உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்!
முதலமைச்சர் கலைஞர் பேட்டி

முதலமைச்சர் கலைஞர் தலைமையில், தலைமைச் செயலகத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள், அறிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் (சென்னை, 17.2.2010)

சென்னை, பிப். 18_ கோவையில் நடைபெறவிருக்-கும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடக்கஇருக்கும் வளர்ச்சிப் பணிகளும், மாநாட்டுக்கான செயல் பணிகளும் குறித்து முதல-மைச்சர் கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் நிறைவுற்றதும் முதல்வர் கலைஞர் அவர்களைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் கலைஞர் அவர்கள் கூறியதாவது:-

முதலமைச்சர் கலைஞர்:- கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 முதல் 27ஆம் நாள் வரை 5 நாள்கள் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி _ தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பல்-வேறு குழுக்களின் சார்பாகவும், அந்தக் குழுக்-களின் தலைவர்கள் சார்பாகவும் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, இதுவரையில் நடை-பெற்-றுள்ள செயல்கள் குறித்தும், மேலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடை-பெற்றது.

ஆய்வரங்கத்தில் பங்கேற்க வலைத்தளம், மின்-அஞ்சல், அஞ்சல் மற்றும் நேரில் என்று இந்தியா உள்பட 49 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 356 பேர் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். நாடுகளை விவரமாகச் சொல்ல வேண்டுமேயானால்_

அமெரிக்க அய்க்கிய நாடுகள் (யு.எஸ்.ஏ.)_விலி-ருந்து பதிவு செய்திருப்பவர்கள் 44 பேர்.

அமெரிக்கன் சமோவா_1, அயர்லாந்து_3, ஆஸ்திரியா_1, ஆஸ்திரேலியா_15, யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து)_18, இத்தாலி_1, இந்தோ-னேஷியா_2, இலங்கை_91, ஈரான்_1, எத்தியோப்பியா_1, அய்க்கிய அரபுக் குடியேற்ற நாடுகள்_5, அய்ல் ஆப் மேன்_1, ஓமன்_4, கசகிஸ்தான்_1, கத்தார்_1, கனடா _23, காங்கோ_1, கிரீஸ்_1, கென்யா_2, சவுதி அரே-பியா_6, சிங்கப்பூர்_90, சீனா_4, சுவிட்சர்லாந்து_2, செர்பியா_1, செஷல்ஸ் -_1, டுனீசியா_1, டென்மார்க்_1, டோங்கா_1, தென் கொரியா_3, நார்வே_2, நியூசி-லாந்து_3, நெதர்லாந்து_3, நைஜீரியா_1, பக்ரைன் -_2, பார்படாஸ்_1, பிரான்ஸ்_7, பிரிட்டிஷ் இந்திய ஓஷன் டெரிடரி_1, பின்லாந்து_1, புரூணை_1, போலந்து_1, மலேசியா _181, மொரிசியஸ்_9, வங்காள தேசம்_1, ஜப்பான்_3, ஜெர்மனி _9, ஹாங்காங்_1, பிற நாடுகள்_2, இந்தியா_6 ஆயிரத்து 800. ஒட்டு-மொத்தமாகப் பதிவு செய்திருப்பவர்கள் 7 ஆயிரத்து 356 பேர்.

பதிவு செய்து கொண்டுள்ளவர்களிடம் இருந்து, 6 ஆயிரத்து 86 ஆய்வுச் சுருக்கங்கள் வரப் பெற்-றுள்ளன. ஆய்வுச் சுருக்கங்கள் முன்னரே வகைப்படுத்தப்பட்ட-வாறு, 55 பொருண்மைகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பொருண்மைக்கு மூவர் என்கிற வகையில் பேரா-சிரியப் பெருமக்களையும், அறிஞர்களையும் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, 6 ஆயிரத்து 86 ஆய்வுச் சுருக்கங்களும் நுண்ணாய்வு செய்யப்பட்டன. நுண்ணாய்வாளர்கள் அளித்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதத்தக்-கோர் தெரிவு செய்யப்பட்டு, கட்டுரைகளை எழுது-மாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளும் கடிதங்கள் அனுப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1500 பேர் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்-திட அனுமதிக்கலாமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இணைய மாநாடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 75 தொழில்-நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. கட்டுரைச் சுருக்கங்கள் பெற கடைசி நாள் மார்ச் 15 ஆகும். இதில் மொத்தம் 350 பேர் கலந்துகொள்-வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் இணைய மாநாட்டிலும் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இணையத்தமிழ் அறிஞர்களும், பேராளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, கல்லூரிகளுக்கான போட்டிகள் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்-கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபரங்கள் பின்வருமாறு:-

நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு _59 கோடியே 85 இலட்சம் ரூபாய்,

கோவையில் செம்மொழிப் பூங்கா அமைத்திட_20 கோடி ரூபாய்,

மக்கள் தொடர்பு மற்றும் விளம்பர பணிகளுக்கு _10 கோடி ரூபாய்,

மின்கட்டமைப்பு வசதிகளுக்கு _56 கோடி ரூபாய்,

கோவை மாநகரில் சாலைகள் மேம்பாடு, புதிய தெரு விளக்குகள் அமைத்தல், நடைமேடைகள் அமைத்தல், பேருந்து நிழற்குடை அமைத்தல் மற்றும் புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு _104 கோடியே 40 இலட்சம் ரூபாய்,

கொடிசியா உள் அரங்கம் அமைக்கும் பணிகளுக்கு _9 கோடியே 30 இலட்சம் ரூபாய்,

மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளுக்கு _7 கோடியே 71 இலட்சம் ரூபாய்,

ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு-களுக்கு _5 கோடியே 85 இலட்சம் ரூபாய்,

கண்காட்சி அமைக்கும் பணிகளுக்கு_ 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்,

விருந்தோம்பல் செலவுகளுக்கு _4 கோடியே 95 இலட்சம் ரூபாய்,

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மேம்-பாட்டுப் பணிகளுக்கு _4 கோடியே 27 இலட்சம் ரூபாய்,

மருத்துவ வசதி, சிறப்பு மலர், போக்குவரத்து வசதி முதலிய பணிகளுக்கு _10 கோடியே 85 இலட்சம் ரூபாய்,

பொதுவான செலவுகளுக்கு _5 கோடியே 22 இலட்சம் ரூபாய்.

ஆக மொத்தம் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்-கின்றன.

கேள்வி:- குழுக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன?

கலைஞர்:- ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கான பணிகளை எவ்வாறு ஆற்றி வருகிறோம் என்று சொன்-னார்கள். அவர்களின் பணி திருப்திகரமாக இருக்கிறது.

கேள்வி:- டெல்லியில் பிரதமரை அ.தி.மு.க. நாடா-ளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கரும்பு விலை சம்மந்தமாக கோரிக்கை வைத்திருக்கி-றார்களே?

கலைஞர்:- அவர்களுக்கு அது கரும்பான செய்தி-யாக இருக்கலாம். எங்களுக்கு அதைப்பற்றிய விவரம் தெரியவில்லை.

கேள்வி:- மாநாட்டுச் செலவிற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். மேலும் நிதி ஒதுக்கப்படுமா?

கலைஞர்:- தேவைப்பட்டால் மேற்கொண்டு ஒப்புதலோடு செலவிடப்படும்.

கேள்வி:- மாநாட்டிற்கு யார் யார் வருகிறார்கள்?

கலைஞர்:- தொடக்க விழாவிற்கு குடியரசு தலைவர் வருகிறார். மற்றும் மொழியியல் அறி-ஞர்-கள், அனைத்துக் கட்சியினர் அழைக்கப்-படு-வார்கள்.

கேள்வி:- வெளிநாட்டினர் வருவதற்கான விசா போன்ற அனுமதி மத்திய அரசிடம் பெறப்பட்டு விட்டதா?

கலைஞர்:- அதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலாளர் செய்து வருகிறார்.

கேள்வி:– புதிய சட்டமன்ற வளாகப் பணிகள் எந்த அளவில் உள்ளன?

கலைஞர்:- மார்ச் 13 ஆம் தேதி தொடக்க விழா நடைபெறுகின்ற அளவிற்கு -பிரதமர் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் கலந்து கொள்கின்ற அளவிற்கு சட்டமன்ற பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

கேள்வி:- என்கவுண்டர் கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்களே?

கலைஞர்:- அவர்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன்.

கேள்வி:- காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்களே?

கலைஞர்:- முழு விவரங்களும் தெரியாமல் பதில் சொல்ல இயலாது.

அரிசி, பருப்பு, காய்கறி …………..முதலியவற்றின் விலைவாசி ஏற்றத்திற்குக் கூட இவர்கள் இத்தனை தடவை உட்கார்ந்து கொண்டு, விவாத்த்து, திட்டம் போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் செம்மொழி என்று சொல்லிக் கொண்டு, இப்படி உட்கார்ந்து பேசுவதும், லட்சக் கணக்கில் செலவு செய்து மதியம், இரவு என்று நன்றாக சாப்பிடுவதும், நல்ல வேடிக்கைதான்!

வாழ்க தமிழ், மன்னிக்கவும் செம்மொழி தமிழ்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

ஒரு பதில் to “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளர்ச்சிப் பணிகளும், செயல்பணிகளும்!”

 1. Kuppusamy Says:

  300 கோடி கிடைத்தாகி விட்டது. இனி பங்குபோடுவதுதானே வேலை? எனவே இனி செலனினங்கள் என்னென்ன என்று பார்த்து, அவ்வாறே செலவானது போலக் காட்டவேண்டியதுதான். அதற்கேற்றார் போல “வவுச்சர்கள்” – செலவினப் பட்டிகள் உருவாக்குவார்கள். அதற்கு “ரோடு போட” ஆரம்பித்து விட்டர்கள்!

  இந்த முழு நிகழ்ச்சியும் “கவர்” செய்யும் உரிமை “கலைஞ்சர்” அல்லது “சன்” டிவி குழுமத்திற்கு கொடுப்பார்கல்;

  அந்த ஜகத் காஸ்பர், கழிமொழி பட்டாளம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு மாலை நிகழ்ச்சிகளை “கவர்” செய்து விடிவார்கள்;

  ஆன்டோ பீட்டர் போன்ற “மென்மொருள்” வல்லுனர்கள் அவர்களுக்கேயுரிய முறையில் பணம் பண்ணி விடிவர்ர்கள்;

  போதா குறைக்கு மேல் நாட்டு பட்டாளம் வேறு; போக்குவரத்திற்கு விமான செலவும், ஸ்டர் ஹோட்டல்களில் ரூமும் கொடுப்பார்கள்; மாலையிலே கொண்டாட்டம்தான்;

  இன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: