இருண்டகாலம் செவ்வியல் காலமாகுமா?

இருண்டகாலம் செவ்வியல் காலமாகுமா?

சென்னையிலே செம்மொழி என்று செறுக்குடன் சரித்திரைத்தையே செறுப்போம் என்பதுபோல இறங்கியிருக்கும் தருணத்திலே உண்மை பகன்றாலும் பொல்லாப்புதான் வரும்.

செவ்வியிரண்டு இருந்தும் செவ்வியருமை பாராமல், செவ்விளகிப்போல செவ்வியமாக்கத் துடிக்கிறார்கள்.

இவர்களை செவ்வமுடியுமா, செவ்வியதாக்கமுடியுமா என்ற நேரத்தில்தான் செம்மொழிக்கே செவ்வியல் காலம் கொடுத்த சோகமானக் கதை அல்லது இருண்டகாலம் வருகிறது.

களப்பிரர் யார் என்று தெரியாது ஆனால் அவர்களை இருட்டடிப்புச் செய்தவர்கள் சைவர்கள் அல்லது இந்துக்கள்தாம்! களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள், அவர்கள் களப்பாளர் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு, அவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள், அவர்களின் தோற்றம், அவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் ஒன்றும் இல்லை அல்லது கிடைத்தில, எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது, என்றெல்லாம் பேசிவருகிறார்கள்.  சமணம், புத்தம் என்றவுடனே, ஊகத்துடன் அடிபோடுகிறார்கள், அவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது.  இருப்பினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்ததாம். அதாவது முன்பு களப்பிரர் காலம் இருண்டகாலம், அவர்கல் தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டார்கள் என்றெல்லாம் பாட்டு பாடியவர்கள், இப்படி மாற்றிப் பாடுகிறார்கள்.  பிறகு என்ன ஆதாராம்?

உடனே அவிழ்த்து விடுகிறார்கள், புது கதையை, “இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது“, இது மட்டும் தீர்மனமாக வருகிறது. அவர்களைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை, ………….தெரிகின்றது….என்றெல்லாம் ஆதாரங்களே இல்லாமல் குறிப்பிட்டுவிட்டு, இந்த விவரத்தை மட்டும், உறுதியாக “இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது” என்கிறார்கள்!

ஆதாரங்கள் இல்லாமல் இருந்தாலும் ஊகங்கள் மீதே நாங்கள் சரித்திரம் படைப்போம்: அதனால் இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. களப்பிரர்களின் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன [பாவம், சித்தர்களைப் போல]. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.

கதை மேல் கதை விடும் செவ்விளகிகளும், செவ்விண்டுகளும்: இவ்வாறு சில தகவல்கள் மீதாக சில ஊகங்கள் மீதாக பல கதைகள் அவிழ்த்துவிடும் கலையை இவர்கலிடம்தான் தெரிந்து கொள்ளவேண்டும்! அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது[மேற்கோள் தேவை]. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது [அப்படி போடு, அவ்வளவுதான் ஒன்றுமே தெரியாது என்று புர்ருடா விடுக்க் கொண்டு வந்தவர்கள் திடீரென்று இப்படி சொல்வது என்ன மாய்மாலமோ?].

விவரங்கள் இல்லாமல் இருந்தாலும் நாங்கள் விவகாரங்கள் செய்வோம்: களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.

யாருடைய கல்வெட்டை யாருக்கும் உபயோகப் படுத்தலாம்!: பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

முயற்சிகளும், சொல்லாடல்களும் சரித்திரமாகுமா? தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். வேறு சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது

“கலி” என்றால் களப்பிரர் ஆகிவிடுவார்களா? “கலி” என்றுள்ளதையெல்லாம் களப்பிரர் தாம் என்றால், கலித்தொகையும், அவர்களுடையதாகிவிடுமா? உண்மையில் “கலி” என்பது கலிகாலத்தைக் குறிப்பதாகும். கலியே இருண்டகாலம்தான், புராணங்களை நம்பினால்!

ஊகங்கள், அனுமானங்கள், உத்தேசங்கள், சுவையான சிந்தனைகள், கற்பனைகள், குத்துமதிப்பானவைகள், ………………………இவையெல்லாமே நமது செம்மொழியாளர்களுக்கு வெம்மிவருவதால், தமதிச்சைப்போல சொல்வதெல்லாம் ஆராய்ச்சிகளே, பேசுவதெல்லாம், ஆய்வுக்கட்டுரைகளே, எழுத ஆரம்பித்தாலோ Ph.D தான், கிடைக்காவிட்டாலும் “டாக்டர்”தாம்!

சரித்திரம் / வரலாறு, ஆதாரங்கள், என எதுவுமே இல்லாமல் இப்படி கதையடிப்பதால்தான் மேனாட்டு அறிஞர்கள் இவர்களைக் கேவலமாக நினைக்கின்றனர். சமயம் கிடைத்தால் ஜாலியாக இங்கு வந்து, இவர்களிடமே  சல்லாபித்துச் சென்றுவிடுவர். போதாகுறைக்கு இவர்கள் TA / DA எல்லாம் கொடுத்து அனுப்புவார்கள்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: