தமிழகத்தின் செவ்வியல் காலம் 6ம் நூற்றாண்டிற்கு முன்புதான் இருந்ததா?

தமிழகத்தின் செவ்வியல் காலம் 6ம் நூற்றாண்டிற்கு முன்புதான் இருந்ததா?

தமிழின் பொற்காலமெனக் கருதப்படும் செவ்வியல் காலத் (கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட) தமிழ் இலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்துறை ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதென முடிவுசெய்யப்பட்டது”.

இவ்வாறு, செம்மொழி செய்திமடல் 1 2006 மார்ச்சு-2008 மே, ப.2 கூறுகிறது. அதாவது அதன் ஆசிரியர் பேராசிரியர் க. இராமசாமி குறிப்பிடுகின்றார்.

மேலும் முதன்மைத் திட்டப்பணிகள் என்பதில் (ப.11), “அனைத்துத் திட்டப்பணிகளும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய செம்மொழி தமிழை மையப்படுத்தியே அமைய வேண்டும் எனத் தீர்மானித்துச் செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில், உடனடியாகச் செயற்படுத்த வேண்டிய பத்து முதன்மைத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன“, என்றும் கூறப்பட்டுள்ளது.

பிறகு, தொன்மை காலம் தொடங்கிக் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன:

தொல்காப்பியம்

1

பத்துப்பாட்டு

10

எட்டுத்தொகை

8

பதினெண் கீழ்கணக்கு

18

சிலப்பதிகாரம்

1

மணிமேகலை

1

முத்தொள்ளாயிரம்

1

இறையனார் களவியல்

1

மொத்தம்

41

இப்படி குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போதுதான், ஏதோ இதில் குழப்பம் இருக்கிறது என்று தெரிகிறது. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டது என்று இக்கால ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். இறையனார் களவியலைப் பற்றியக் கருத்துகள் நிச்சயமாக திராவிடத்திற்கு ஏற்புடையதல்ல, அந்நிலையில் இவ்வாறு பிரித்திருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஏதோ பார்ப்பனர் தாம் அப்படி “இறையனார் களவியலுக்கு” பாயிரம் எழுதி வழக்கில் விட்டான் என்று அவதூரு பேசுவர் தமிழ்-திராவிட வெறியர்கள். ஆனால், அதே நேரத்தில் மூன்று சங்கங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள், இத்தனை மன்னர்கள் ஆண்டார்கள் என்று எண்ணிக்கைகள் வேறு…………….இப்படியுள்ளது தமிழர்களது போலித்தனமான சரித்திர ஆராய்ச்சி!

ஆழ்வார்கள், நாயன்மார்களின் இலக்கியங்களை விலக்கும் போக்குத்தான் இதில் தெரிகின்றது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “தமிழகத்தின் செவ்வியல் காலம் 6ம் நூற்றாண்டிற்கு முன்புதான் இருந்ததா?”

 1. metro boy Says:

  பதிவர் அந்த ஆறாம் நூற்றாண்டு கோடு ஏன் கிழிக்கப் பட்டது என காரணம் அறிவாரா? ஒருவேளை,
  தமிழின் “இரண்டாம் பொற்காலத்தில்” (அதாவது வாழும் வள்ளுவரின் இரண்டாம் பிறவியின் போது) இப்போது ஒரு முடிவு எடுக்கப் பட்டால், பார்ப்பனர்கள் தமிழில் வட மொழிச் சொற்கள் கலந்து அதன் தனித்தன்மையை ஊறு நேரும வண்ணம், நடக்கத் துவங்கியது ஆறாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாமா?

  • vedaprakash Says:

   “திராவிட மொழி குடும்பம்” என மொழியியல் ரீதியில் கால்டுவெல்லால் “கண்டுபிடிக்க’ப்பட்டது, “இனரீதியில்” மாற்றியது ஒரு மாபெரும் சரிட்ஹ்திரப் பிஷை மற்றும் குற்றமாகும், ஏனெனில் அதற்காக எந்ததாஅதாரங்களும் இல்லை. மேலாக இப்பொழுது, உலகத்தில் எல்லொருமே, முக்கியமாக சரித்திர ஆசிரியர்கள் மற்றும் தொல்பபொருள் ஆய்வாளர்கள், ஒப்புக்கொண்டு, அத்தகைய “இனவாத கட்டுக்கதைகள்” மறுக்கப்பட்டுள்ளன. ஆனால், திராவிட சித்தாந்திகள் அதனைப் பிடித்துக் கொண்டு, இன்றும் “ஆரிய-திராவிட இன” விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குதான் இந்த பார்ப்பனர்-எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு எல்லாம். தொல்காபியத்திலேயே வடமொழிச் சொற்களை த்அமிழில் எப்படி ஏற்பது, எடுத்தாளுவது, தகவமைப்பது……பற்றி முறைகள் விலக்கப்பட்டுள்ளன. ஆக “பார்ப்பனீயமயமாக்கப்பட்ட” தொல்காப்பியத்தை “செவ்வியல் காலத்தில்” வைக்கப்பட்டு, “சங்க இலக்கியத்தை” விட தொன்மையானது எனும்போது, எல்லாமே போலித்தனமாகிறது. பனபரனார், தொல்காப்பியத்திற்கு உரையெழுதியபோது, பாயிரத்தில்,”வடநூல் உணர்ந்தார்க்கன்றி தமிழ் இயல்பு விளங்காது” என்று விளக்கம் கொடுத்துள்ளபோது, எப்படி தமிழ் கற்பவர்கள், தமிழ் பற்றி பேசுபவர்கள் அதையெல்லாம் மறக்க/மறைக்க முடியும்?

 2. metro boy Says:

  இன்னொன்று: திருக்குறள் இதில் சேராதா?
  கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் வளையாபதி , குண்டலகேசி எந்த காலத்தை சேர்ந்தவையோ

  • vedaprakash Says:

   இதற்கான பின்னணியை அறிந்து கொள்ளவும் மற்ற விளக்கத்திற்கும், “திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்”, என்ற என்னுடைய கட்டுரையை இங்கு கணவும்:
   http://rationalisterrorism.wordpress.com/2010/02/11/திருக்குறளை-எதிர்க்கும்/

   திருவள்ளுவருக்கு 31 BCE என்ற காலத்தைக் கொடுத்துள்ளபோது, எப்படி சேராமல் இருக்கமுடியும்?

   ஐம்பெரும்காப்பியங்களில் ஜைனமதத் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மேலும் அதன் பின்னணியில் அல்லது வேர்களில் இந்துமதம் இருப்பதாலும் அதை எதிர்க்கிறார்கள்.

   சிலப்பதிக்காரம் – 1-3ம் நூற்றாண்டுகள்
   மணிமேகலை – 1-3ம் நூற்றாண்டுகள்
   சீவகசிந்தாமணி – 9-10 நூற்றாண்டுகள்
   வளையாபதி – 12ம் நூற்றாண்டுக்கு மேல்
   குண்டலகேசி – 12ம் நூற்றாண்டுக்கு மேல்

 3. Kuppusamy Says:

  இது நிச்சயமாக தமிழ் தெரியாத கபோதி பயல்கள் வேலைதான்.

  தமிழ் இலக்கியம் படித்த எந்த மனிதனுக்கும் தெரியும் நல்ல செம்மொழி அல்லது மக்கள் மொழி அல்லது பொது மக்கள் மொழியாக தமிழ் எப்பொழுது வழக்கில் வந்தது, பட்டி-தொட்டிகளில் எல்லாம் தமிழ் பாடல்கள் முழங்கின என்பதெல்லாம்.

  ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலியோதான் தமிழை சாதாரண மக்களுக்கு எடுத்துச் சென்றர்கள். தமிழை பரப்பினார்கள்.

  ஆகையால் 6ம் நூற்றாண்டு வரை என்று கோடு போடுவது மடத்தனமானது. அப்படி கோடு போட்டு “செம்மொழி” என்றெல்லாம் இந்த கூட்டம் பிதற்றினால் அதைவிட கொடுமை தமிழுக்கு வேறு யாரும் செய்துவிட முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: