செம்மொழி உணவுக் கூடம் 6 ஏக்கரில் ஏற்பாடு, சாப்பிடத் தயாரா?

செம்மொழி மாநாடு: 6 ஏக்கரில் உணவுக் கூடம்!

கோவை, பிப். 25, 2010- உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு நடை-பெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்-தில் 6 ஏக்கரில் உணவுக் கூடம் அமைக்கப்படு-கிறது. தமிழறிஞர்கள், முக்கிய விருந்தினர்கள், அலுவலர்கள், பொது-மக்களுக்கு என தனித்-தனியே உணவுக் கூடங்-கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வரும் தமிழறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊர்வலத்-தில் பங்கேற்போர், கலை நிகழ்ச்சிகள் நடத்துவோ-ருக்கு உணவு வழங்கும் பணிகளை மேற்கொள்ள உணவுத் துறை அமைச்-சர் எ.வ.வேலு தலை-மையில் விருந்தோம்பல் குழு அமைக்கப்பட்-டுள்-ளது. இக்குழுவின் ஆலோ-சனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்-சியர் அலு-வலகத்தில் புதன்கிழமை நடை-பெற்றது. கூட்டத்-துக்கு, அமைச்சர் வேலு தலைமை வகித்தார்.

செம்மொழி மாநாட்-டின் ஆய்வரங்கம், பொது அரங்கம், துவக்க விழா, நிறைவு விழா நிகழ்ச்சி-களில் பங்கேற்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தேவைக்கேற்ப உணவுக் கூடங்கள் அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஊர்வலம் செல்லும் பகுதி-யில் சாலையோரங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க முடிவு செய்யப்-பட்டது.

உணவுக் கூடங்கள் அனைத்தும் ஒரே வடி-வமைப்பில் அமைக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். தங்கும் இட ஏற்பாட்டுக் குழு, போக்குவரத்துக் குழு-வுடன் கூட்டுக் கூட்-டத்தை நடத்த வேண்டும் என்று அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

விருந்தோம்பல் குழு-வுக்கான துணைக் குழுக்-களை அமைத்து ஒருங்கி-ணைப்பாளர்கள், உறுப்பி-னர்களைத் தேர்வு செய்ய வேண்டும். முக்கிய பிரமு-கர்கள் தங்கும் விடுதிகள், ஆய்வரங்கம், பொது அரங்க நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி உள்பட அனைத்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உணவு வழங்குவதற்கான பட்டி-யல் தயாரித்து தேவைக்கே ஏற்ப உணவுக் கூடங்கள் அமைக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்-களை அமைச்சர் வேலு கேட்டுக் கொண்டார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: