Archive for the ‘நீரா ராடியா’ Category

குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு!

ஜூன் 27, 2010

குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு!

கருணாநிதி முன்னிலையில், குலுங்கும் கோவையில் அறிவிப்பு,

எல்லோருமே நமிதா, குஷ்பு, என்ற நினைப்பில் இருந்தது

அந்த கிழங்களின், காமக்கவிகளின், வாலிகளின் விரசங்கள், விசனங்கள், கிரக்கங்கள், மூச்சுகள், பெருமூச்சுகள்……..இவற்றைத்தான் வெளிப்படுத்தின.

பட்டிமன்றம் என்ற பெயரில், பெருசுகள் விவச்தையில்லாமல் பேசிக்கொண்டிருந்தன.

இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார்.

பாவம், துண்டு யாருக் கொடுக்கவில்லை போலும்.

அவர் பேசுகையில், “”கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், “ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா’ போட்டு பேசுவர். கலைஞரும் “அண்ணா, அண்ணா’ என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான்.

எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ்.

கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர்.

விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்.

தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள்.

எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான்.

செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,” என்றார்.

ராஜாவைத் தொடர்ந்து கனிமொழி: இனி நீரா ராடியா தான் பாக்கி!

மே 18, 2010
செம்மொழி மாநாட்டு பணி; கனிமொழி திடீர் ஆய்வு: பந்தல் உயரத்தை அதிகப்படுத்த அறிவுறுத்தல்
மே 18,2010,00:00  IST
http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18393

ராஜாவைத் தொடர்ந்து கனிமொழி: இனி நீரா ராடியா தான் பாக்கி!

Latest indian and world political news information

கோவை: கோவையில் நேற்று எம்.பி., கனிமொழி உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுப் பந்தல், ஆய்வரங்கங்கள் அமைக்கும் பணியை, திடீர் ஆய்வு செய்தார்.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழு செயலராக எம்.பி., கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கோவைக்கு வந்த அவர் மாநாட்டுப் பந்தல், ஆய்வரங்கம் அமைக்கும் பணி, அலங்கார வாகன ஊர்திகள் தயாரிக்கும் பணியினை திடீர் ஆய்வு செய்தார்.விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, செம்மொழி மாநாட்டுப் பந்தல் அமைக்கும் இடத்துக்குச் சென்ற அவர், அங்கே பணிகள் குறித்து கேட்டறிந்தார். கலெக்டர் உமாநாத், பந்தல் அமைப்பாளர் சிவா ஆகியோர், பந்தலின் அளவு, இருக்கை வசதிகள் மற்றும் நுழைவாயில்கள் குறித்து விளக்கினர்.

மாநாட்டு அரங்கிலுள்ள மேடையின் உயரம் 5 அடி என்றும், அதற்கு மேல் 18 அடி உயரத்தில் பந்தல் அமைக்கப்படுவதாக பந்தல் அமைப்பாளர் விளக்கினார். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள், வெகுதூரத்தில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக, பந்தலின் மொத்த உயரத்தை 24 அடியாக உயர்த்துமாறு கனிமொழி அறிவுறுத்தினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது: மாநாட்டு அரங்கிற்குள் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும், இடம் இல்லாமல் மாநாட்டு அரங்கிற்கு வெளியே நிற்பவர்களும் மேடையில் இருக்கும் தலைவர்கள் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் 14 அடி அகலம், 8 அடி உயரம் கொண்ட 4 எல்.இ.டி.க்களும், 42 இன்ச் அளவிலான 100 பிளாஸ்மா ‘டிவி’க்கள் வைக்கப்பட உள்ளன. உயர் தொழில்நுட்ப மின்னணு ஒலி பெருக்கிகள் வைப்பதால், மேடையில் பேசுவது மிகவும் துல்லியாக கேட்கும்,” என்றார்.பந்தல் அமைக்கும் பணியைப் பார்வையிட்டபின், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ‘ஏ, பி, சி’ மற்றும் ‘டி’ அறைகளில் நடக்கும் ஆய்வரங்கப் பணிகளை, கனிமொழி பார்வையிட்டார். பணியின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த அவர், ஒலி பெருக்கிகளின் துல்லியம் குறித்து கேட்டறிந்தார்.செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக, தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகன ஊர்திகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் நடக்கவுள்ளது. அதற்கான வாகனங்கள் அமைக்கும் பணி, வ.உ.சி., மைதானத்தில் நடந்து வருகிறது.இதற்காக அங்கு போடப்பட்டுள்ள பந்தலைப் பார்வையிட்ட கனிமொழி, மைதானத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை இடம் மாற்றி, மைதானத்தின் வலது புறம், இடது புறங்களில் அமைக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

ஊர்வலம் செல்லும் வழியில், முதல்வர், அமைச்சர்கள், தமிழறிஞர்கள், முக்கிய விருந்தினர்கள், அலங்கார ஊர்திகளைப் பார்வையிடும் வகையில் 5 இடங்களில் மேடை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களையும் கனிமொழி பார்த்து, சில ஆலோசனைகளை கலெக்டரிடம் தெரிவித்தார். மாநாட்டு சிறப்புப் பணி அலுவலர் பிரபாகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சம்பத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், மின் பிரிவு செயற்பொறியாளர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரை நாளில் அதிரடி ஆய்வு: செம்மொழி மாநாட்டுப் பணிகளை எம்.பி.கனிமொழி ஆய்வு செய்ய வருவது பற்றி, இங்குள்ள உயரதிகாரிகளுக்கே நேற்று முன் தினம் வரை தெரியாது. நேற்று காலையில் திடீரென கோவைக்கு வருவதாக சென்னையில் இருந்து தகவல் தெரிவித்த கனிமொழி, குறிப்பிட்ட சில அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.நேற்று காலையில் 9.50 மணிக்கு விமானத்தில் சென்னையிலிருந்து வந்த அவர், ஆய்வை முடித்துக் கொண்டு மதியம் 1.20 மணிக்கு விமானம் மூலமாக சென்னை திரும்பி விட்டார். அரைநாளில் அதிரடியாக தனது ஆய்வை முடித்தார் கனிமொழி.