உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=20468

சென்னை: கோவையில், வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதில், ஆய்வரங்க நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகின்றனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதையடுத்து, மாநாட்டு ஏற்பாடுகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு குழுக்களின் தலைவர்கள், குழுக்கள் சார்ந்த பணிகளின் ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். மாநாட்டின் ஒரு அம்சமாக, ஐந்து நாட்களும் வெவ்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

24-06-2010 (வியாழன்): வரும் 24ம் தேதி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தொல்காப்பியர் அரங்கில் ஆய்வரங்கு நிகழ்ச்சி துவக்க விழா நடக்கிறது. முதல்வர் கருணாநிதி, ஆய்வரங்கை துவக்கி வைத்து சிறப்பு மலரை பெற்றுக்கொண்டு பேசுகிறார். சிறப்பு மலரை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு, கா.சிவத்தம்பி தலைமை வகிக்கிறார்.

 • ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்ப்போலா, வில் ஸ்வீட்மேன், கிறிஸ்டினா முரு, கந்தையா, மாரிமுத்து, திண்ணப்பன், திருமலைச்செட்டி, அலெக்சாண்டர் துபியான்ஸ்கி முன்னிலை வகிக்கின்றனர்.
 • முன்னாள் துணைவேந்தர்கள் வா.செ.குழந்தைசாமி, ஆனந்தகிருட்டிணன் மற்றும் கிரிகோரி ஜேம்ஸ், உல்ரிக் நிக்லாஸ் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
 • சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொற்கோ வரவேற்கிறார்.
 • முன்னாள் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் நன்றி கூறுகிறார்.பிற்பகல் 3.30 மணிக்கு,
 • க.ப.அறவாணன் தலைமையில், “உலக நாடுகளில் தமிழும் தமிழரும்’ என்ற தலைப்பில் கலந்துரையரங்கமும்,
 • “உலகமயமாதல் சூழலில் தமிழ்’ என்ற தலைப்பில், நாகநாதன் தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

25-06-2010 (வெள்ளி): 25ம் தேதி காலை, பொருண்மை அரங்கில், “சிந்துவெளி எழுத்துச் சிக்கல்: திராவிடத் தீர்வு’ என்ற தலைப்பில் கலந்துரையரங்கம் நடக்கிறது. இதற்கு, கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் தலைமை வகிக்கிறார்.

 • பிற்பகலில், “தத்துவ உலகில் தமிழ்’ என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் தோத்தாத்திரி தலைமை வகிக்கிறார்.

27-06-2010 (சனி): இதேபோல், 27ம் தேதி தொல்காப்பியர் அரங்கில், “இன்றைய நோக்கில் தொல்காப்பியம்’ என்ற தலைப்பில் பொழிவரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு, பொற்கோ தலைமை வகிக்கிறார். இதே நாளில் மேலும் மூன்று நிகழ்ச்சிகள் பல்வேறு அரங்குகளில் நடக்கின்றன. இதற்காக, சம்பந்தப்பட்ட குழுக்களின் தலைவர்கள், விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

“தினமலர்’ ஆசிரியர் நிகழ்த்தும் உரை: ஆய்வரங்க நிகழ்ச்சியில், வரும் 26ம் தேதி பிற்பகல் 2 மணி முதல், 5 மணி வரை தொல்காப்பியர் அரங்கில், “சங்ககாலம் – அண்மைக்கால ஆய்வு நிலைகள்’ என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் நடக்கிறது. இதற்கு, ஜார்ஜ் ஹார்ட் தலைமை வகிக்கிறார்.

 • “மொழி நோக்கு’ என்ற பார்வையில் பொற்கோ, “பொருளிலக்கண நோக்கு’ என்ற பார்வையில் அ.அ.மணவாளன்,
 • “இலக்கிய நோக்கு’ என்ற பார்வையில் சோ.ந.கந்தசாமி,
 • “வரலாற்றியல் நோக்கு’ என்ற பார்வையில் சா.சம்பகலட்சுமி உரையாற்றுகின்றனர்.
 • மேலும், “கல்வெட்டியல் நோக்கு’ என்ற பார்வையில், இரா.நாகசாமி,
 • “தொல்லியியல் நோக்கு’ என்ற பார்வையில், எ.சுப்பராயலு,
 • “நாணயவியல் நோக்கு’ என்ற பார்வையில் “தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி,
 • “அயல்நாட்டு ஆவண நோக்கு’ என்ற பார்வையில் ப.சண்முகம் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
Advertisements

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: