ராஜாவைத் தொடர்ந்து கனிமொழி: இனி நீரா ராடியா தான் பாக்கி!

செம்மொழி மாநாட்டு பணி; கனிமொழி திடீர் ஆய்வு: பந்தல் உயரத்தை அதிகப்படுத்த அறிவுறுத்தல்
மே 18,2010,00:00  IST
http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18393

ராஜாவைத் தொடர்ந்து கனிமொழி: இனி நீரா ராடியா தான் பாக்கி!

Latest indian and world political news information

கோவை: கோவையில் நேற்று எம்.பி., கனிமொழி உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுப் பந்தல், ஆய்வரங்கங்கள் அமைக்கும் பணியை, திடீர் ஆய்வு செய்தார்.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழு செயலராக எம்.பி., கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கோவைக்கு வந்த அவர் மாநாட்டுப் பந்தல், ஆய்வரங்கம் அமைக்கும் பணி, அலங்கார வாகன ஊர்திகள் தயாரிக்கும் பணியினை திடீர் ஆய்வு செய்தார்.விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, செம்மொழி மாநாட்டுப் பந்தல் அமைக்கும் இடத்துக்குச் சென்ற அவர், அங்கே பணிகள் குறித்து கேட்டறிந்தார். கலெக்டர் உமாநாத், பந்தல் அமைப்பாளர் சிவா ஆகியோர், பந்தலின் அளவு, இருக்கை வசதிகள் மற்றும் நுழைவாயில்கள் குறித்து விளக்கினர்.

மாநாட்டு அரங்கிலுள்ள மேடையின் உயரம் 5 அடி என்றும், அதற்கு மேல் 18 அடி உயரத்தில் பந்தல் அமைக்கப்படுவதாக பந்தல் அமைப்பாளர் விளக்கினார். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள், வெகுதூரத்தில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக, பந்தலின் மொத்த உயரத்தை 24 அடியாக உயர்த்துமாறு கனிமொழி அறிவுறுத்தினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது: மாநாட்டு அரங்கிற்குள் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும், இடம் இல்லாமல் மாநாட்டு அரங்கிற்கு வெளியே நிற்பவர்களும் மேடையில் இருக்கும் தலைவர்கள் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் 14 அடி அகலம், 8 அடி உயரம் கொண்ட 4 எல்.இ.டி.க்களும், 42 இன்ச் அளவிலான 100 பிளாஸ்மா ‘டிவி’க்கள் வைக்கப்பட உள்ளன. உயர் தொழில்நுட்ப மின்னணு ஒலி பெருக்கிகள் வைப்பதால், மேடையில் பேசுவது மிகவும் துல்லியாக கேட்கும்,” என்றார்.பந்தல் அமைக்கும் பணியைப் பார்வையிட்டபின், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ‘ஏ, பி, சி’ மற்றும் ‘டி’ அறைகளில் நடக்கும் ஆய்வரங்கப் பணிகளை, கனிமொழி பார்வையிட்டார். பணியின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த அவர், ஒலி பெருக்கிகளின் துல்லியம் குறித்து கேட்டறிந்தார்.செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக, தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகன ஊர்திகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் நடக்கவுள்ளது. அதற்கான வாகனங்கள் அமைக்கும் பணி, வ.உ.சி., மைதானத்தில் நடந்து வருகிறது.இதற்காக அங்கு போடப்பட்டுள்ள பந்தலைப் பார்வையிட்ட கனிமொழி, மைதானத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை இடம் மாற்றி, மைதானத்தின் வலது புறம், இடது புறங்களில் அமைக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

ஊர்வலம் செல்லும் வழியில், முதல்வர், அமைச்சர்கள், தமிழறிஞர்கள், முக்கிய விருந்தினர்கள், அலங்கார ஊர்திகளைப் பார்வையிடும் வகையில் 5 இடங்களில் மேடை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களையும் கனிமொழி பார்த்து, சில ஆலோசனைகளை கலெக்டரிடம் தெரிவித்தார். மாநாட்டு சிறப்புப் பணி அலுவலர் பிரபாகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சம்பத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், மின் பிரிவு செயற்பொறியாளர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரை நாளில் அதிரடி ஆய்வு: செம்மொழி மாநாட்டுப் பணிகளை எம்.பி.கனிமொழி ஆய்வு செய்ய வருவது பற்றி, இங்குள்ள உயரதிகாரிகளுக்கே நேற்று முன் தினம் வரை தெரியாது. நேற்று காலையில் திடீரென கோவைக்கு வருவதாக சென்னையில் இருந்து தகவல் தெரிவித்த கனிமொழி, குறிப்பிட்ட சில அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.நேற்று காலையில் 9.50 மணிக்கு விமானத்தில் சென்னையிலிருந்து வந்த அவர், ஆய்வை முடித்துக் கொண்டு மதியம் 1.20 மணிக்கு விமானம் மூலமாக சென்னை திரும்பி விட்டார். அரைநாளில் அதிரடியாக தனது ஆய்வை முடித்தார் கனிமொழி.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “ராஜாவைத் தொடர்ந்து கனிமொழி: இனி நீரா ராடியா தான் பாக்கி!”

 1. vedaprakash Says:

  Raja serves notice on The Pioneer

  PNS | New Delhi, Tuesday, May 18, 2010 , Pioneer

  Union Telecom Minister A Raja, his wife MA Parameswari and their minor daughter Mayuri Raja, represented by her mother, acting through Chennai-based legal firm P Wilson Associates, have served a legal notice on The Pioneer categorically denying the series of reports published in this newspaper between December 6, 2008 and May 3, 2010 regarding irregularities in the allocation of 2G spectrum and related matters.

  Describing the reports as “highly derogatory, defamatory, misleading and baseless,” the notice alleges that the “false, frivolous, untenable” accusations against the Minister were aimed at defaming and bringing disrepute to Minister Raja’s image and thereby “eradicate and ruin” his political career. The notice further states that The Pioneer carried such reports repeatedly and they were “calculated, deliberate and done with mala fide intention”.

  According to the advocates, this proves that our conduct was “mischievous” and amounted to “something more than what a normal daily newspaper would do”.

  Demanding prominent publication of an apology to his three clients, the advocate has sought a sum of Rs 25 crore for his first client (the Minister) and Rs 15 crore for the other two clients, that is, Raja’s wife and daughter for dragging them into the matter by publishing their photograph.

  Editor’s Note: We acknowledge receipt of the notice and are consulting legal opinion with regard to the appropriate response at a suitable forum. As a publication which believes in fair play, we would have been happy to present the Minister’s side of the story had he sought a right to reply at any stage of the publication of this series of reports.
  http://www.dailypioneer.com/256693/Raja-serves-notice-on-The-Pioneer.html

 2. Tamilselvan Says:

  ஏனய்யா, அந்த குச்புவை, குஷ்புவை மறந்து விட்டீர்களே?

 3. vedaprakash Says:

  உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் படுகர் இன மக்களின் கலாசார நடனம் – மத்திய அமைச்சர் ஆ. இராசா தகவல்
  http://www.viduthalai.periyar.org.in/20100619/news31.html

  ஊட்டி, ஜூன் 19_- கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் படுகர் இன மக்களின் கலாச்சார நடனம் இடம் பெறுகிறது என்று மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்-புதுறை அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

  கோவையில் வருகிற 23- ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தொடங்கி வைக்கிறார்.

  23 ஆம் தேதி கோவை-யில் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும், நடனமும் நடைபெறு-கின்றன. இந்த நிகழ்ச்சி-யில் நீலகிரி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் இடம் பெறுகிறது.

  இதற்காக ஊட்டி இளைஞர் படுகர் அரங்-கில் படுகர் கலாசார நடன ஒத்திகை மற்றும் பயிற்சி நடைபெற்று வருகிறது. நீலகிரி இளை-ஞர் படுகர் சங்கத் தலை-வர் டி.குண்டன் தலை-மையில் படுகர் நடன பயிற்சியாளர்கள் தங்காடு மணிவண்ணன், புது-ஹட்டி மணிகண்டன் ஆகியோர் படுகர் இன ஆண்களுக்கும், பெண்க-ளுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

  இந்த படுகர் நடன ஒத்திகை மற்றும் பயிற்-சியை நேற்று மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்-சர் ஆ.இராசா, தமிழக கதர்வாரியத் துறை அமைச்சர் கா.ராமச்சந்-திரன், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் ஆகியார் நேரில் பார்த்-தனர்.

  ஒத்திகைக்கு பிறகு மத்திய அமைச்சர் ஆ.-இராசா செய்தியாளர்-களிடம் கூறியதாவது:-

  நீலகிரி படுகர் இன மக்களின் படுகர் கலாச்-சார நடனம் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இடம் பெறுகிறது.

  இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடன குழுவினர் தமிழக கதர்வாரியதுறை அமைச்சர் கா.ராமச்சந்-திரன் தலைமையில் கலந்து கொள்கிறார்கள்.

  இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: