிவிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பங்குகள் குறிக்கப்படுகின்றன. இறுதியாக அறத்தைக் காப்போர் பெறும் பலன் கூறி முடிவுக்கு வருகிறது செப்பேட்டு வாசகம். எண்பத்தைந்து செப்பேடுகளைக் கொண்ட இச்செப்பேட்டில் முதல் எட்டு செப்பேடுகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பகுதியாகும்.

எட்டாம் செப்பேட்டின் இறுதியிலிருந்து கோனேரின்மை கொண்டான் என்று தொடங்கும் தமிழ்ப் பகுதி, 85-ம் செப்பேடு வரை நீள்கிறது. இதில் தான் மேற்கூறிய அனைத்து விவரங்களும் உள்ளன. இச்செப்பேடுகளை எழுதி வரியில் இடப்பட்டது.

இரண்டாம் ராஜேந்திரன் காலத்திலாகும். எனவே, செப்பேட்டின் வளையத்திலுள்ள முத்திரையில் “பரகேஸரி வர்மன் ராஜேந்திரதேவனுடையது” என்று கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் “இவ்வளையத்தில் கோத்த செப்பேடு எண்பத்தாறு” என்றும் வளையத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தமிழகச் செப்பேடுகள் எதிலும் இவ்வாறு செப்பேடுகளின் எண்ணிக்கை குறிப்பிடவில்லை என்பது சிறப்பாகும். இராஜாதிராஜனால் வெளியிடப்பட்டுக் கிடைத்திருக்கும் முதல் செப்பேடு என்ற பெருமைக்குரியது இச்செப்பேடாகும். தமிழகத்தில்-ஏன் இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் இராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், செப்பேடுகளின் எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இச்செப்பேடாகும்.

நான் இச்செப்பேடுகளைப் பார்வையிட்ட போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், சுற்றுலாத் துறை செயலாளர், தொல்லியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஆகியோரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ரா.நாகசாமி ஆகியோரும் இருந்தனர்.

இச்செப்பேட்டின் வடமொழிப் பகுதியை நாகசாமி படித்துக் காட்டி இதுவரையில் கிடைத்த செப்பேடுகளில் இதுதான் எண்ணிக்கையிலும், அளவிலும் பெரிது என்று கூறினார்.

அப்போது நான் பெற்ற மகிழ்ச்சியினையும், நம் முன்னோர் குறித்த பெருமிதத்தையும் உன் போன்ற உடன்பிறப்புகள் அனைவரும் பெற வேண்டுமென்பதற்காகத் தான் இந்தக் கடிதம்.

இத்துணை சிறப்பு வாய்ந்த ஒரு மாநாட்டை உலகம் முழுவதும் உள்ள உத்தமத் தமிழர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து, வெளிநாட்டு அறிவொளி மிக்கார் வருகை தந்து, நடத்துகின்ற மாநாட்டின் பெருமையும் புகழும் எதிர்காலம் பற்றிய ஆக்கமும், ஊக்கமும் இங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்.

அவரெல்லாம் நில்லா நெடுஞ்சுவராயிடுவர்! வில்லாம், புலியாம், கயலாம், நம் தமிழ்க் கொடிக்கு முன்னே தடம் காண முடியாமல் தாழ்ந்திடுவர்! தமிழ்ச் சிங்கக் கூட்டமாம் நம்மை; தடம் மாற்றிப் போடுதற்கு இந்தத் தரணியில் எவரும் இல்லை! பழம்பெரும் தஞ்சை மண்ணில் சோழ மன்னர் ராஜாதிராஜன் வழி வந்தோர் அன்றைக்கே திட்டமிட்டு நமக்கென புதைத்து வைத்த 86 செப்பேடுகளும் அதைத்தான் நமக்கு உறுதிப்படுத்துகின்றன!

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மாபெரும் துரோகி, ஆரியக் கூலி என்றெல்லாம் பெரியார் சொன்ன ஆளின் பெயரால் அரங்கங்கள் தேவையா?

ஜூன் 16, 2010

மாபெரும் துரோகி, ஆரியக் கூலி என்றெல்லாம் பெரியார் சொன்ன ஆளின் பெயரால் அரங்கங்கள் தேவையா?

24-06-2010 (வியாழன்): வரும் 24ம் தேதி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தொல்காப்பியர் அரங்கில் ஆய்வரங்கு நிகழ்ச்சி துவக்க விழா நடக்கிறது.

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி।

ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.

இப்படியெல்லாம் சொன்னது பெரியார்!

தமிழ் பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றி, தமிழர்களை ஏமாற்றி, இப்பொழுது கோடிகளை செலவழித்து “மாயா பஜார்” வேலைக் காட்டத் தயாராகி விட்டார்கள்.

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!

மே 15, 2010

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 11:03 [IST]

ஆட்டோ சங்கர் என்பவன் ஒரு பலான விபச்சாரத்தொழில் செய்தவன்,பல கொலைகலைச் செய்தவன், ……………..1988ல் இவனைப் பற்றி செய்தித் தாள்களில் அதிகமாக செய்திகால் வெளிவந்து கொண்டிருக்கும்.

அவனது லிஸ்டில் இருந்த விபச்சாரிகள் யார், யார்………..எந்தெந்த அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர், என்றெல்லாம் செய்திகள் வரும்.

குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டான்.

குற்றங்களில் துணை போன பலர் – அவனது தம்பி மோகன், மைத்துனன் எல்டின் என்கிற ஆல்பர்ட், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ……இருந்தனர்.

சாவதற்கு முன்பு, கிருத்துவன் ஆனான், ஆனால், ஏற்கெனவே கிருத்துவனந்தான் என்றும் சொல்லப் பட்டது! எப்படியாகிலும், கிருத்துவர்களும் அதில் புகழ் பெற்றனர்!

நெல்லை: கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வுக் கட்டுரை அனுப்பிய பாளை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிகள் ஆறு பேருக்கு மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி இலக்கிய ஆய்வு கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு கட்டுரை போட்டியில் பாளை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஆட்டோ செல்வராஜ், சூசை மரியான், கல்கி மோகன், அய்யங்கனி, கிருஷ்ணன், ரமேஷ், பங்கேற்றனர்.

ஆனல், எத்தனை தகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: இவர்கள் இலக்கிய ஆய்வு கட்டுரை எழுதி உலக தமிழ் செம்மொழி மாநாட்டு குழுவிக்கு கடந்த மார்ச்சில் அனுப்பி வைத்தனர். இவர்கள் அனுப்பிய கட்டுரை குறித்து பரிசீலனை நடந்தது. இதற்கிடையில் இவர்கள் 6 பேருக்கும் மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கை எண் குறிப்பிட்டு மாநாட்டு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைவர் அனுமதி பெற்று 6 பேரும் முந்தைய நாள் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் மாநாட்டில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்டோ சங்கரின் கூட்டாளி: ஆய்வு கட்டுரைகளை செம்மொழி மாநாட்டு குழுவிற்கு அனுப்பிய 6 பேரும் இலக்கிய அறிவு நிரம்பியவர்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்டோ செல்வராஜ் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை குற்றவாளி ஆட்டோ சங்கரின் கூட்டாளி ஆவார். இவர் பிஏ பட்டதாரி. ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இதேபோல கைதி, கல்கி மோகன் ஓவியங்கள் வரைவதில் நிபுணராம். ஆறுபேரும் சிறையில் நடக்கும் கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றவர்கள். தமிழக அளவில் இலக்கிய ஆர்வம் காரணமாக பாளை சிறைக்கைதிகளுக்கு மட்டுமே செம்மொழி மாநாட்டில் பங்கேற்க இத்தகைய அழைப்பு கிடைத்துள்ளது.

கொலைக்குற்றங்களை செய்துவிட்டு இப்படி இருப்பதென்ன? தேர்வு செய்யப்பட்ட 6 கைதிகளுக்கும் கூட்டங்கள், விழாக்களில் பேசுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அறிவுரைப்படி சிறை ஆசிரியர்கள் இருதய அரசு, செல்வராஜ் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கூடுதல் தேர்ச்சி, மாநில அளவி்ல் எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் இரு இடங்கள், 16 பேர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி, இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் 46 பேர் பங்கேற்பு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு என பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாளையங்கோட்டை சிறைச்சாலை, நல்ல போதனைகளைக் கொடுக்கும் சோலையாக மாறி வருவது உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான் [என்ன போதனைகளைக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை].

ஆமாம், ஏன் நளினி, முருகன்………………………….முதலியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவில்லை? அவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லையா?

பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீளும் போது, மற்றா சிறைகளின் பட்டியல் நீளாதா?

தமிழை மதிக்கக் கற்றுக் கொண்டார்களா? பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் என்ற போலித்தனம் ஏன்?

மே 2, 2010
தமிழை மதிக்கக் கற்றுக் கொண்டார்களா?
பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் என்ற போலித்தனம் ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
மே 02,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18257

தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் வரிகள் பிறழ்ந்து விட்டன என்ற குற்றம் எழுந்துள்ளது.

தமிழ் என்பது இந்த திராவிட அரசியல்வாதிகளுக்கு ஒரு வியாபாரப் பொருள் ஆகிவிட்டது.

அதுவும் ஒரு வியாபாரச் சின்னத்திற்கு அதனைக் குறைத்து விட்டார்கள், எப்படி செம்மொழி மாநாட்டிற்கு சின்னம் போட்டார்களோ அதுபோல.

இப்பொழுதுகூட, “செம்மொழி மாநாடு” என்று கூறி, தமிழ்த்தாயைக் கூறுபோட்டுவிட்டார்கள்.

கோடிகளை அள்ளுவோம், கொள்ளையடிப்போம் என்ற உன்மத்த உத்வேகத்தில், “செவ்வியக் காலம்” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு தமிழ்த்தாயை “கற்பழித்து” விட்டனர் என்றே சொல்லலாம்.

பிறகு எதற்கு இந்த போலி நாடகம், கூத்து எல்லாம்?

முதலில் தாய் மொழி என்ற உணர்வு, தாயை, பெற்றத் தாயைப் பேணிக் காக்கும் மகனைப் போன்ற உணர்வு இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான் அவன், தனது தாயை தாயாகப் பாவிப்பான்.

பணம் கொடுக்கிறேன் எனக்கு சேவை செய் என்றால், வேலைக்காரிக் கூட தொடமாட்டாள்.

அந்நிலையில், இந்த திராவிட அரசியல்வாதிகள் உண்மையாக தமிழ் வளர்க்க என்ன செய்திருக்கிறார்கள்?

தமிழ் உணர்வை எப்படி பேணி வளர்த்திருக்கிறார்கள்?

மணப்பாறை: பள்ளி விழாவில் மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாததால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

மாணவிகள் பாடத் திணறியனராம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள, செவலூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா, நேற்று õலையில் நடந்தது.  போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, கல்வித்துறை அதிகாரிகள்  பங்கேற்றனர். விழா துவங்கியவுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒலிப்பெருக்கியை ‘ஆன்’ செய்தனர். ஒலிபெருக்கி சரியாக இயங்காததால், பள்ளி மாணவிகள் எட்டு பேர், தமிழ்த்தாய் வாழ்த்து பாட, மேடைக்கு வந்தனர். துவக்கத்தில் நன்றாக பாடிய மாணவிகள், பாதிக்கு மேல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் தவித்தனர்.மாணவிகள் பாடத் திணறியதை கண்ட அமைச்சர் நேரு, தானே தொடர்ந்து பாடலை பாடினார்.

தலைமை ஆசிரியர் மீது  நடவடிக்கை: அவருடன் விழாவுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் பாடி முடித்தனர். விழா முடிந்ததும் அமைச்சர் நேரு, பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்தார். அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறிது காலத்துக்கு முன் இறந்து விட்டதால், பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்த, ராமகிருஷ்ணன் அமைச்சரிடம் சென்றார். அவரை அமைச்சர் நேரு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடத் தெரியாமல் மாணவிகள் உள்ளனர். ஆசிரியர்கள் என்ன தான் சொல்லித் தருகின்றனர்’ என்று கூறி கடுமையாக திட்டினார். அதன் பின் அமைச்சர் நேரு, திருச்சி கலெக்டர் சவுண்டையாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு,’தமிழ்த்தாய் வாழ்த்து கூட மாணவர்களுக்கு சரியாக சொல்லித்தராமல் உள்ளனர். உடனடியாக, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுங்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

செம்மொழிக் குழுக்களும், குழப்பங்களும்!

ஏப்ரல் 4, 2010

செம்மொழி குழுக்களும், குழப்பங்களும்!

இதில் உள்ள பெயர்கள், அவர்களுடைய பின்னணி, முதலியவற்றைப் பாரபட்சமின்றி பார்த்தால் (கடந்த 30-40 ஆண்டு காலத்தில்), அவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு, எதற்க்காக இக்குழுக்களில் பங்கு பெற்றுள்ளார்கள், அவர்கல் தகுதி என்ன, அவர்கள் தமிழுக்காக என்ன செய்தார்கள்……… என்பதனை அறிந்து கொள்ளலாம்.

புலியும்-பசுவும் போல, பாம்பும்-கீரியும் போல, விபச்சாரியும்-பத்தினியும் போல…………….எதிரும்-புதிருமாக இருக்கின்றவர்கள் ஏன் சேர்ந்து கொள்ளவேண்டும், வரவேண்டும்?

அவர்களுக்கிடையுள்ள இப்பொழுதைய உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் / விருப்பம் என்ன என்பதனை நினைத்துப் பார்க்க-தெரிந்து வேண்டும்.

விடுபட்டவர்கள், சேர்த்துக் கொள்ளப்படாதவர்கள் உருகி /உருமி / கருவிக்கொண்டிருக்கின்றனர்.

தனியாக மாநாடு நடத்துவும் யோசிக்கின்றனர்; செயல்பட்டு வருகின்றனர்; அதற்கான ஆவணங்களும் தயாராகி வருகின்றன!

பல உண்மையான தமிழ் புலவர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள், சரித்திர ஆசிரியர்கள்…………..முதலியோரை ஒதுக்கிவிட்டு, குறிப்பாக ஜால்ராக்களையும், சம்சாக்களையும், அடிவருடிக் கூட்டங்களையும் சேர்த்துக் கொண்டு நடத்தப் படும் இந்த போலித்தனத்தை பலரும் வெறுக்கவேச் செய்கிறார்கள்.

இருப்பினும், பதவி, பணம், விளம்பரம்………………முதலிய இத்யாதிகள் கிடைக்குமே என்ற சபலத்துடன் அலையவேச் செய்கின்றன. எப்படியோ சில நுழைந்தும் விட்டன!

மாநாட்டுத் தலைமைக் குழு

தலைவர்

கலைஞர் மு. கருணாநிதி, மாண்புமிகு முதலமைச்சர்

துணைத் தலைவர்கள்

பேராசிரியர் க. அன்பழகன், மாண்புமிகு நிதியமைச்சர்

திரு.மு.க. ஸ்டாலின், மாண்புமிகு துணை முதலமைச்சர்

முனைவர் வா.செ. குழந்தைசாமி, துணைத் தலைவர், உலகத் தமிழாய்வுக் கழகம்

திரு. ஐராவதம் மகாதேவன், தொல்லியல்  அறிஞர்

உறுப்பினர்கள்

திரு. கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப., தலைமைச் செயலர்

திரு. கு. ஞானதேசிகன், இ.ஆ.ப., முதன்மைச் செயலர், நிதித் துறை

அமைப்பாளர்

திரு. கா. அலாவுதீன், இ.ஆ.ப., தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

மாநாட்டு ஆலோசனைக் குழு

தலைவர்

கலைஞர் மு. கருணாநிதி, மாண்புமிகு முதலமைச்சர்

உறுப்பினர்கள்

பேராசிரியர் க. அன்பழகன், மாண்புமிகு நிதியமைச்சர்

திரு. ஆவுடையப்பன், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர்

திரு.கே.வீ. தங்கபாலு, இந்திய தேசிய காங்கிரஸ்

திரு.கி. வீரமணி, திராவிடர் கழகம்

திரு. இராம வீரப்பன், எம்.ஜி.ஆர் கழகம்

திரு.கோ.க. மணி, பாட்டாளி மக்கள் கட்சி

திரு.என். வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திரு.வை. சிவபுண்ணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திரு.இல. கணேசன், பாரதிய ஜனதா கட்சி

திரு. காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

திரு. தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திரு. சரத்குமார்,சமத்துவ மக்கள் கட்சி

திரு. ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

திரு.பூவை ஜெகன் மூர்த்தி, புரட்சி பாரதம்

திரு.பெஸ்ட் ராமசாமி, கொங்கு முன்னேற்றக் கழகம

திரு.கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப., தலைமைச் செயலர்

அமைப்பாளர்

திரு. கா. அலாவுதீன், இ.ஆ.ப., தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு

தலைவர்

பேராசிரியர் க. அன்பழகன், மாண்புமிகு நிதி அமைச்சர்

துணைத் தலைவர்கள்

முனைவர் மு. நாகநாதன், துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு

முனைவர் திருவாசகம், துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்

முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்,

உறுப்பினர்கள்

முனைவர் கரு.அழ. குணசேகரன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வானதி திரு. திருநாவுக்கரசு, சென்னை,

பூம்புகார் திரு. பிரதாப்சிங்,  சென்னை

ஒருங்கிணைப்பாளர்

திரு.கூ.வ. எழிலரசு, இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

மாநாட்டு ஆய்வரங்க அமைப்புக்  குழு

தலைவர்

பேராசிரியர் முனைவர் கா. சிவத்தம்பி

இணைத் தலைவர்கள்

முனைவர் ஔவை நடராசன்

முனைவர் பொன் கோதண்டராமன்

செயலாளர்

கவிஞர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர்

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் ம. இராஜேந்திரன், துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

தமிழ்  இணைய மாநாட்டுக் குழு

தலைவர்

பேராசிரியர் மு. ஆனந்த கிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்

அமைப்பாளர்

டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா

மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

ஒருங்கிணைப்பாளர்

திரு டேவிதார், இஆப., செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை

உறுப்பினர்கள்

கவிஞர். கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர்

முனைவர் பி.ஆர். நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்

திரு. மோகன், தேசிய தகவல் மையம்- மைய அரசு

திரு. டி.என்.சி. வெங்கடரங்கன், துணைத் தலைவர், உத்தமம்

திரு. ஆன்டோ பீட்டர், கணித் தமிழ்ச் சங்கம்

திருமதி. ஸ்வரன் லதா,  இயக்குநர்,

இந்திய மொழிகளில்  தொழில்நுட்ப மேம்பாடு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மைய அரசு

டாக்டர். சந்தோஷ் பாபு. இஆப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம்

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

தலைவர்

தலைமைச் செயலர்

அமைப்பாளர்

தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

உறுப்பினர்கள்

முதன்மைச் செயலர், உள்துறை

முதன்மைச் செயலர், நிதித்துறை

முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

செயலர், பொதுத்துறை

செயலர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை

செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை

செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை

இயக்குநர், காவல் துறை

தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்

மாவட்ட ஆட்சியர், கோவை

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் (காவல் துறை)

மேலும் பிற குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்

வரவேற்புக் குழு

தலைவர்

ஆற்காடு திரு.நா. வீராசாமி, மாண்புமிகு மின் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு துரை முருகன், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்

திரு. சுதர்சனம், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர்

ஒருங்கிணைப்பாளர்

திரு. தேவ ஜோதி ஜெகராஜன், இ.ஆ.ப., செயலர், பொதுத்துறை

உறுப்பினர்கள்

திரு.வி.பி. துரைசாமி, மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர்

திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய இணையமைச்சர்

டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

திரு. சிவந்தி ஆதித்தன், தலைவர், தினத்தந்தி குழுமம்

திரு. சீனிவாசன், மேலாண்மை இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்

திரு வேணு சீனிவாசன், மேலாண்மை இயக்குநர், டி.வி.எஸ் நிறுவனம்

திரு கருமுத்து கண்ணன், தலைவர், தியாகராயா மில்ஸ், மதுரை

திருமதி ராஜஸ்ரீ பதி, தலைவர், ராஜஸ்ரீ சுகர்ஸ், கோவை

திரு கிருஷ்ணராஜ்  வாணவராயர், கோவை

கவிஞர் திரு. ஈரோடு தமிழன்பன்

திரு.வி.ஆர்.எஸ். சம்பத்

திரு. தீனபந்து, இ.ஆ.ப.,

திரு. அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப.,

திரு. ராஜிவ் ரஞ்சன், இ.ஆ.ப.,

டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப.,

ஊர்வலக் குழு

தலைவர்

திரு.கே.என். நேரு, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு.ஐ. பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர்

திரு. ஏவிஎம். சரவணன், சென்னை

திரு. ராம நாராயணன், தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை

திரு. அபிராமி ராமநாதன், தலைவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்

திரு.வி.சி. குகநாதன், தலைவர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), சென்னை

டாக்டர் சி. சுவாமிநாதன், துணைவேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு. செல்லமுத்து, இணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியம்

திரு.சி. காமராஜ், இ.ஆ.ப., இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை

உறுப்பினர்கள்

ஆணையர், தொழிற்நுட்பக் கல்வித் துறை

டாக்டர் இறையன்பு, இ.ஆ.ப., செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை

டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், கோவை

மாநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (காவல்துறை) (நியமிக்கப்பட்டபின்னர்)

திரு பி. சிவனாண்டி, இ.கா.ப., மாநகர காவல் துறை ஆணையர், கோவை

திருமதி  பாலநாகதேவி, இ.கா.ப., காவல் துறை துணைத் தலைவர், கோவை சரகம்

டாக்டர் பெருமாள்சாமி, இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை

திரு. ஜெ­­யபாஸ்கரன் சார்லஸ், இயக்குநர், கல்லூரிக் கல்வித் துறை

திரு. மருது, ஓவியர், சென்னை

திரு. சந்துரு, முதல்வர் (பொ) ஓய்வு, அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை.

திரு. மனோகர், முதல்வர் (பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை

திரு.வெ. சந்திரசேகரன், முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்

பொது அரங்க நிகழ்ச்சிகள்  அமைப்புக்குழு

தலைவர்

டாக்டர். பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு. ஜெகத்ரட்சகன், மத்திய இணை அமைச்சர்

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

திரு. குமரி அனந்தன்

முனைவர் ஔவை நடராசன்

கவிக்கோ அப்துல் ரஹ்மான்

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்

கவிஞர் வாலி

கவிப்பேரரசு வைரமுத்து

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு. செ. அரங்கநாயகம், முன்னாள் அமைச்சர்

திரு. க. கணேசன், இ.ஆ.ப., முதன்மைச் செயலர், உயர்கல்வித் துறை

உறுப்பினர்கள்

திரு. கே.எஸ். அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்

திரு. இறையன்பு, இ.ஆ.ப., அரசு செயலாளர்

திரு.க. முத்துசாமி, இ.ஆ.ப., அரசு செயலாளர்

முனைவர் சபாபதி மோகன், துணைவேந்தர்

திரு. கூ.வ. எழிலரசு, இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

விருந்தோம்பல் குழு

தலைவர்

திரு. எ.வ. வேலு, உணவுத் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு. மு. கண்ணப்பன், முன்னாள் மத்திய இணையமைச்சர்

திரு. பொள்ளாச்சி நா. மகாலிங்கம்

பேரூர் சாந்தலிங்க அடிகளார்

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு.கோவை தங்கம், சட்டமன்ற உறுப்பினர்

திரு.க. சண்முகம், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்,

உறுப்பினர்கள்

திருமதி பத்மாவதி, சட்டமன்ற உறுப்பினர்

திரு. கு. செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்

திரு எஸ்.வி. பாலசுப்பிரமணியன், பண்ணாரி அம்மன் குழுமம்

திருமதி நந்தினி ரங்கசாமி

திரு. ரவிசாம்

திரு.க. இராஜாராமன், இ.ஆ.ப.,, உணவு வழங்கல் துறை ஆணையர்.

டாக்டர் ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர்.

டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியர், கோவை

திரு. நாகராஜன், இ.கா.ப., துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), கோவை மாநகர காவல் துறை

திரு. சுவாமிநாதன், பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளை, கோவை

முனைவர் பால் தினகரன், வேந்தர், காருண்யா பல்கலைக் கழகம்

திரு. சீனிவாசன்,மாநில பொருளாளர் மாநில ஓட்டல் / உணவு விடுதிகள் சங்கம், கோவை.

கண்காட்சி அமைப்புக் குழு

தலைவர்

திரு. தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு என். செல்வராஜ், வனத்துறை அமைச்சர்

திருமதி. சற்குண பாண்டியன், முன்னாள் அமைச்சர்

திருமதி டி. யசோதா,சட்டமன்ற உறுப்பினர்

திரு கணபதி ஸ்தபதி, சென்னை

முனைவர் நாகசாமி, இயக்குநர் (ஓய்வு), அரசு தொல்லியல் துறை

ஒருங்கிணைப்பாளர்கள்

திருமதி வசந்தி ஸ்டான்லி, நாடாளுமன்ற உறுப்பினர்

திரு. கோபண்ணா

கவிஞர் மு. மேத்தா

கவிஞர் பா. விஜய்

திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்

டாக்டர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.,தொல்லியல் துறை  ஆணையர்

உறுப்பினர்கள்

திருமதி சத்தியபாமா, மத்தியத் தொல்லியல் துறை

திரு. கா. இராசன், மத்தியப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

திரு. இரத்தினகிரி, தஞ்சை

திரு. சொக்கலிங்கம், (கவிதா பதிப்பகம்), சென்னை

திரு. வேலாயுதம், (விஜயா பதிப்பகம்), கோவை

திரு மா. உமாபதி, கோவை.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு

தலைவர்

திரு என். சுரேஷ் ராஜன், சுற்றுலாத் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பிற்பட்டோர் நலன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர்

திருமதி   ஆ. தமிழரசி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்

நடிகர் திரு. சிவக்குமார்

ஒருங்கிணைப்பாளர்கள்

செல்வி. கே. பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர்

திருமதி பெ. கமலாம்பாள், சட்டமன்ற உறுப்பினர்

திருமதி ஜோன்ஸ் ரூசோ

கவிஞர் சல்மா என்கிற ரொக்கையா

திரு.ப.அ. மணி, இ.வ.ப., ஆணையர், கலை மற்றும் பண்பாட்டுத் துறை

உறுப்பினர்கள்

டாக்டர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை

டாக்டர் ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை

திரு.ஜி. பால்ராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை

தந்தை வின்சென்ட் சின்னதுரை, தமிழ் மையம், சென்னை

கவிஞர். இளையபாரதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

திரு. மு. இராமசாமி, ,தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

முதல்வர் (பொ), திரைப்படக் கல்லூரி, சென்னை

திரு நா. முத்துசாமி, கூத்துப் பட்டறை

முனைவர் மார்கரெட் பாஸ்டின் கலைக் காவிரி, திருச்சி

தங்கும் இட ஏற்பாட்டுக் குழு

தலைவர்

பொங்கலூர் திரு.நா. பழனிச்சாமி, ஊரகத் தொழில் துறைஅமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு.க. செல்வராஜ்

மேயர், திருப்பூர் மாநகராட்சி

கோவை திரு.மு. இராமநாதன்

திரு.ஏ. சக்திவேல்,

அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம்

திரு.பழனி ஜி. பெரியசாமி

ஒருங்கிணைப்பாளர்கள்

டாக்டர்.பு. உமாநாத், இ.ஆ.ப.,

மாவட்ட ஆட்சியர், கோவை

திரு. அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப.,

மாநகராட்சி ஆணையர், கோவை

உறுப்பினர்கள்

டாக்டர் சி. சுவாமிநாதன்,

துணை வேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்

டாக்டர்  செந்தில்குமார், இ.ஆ.ப.,

இயக்குநர், நகராட்சிகள் நிர்வாகத் துறை

டாக்டர் எஸ். பழனிச்சாமி,

பதிவாளர், அண்ணா பல்கலைக் கழகம், கோவை

டாக்டர் பி. திருமாவளவன்

பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்

டாக்டர் கார்த்திகேயன்,

பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

திரு குண்டன், உதகமண்டலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

திரு மார்ட்டின், கோவை

டாக்டர்.சு. பிரபாகரன், சிறப்புப் பணி அலுவலர், கோவை

மாநாட்டு அரங்க அமைப்புக் குழு

தலைவர்

வீரபாண்டி திரு. எஸ். ஆறுமுகம், வேளாண்மைத் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு.கே.ஆர். பெரியகருப்பன், அறநிலையத் துறை அமைச்சர்

திரு.கே. ராமச்சந்திரன், காதித் துறை அமைச்சர்

திரு. பொன் குமார்

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு.எஸ். ராமசுந்தரம், இ.ஆ.ப., முதன்மைச் செயலர்

டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சியர், கோவை

உறுப்பினர்கள்

கோவை இரா. மோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

திரு. கருணாகரன், பி.இ., தலைமைப் பொறியாளர்

டாக்டர் பி. முருகேச பூபதி, துணை வேந்தர்

டாக்டர் சு. பிரபாகரன், சிறப்புப் பணி அலுவலர், கோவை

மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு

தலைவர்

திரு பரிதி இளம்வழுதி, செய்தித் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு தா.மோ. அன்பரசன்

தொழிலாளர் நலத் துறை அமைச்சர்

திரு.என். ராம், தி இந்து

திரு. கலாநிதிமாறன், சன் தொலைக்காட்சி குழுமம்

திரு. ராமச்சந்திர ஆதித்தன், மாலைமுரசு

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு. பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர்

திரு க. முத்துசாமி, இ.ஆ.ப., அரசுச் செயலாளர்

உறுப்பினர்கள்

திரு. வைத்தியநாதன், தினமணி

நக்கீரன் திரு. கோபால்

திரு. ரமேஷ் பிரபா

டாக்டர் பு. உமாநாத்

மாவட்ட ஆட்சியர், கோவை

டாக்டர் சு. பிரபாகரன், சிறப்புப் பணி அலுவலர், கோவை

கோவை மாநகர மேம்பாட்டுக் குழு

தலைவர்

திரு. வெங்கடாசலம், மேயர், கோவை மாநகராட்சி

துணைத் தலைவர்

திரு. கார்த்திக், துணை மேயர், கோவை

ஒருங்கிணைப்பாளர்கள்

டாக்டர்.பு. உமாநாத், இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சியர், கோவை

திரு. அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர், கோவை

உறுப்பினர்கள்

திரு. வீரகோபால், கோவை

டாக்டர். நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப, அரசு செயலாளர்

திருமதி எம். விஜயலட்சுமி, நகராட்சிகள் நிர்வாகத் துறை, திருப்பூர்

திரு.ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை

டாக்டர் சு. பிரபாகரன், சிறப்புப்பணி அலுவலர், கோவை

மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு

தலைவர்

திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

துணைத் தலைவர்

டாக்டர்   காஞ்சனா கமலநாதன், கிருஷ்ணகிரி

ஒருங்கிணைப்பாளர்கள்

டாக்டர் காயத்ரி தேவி,சட்டமன்ற உறுப்பினர்

திரு.வி.கே. சுப்புராஜ், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்

டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம்,கே.ஜி. மருத்துவமனை

டாக்டர் ஜெம். பழனிவேலு

உறுப்பினர்கள்

டாக்டர் பு.  உமாநாத், இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை

டாக்டர் ச. வினாயகம், இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை

டாக்டர் வ. குமரன், முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, கோவை

டாக்டர் பெ. நந்தகோபாலசாமி, இயக்குநர், ஊரக நலப் பணிகள் துறை

டாக்டர் சு. இளங்கோ, இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து  துறை

டாக்டர் பழனிச்சாமி, கோவை மெடிக்கல் சென்டர்

மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக்குழு

தலைவர்

திரு. மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு.கோ.சி. மணி, கூட்டுறவுத் துறை அமைச்சர்

திரு.சுப தங்கவேலன், குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர்

திரு.எஸ்.என்.எம். உபயதுல்லா, வணிக வரித் துறை அமைச்சர்

திரு.டி.பி.எம். மைதீன்கான், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

திருமதி கீதா ஜீவன், சமூகநலத் துறை அமைச்சர்

திரு.கே.பி.பி. சாமி, மீன்வளத் துறை அமைச்சர்

திரு.உ. மதிவாணன், பால்வளத் துறை அமைச்சர்

பிற குழுக்களின் தலைவராக உள்ள அமைச்சர்களும் இதில் இடம் பெறுவார்கள்.

உறுப்பினர்கள்

திரு.சி. ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர்

திரு.து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்

தலைமைச் செயலர்

பொது மேலாளர் (தென்னக இரயில்வே)

முதன்மைச் செயலர் (உள்துறை)

முதன்மைச் செயலர் (நிதி)

இயக்குநர், காவல் துறை

தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்

முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை

காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு)

துணை வேந்தர்,  பாரதியார் பல்கலைக்கழகம்

செயலர் (பொதுத் துறை)

செயலர் (சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை)

செயலர் (த. வ.அ. நி. மற்றும் செய்தித் துறை)

செயலர் (போக்குவரத்துத் துறை)

செயலர் (நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை)

மண்டல இயக்குநர், இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சென்னை

ஒருங்கிணைப்பாளர்கள்

தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

மாவட்ட ஆட்சியர், கோவை

போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு

தலைவர்

திரு.மு.பெ. சாமிநாதன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

துணைத் தலைவர்கள்

திரு.சி. கோவிந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்

திரு.கே. சுப்பராயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

திரு.க.ரா. சுப்பையன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு. மச்சேந்திரநாதன், இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை ஆணையர்

டாக்டர் பு.உமாநாத், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், கோவை

உறுப்பினர்கள்

திரு. அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. செயலர், போக்குவரத்துத் துறை

திரு. விஜயகுமாரசாமி, இ.கா.ப. துணை ஆணையர் (பொ), போக்குவரத்துத்துறை, கோவை

திருமதி. என். காமினி, இ.கா.ப. துணை ஆணையர், போக்குவரத்து (மாநகர காவல் துறை)

டாக்டர் பி. திருமாவளவன், பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்

டாக்டர் அ. கார்த்திகேயன், பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்

டாக்டர் சு. பிரபாகரன், சிறப்புப்பணி அலுவலர், கோவை

பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு

தலைவர்

திரு. கே. எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப., தலைமைச் செயலாளர்

துணைத் தலைவர்கள்

திருமதி எஸ். மாலதி, இ.ஆ.ப., முதன்மைச் செயலர், உள்துறை

திரு.கே.பி. ஜெயின், இ.கா.ப., காவல் துறை இயக்குநர்

திரு.கே. நடராஜ், இ.கா.ப., இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

ஒருங்கிணைப்பாளர்கள்

திரு. கே. ராதாகிருஷ்ணன், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு)

திரு ஆர். பால்சாமி, இணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

உறுப்பினர்கள்

திரு.ஜாபர் சேட், இ.கா.ப., காவல் துறைத் தலைவர் (நுண்ணறிவுப் பிரிவு)

திரு. பிரமோத் குமார், இ.கா.ப., காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம்

திரு. சிவனாண்டி, இ.கா.ப., கோவை மாநகர காவல்துறை ஆணையர்

டாக்டர் பு.உமாநாத், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், கோவை

திருமதி பாலநாகதேவி, இ.கா.ப., காவல் துறைத் துணைத் தலைவர், கோவை

திரு.ஆர்.ஜி. ஜெயகாந்தன், துணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,

கோவை மண்டலம்

ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு

தலைவர்

டாக்டர் சி. சுவாமிநாதன், துணைவேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்

துணைத் தலைவர்

டாக்டர் மன்னர் ஜவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை

ஒருங்கிணைப்பாளர்கள்

பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன், சென்னை

டாக்டர் பி. திருமாவளவன், பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்

உறுப்பினர்

டாக்டர் ஆ. கார்த்திகேயன், பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்

முழுவதுமாக அரசியலாக்கப்படும் செம்மொழி மாநாடு!

ஏப்ரல் 4, 2010

முழுவதுமாக அரசியலாக்கப்படும் செம்மொழி மாநாடு!

சிந்து-சமவெளி ஆராய்ச்சி ஆரம்பத்திலிருந்தே சரித்திர ஆதாரமற்ற ஆரிய-திராவிட இனவாதங்களிடையேச் சிக்கி, சமீபத்தில் விடுபட்டு உலகளவில், அந்த மாயையை விலக்கி, கட்டுக்கதை என அறிவித்து ஒதுக்கிவிட்டனர்.

இருப்பினும், தமிழகத்தில் மட்டும், சரித்திரத்திற்கு சிறிதும் மதிப்பளிக்காமல், தமக்கேயுரிய பிடிவாத “ஆரிய-திராவிட” இனக்கோட்பாடுகள், சித்தாந்தக்கள், கருதுகோள்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருவது வேடிக்கையே.

இதில் ஐராவதத்தின் இரட்டை வேடம் நன்றாகவேப் புலப்படுகிறது.

அஸ்கோ பர்ப்போலாவின் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலைபொறுத்து அமையும்.


Asko-parpola-gets-award-from-Karunanidhi

Asko-parpola-gets-award-from-Karunanidhi

aariya-thiraavita inavaaththa

செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி – முதல் பரிசு ரூ.​ 1 லட்சம்!

பிப்ரவரி 26, 2010

செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி – முதல் பரிசு ரூ.​ 1 லட்சம்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி உலகம் தழுவிய அளவில் பிரமாண்ட கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெல்வோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படவுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான,​​ பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும்,​​ உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கவியரங்கம்,​​ கருத்தரங்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி,​​ உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட உள்ளது.​ இதற்காக உலக அளவில் விளம்பரம் செய்யப்படும்.​ போட்டி தலைப்பு குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.

முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.​ 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும்,​​ மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும்,​​ ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை,​​ கட்டுரை,​​ பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன.​ மாநில அளவிலான போட்டியை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும்,​​ 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும்,​​ 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் பொன்முடி.