தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள் முதலியோருக்கு சரித்திர ஞானம் வேண்டும்

தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள் முதலியோருக்கு சரித்திர ஞானம் வேண்டும்

பொதுவாக இக்கால தமிழ் தெரிந்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், புலவர்கள், முதலியோருக்கு தமிழ் நன்றாகத்தெரியுமேத் தவிர, சரித்திர ஞானம், ஆராய்ச்சி நெறிமுறை முதலியவைப் பற்றி தெரிவதில்லை அல்லது தெரிந்தும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மணிக்ககணக்காக தமிழில் மக்களை மகிழ்விக்க அடைமொழிகளோடு பேசுவார்கள். ஆனால் மொத்தத்தில் என்ன பேசினார்கள் என்று பார்த்தால் மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கும். காலம், முக்கியமாக சரித்திர காலக்கணக்கீட்டுமுறை முதலியவைப் பற்றியும் கவலைப் படமாட்டார்கள்.

ஒருவர் முன்னே சொன்னதை திரும்பத் திரும்ப சொல்லியே காலத்தை ஓட்டிவிடுவர். தொடரந்து ஒரு குறிப்பிட்டப் பேச்சாளரின் பேச்சை ஒன்றிற்கு மேலான இடத்தில் கேட்க நேர்ந்தால், அவர் முதல் மேடையில் என்ன பேசினாரோ, அதையே அடுத்த மேடையிலும் பேசுகிறார் என்பதனை அறியலாம். குறிப்பிட்ட பாடல்கள், சொற்றொடர்கள், அடுக்கு மொழிகள், பழமொழிகள், விட்டுகள் / ஜோக்குகள், பாடல்கள் முதலியவற்றை திரும்பத் திரும்ப கூறுவது, பாடுவது, சொல்வது என சுலபமாகக் கவனிக்கலாம்.

பழக்கதையை விடுத்து, என்ன புதியதாக என்ன பேசுகிறார்கள், சொல்கிறர்கள் என்று பார்த்தாலும், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.  பேசுவதெல்லாம் வீண்பேச்சு / வாய் சவடால் (rhetoric), சொற்விளையாட்டு / வார்த்தை ஜாலம் (gimmick), தேவையற்ற அடுக்குமொழி (wordy / verbose) என்பதை எடைபோடலாம்.

விஞ்ஞான தொழிற்நுட்ப அறிவு, காலத்தினால் மாறிவரும் அறிவியல் உண்மைகள் முதலியவற்றை அறியாமல் பேசுவதும், இக்கால மாணவர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது எனலாம், இருப்பினும், ஏதோ பெரியவர், முக்கியமானவர், அரசியல் தலைவர், எம். எல். ஏ / எம்.பி, அமைச்சர் என்பதாக் பொறுத்துப் போகிறர்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், சில நேரங்களில் அவையிலிருந்து எழுந்து சென்றாலோ, இவரது போரடிக்கும் பேச்சை கவனிக்காமல், பேசிக்கொண்டிருந்தால், அவருக்கு கோபம் வேறு வரும்.

உலகத்தில் மற்ற நாடுகளில் கி. மு / கி. பி என்று குறிப்பிடுவதை நிறுத்து விட்டார்கள். அதற்கு பதிலாக CE = Current Era மற்றும் BCE = Before Current Era என்றுதான் உபயோகப் படுத்துகிறார்கள். இதை தமிழில் நடப்பு சகாப்தம் = நச மற்றும் நடப்பு சகாப்தத்திற்கு முன்பு = நசமு என்று குறிப்பிடவேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்த வழக்கம் இன்னும் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

8 பதில்கள் to “தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள் முதலியோருக்கு சரித்திர ஞானம் வேண்டும்”

 1. Kuppusamy Says:

  அவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்ல.

  இனிமேல் அவர்கள் கமு, கபி என்று பேச ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்.

  அதாவது “கருணாநிதிக்கு முன்”, மற்றும் “கருணாநிதிக்குப் பின்” என்று ஒரு பாட்டு பாடிவிடுவார்கள்.

  பிறகு, தமிழ் சரித்திரமே இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகும்.

 2. Babu Says:

  I am searching for VILAMBI NAGANAR brief life history…. Can you pls help me…

 3. tamil selvam Says:

  vilambi naganar istory

 4. tamil selvam Says:

  vilambi naganar life history

 5. Ashok.S Says:

  dont loose taking….. please explain viambi naganar history if you have

  • vedaprakash Says:

   ஏதோ சொல்ல வருகிறீர்கள்!

   ஆனால், புரியவில்லையே?

   ஒன்று தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்.

   பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.

 6. ravi Says:

  விளம்பி நாகனார் வாழ்க்கை வரலாறு தேடிக்கொண்டிருக்கிறேன் தரமுடியுமா? நான்மணிகடிகை ஆசிரியர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: