கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 11:03 [IST]

ஆட்டோ சங்கர் என்பவன் ஒரு பலான விபச்சாரத்தொழில் செய்தவன்,பல கொலைகலைச் செய்தவன், ……………..1988ல் இவனைப் பற்றி செய்தித் தாள்களில் அதிகமாக செய்திகால் வெளிவந்து கொண்டிருக்கும்.

அவனது லிஸ்டில் இருந்த விபச்சாரிகள் யார், யார்………..எந்தெந்த அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர், என்றெல்லாம் செய்திகள் வரும்.

குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டான்.

குற்றங்களில் துணை போன பலர் – அவனது தம்பி மோகன், மைத்துனன் எல்டின் என்கிற ஆல்பர்ட், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ……இருந்தனர்.

சாவதற்கு முன்பு, கிருத்துவன் ஆனான், ஆனால், ஏற்கெனவே கிருத்துவனந்தான் என்றும் சொல்லப் பட்டது! எப்படியாகிலும், கிருத்துவர்களும் அதில் புகழ் பெற்றனர்!

நெல்லை: கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வுக் கட்டுரை அனுப்பிய பாளை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிகள் ஆறு பேருக்கு மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி இலக்கிய ஆய்வு கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு கட்டுரை போட்டியில் பாளை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஆட்டோ செல்வராஜ், சூசை மரியான், கல்கி மோகன், அய்யங்கனி, கிருஷ்ணன், ரமேஷ், பங்கேற்றனர்.

ஆனல், எத்தனை தகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: இவர்கள் இலக்கிய ஆய்வு கட்டுரை எழுதி உலக தமிழ் செம்மொழி மாநாட்டு குழுவிக்கு கடந்த மார்ச்சில் அனுப்பி வைத்தனர். இவர்கள் அனுப்பிய கட்டுரை குறித்து பரிசீலனை நடந்தது. இதற்கிடையில் இவர்கள் 6 பேருக்கும் மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கை எண் குறிப்பிட்டு மாநாட்டு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைவர் அனுமதி பெற்று 6 பேரும் முந்தைய நாள் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் மாநாட்டில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்டோ சங்கரின் கூட்டாளி: ஆய்வு கட்டுரைகளை செம்மொழி மாநாட்டு குழுவிற்கு அனுப்பிய 6 பேரும் இலக்கிய அறிவு நிரம்பியவர்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்டோ செல்வராஜ் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை குற்றவாளி ஆட்டோ சங்கரின் கூட்டாளி ஆவார். இவர் பிஏ பட்டதாரி. ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இதேபோல கைதி, கல்கி மோகன் ஓவியங்கள் வரைவதில் நிபுணராம். ஆறுபேரும் சிறையில் நடக்கும் கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றவர்கள். தமிழக அளவில் இலக்கிய ஆர்வம் காரணமாக பாளை சிறைக்கைதிகளுக்கு மட்டுமே செம்மொழி மாநாட்டில் பங்கேற்க இத்தகைய அழைப்பு கிடைத்துள்ளது.

கொலைக்குற்றங்களை செய்துவிட்டு இப்படி இருப்பதென்ன? தேர்வு செய்யப்பட்ட 6 கைதிகளுக்கும் கூட்டங்கள், விழாக்களில் பேசுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அறிவுரைப்படி சிறை ஆசிரியர்கள் இருதய அரசு, செல்வராஜ் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கூடுதல் தேர்ச்சி, மாநில அளவி்ல் எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் இரு இடங்கள், 16 பேர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி, இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் 46 பேர் பங்கேற்பு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு என பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாளையங்கோட்டை சிறைச்சாலை, நல்ல போதனைகளைக் கொடுக்கும் சோலையாக மாறி வருவது உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான் [என்ன போதனைகளைக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை].

ஆமாம், ஏன் நளினி, முருகன்………………………….முதலியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவில்லை? அவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லையா?

பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீளும் போது, மற்றா சிறைகளின் பட்டியல் நீளாதா?

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!”

 1. vedaprakash Says:

  முதுநிலை கோவில் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்
  பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,01:52 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14010

  சென்னை : “கோவை செம்மொழி மாநாட்டில், தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வர்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ராமமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச்செயலர் நல்லத்தம்பி, ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முதுநிலை கோவில் பணியாளர்கள் குடும்பத்தினருடன் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வர். ஊதிய உயர்வு கேட்டு விரைவில் சென்னையில் பேரணி நடத்தப்படும். தற்போது வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 800 ரூபாய் மிகவும் குறைவாக இருக்கிறது.

  தற்கால விலைவாசிகளை கருத்தில் கொண்டு, கோவில் பணியாளர்களுக்கு அந்தந்த கோவில்களிலேயே பெறும் வகையில், ஒரு மாத அடிப்படை ஊதியத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு போலவே பணிக்கொடை வழங்க வேண்டும். தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: