கொலைகாரர்கள், கிறுக்குகள், வயதானவர்கள், குழப்பவாதிகள் இவர்கள் எல்லோரும் மாநாட்டில் கலந்து கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?

கொலைகாரர்கள், கிறுக்குகள், வயதானவர்கள், குழப்பவாதிகள் இவர்கள் எல்லோரும் மாநாட்டில் கலந்து கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?

திருவள்ளுவரை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு, இதோ உதாரணங்கள். ஆங்கிலத்தில் “ஜிம்மிக்” என்பார்கள், அதாவது விளம்பரத்திற்க்காக, இப்படி விசித்திரமான, வேடிக்கையான வேலைகளை எல்லாம் செய்வது. இதில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளவர்கள் செய்கிறார்களா அல்லது தமது பெயர் வரவேண்டும் என்ற நோக்கில் செய்கிறார்களா என்று பார்த்தால், திருவள்ளுவரை வைத்துக் கொண்டு தாம் புகழ் பெறவேண்டும் என்ற நோக்குதான் தெரிகின்றது.

ஆனால், அதே நேரத்தில், திருவள்ளுவரை, திருக்குறளை மற்றவர்களும், இதே மாதிரி, தமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: ஷேக் மைதீன் என்பவர், திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறி, நூற்றுக்கணக்கானோரிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு பெற்று ஏமாற்றினார்.  இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை. அதாவது, திருவள்ளுவரை வைத்துக் கொண்டு, கருணாநிதி, கணபதிஸ்தபதி முதலியோர்தாம் வியாபாரம் செய்யவேண்டும் என்பதில்லை, ஷேக் மைதீனும் மோசடி செய்து கோடிகளை அள்ளலாம்!

முகமது அலி ஜின்னா, திருக்குறள் ஆராய்ச்சிற்கு பணம் பெற்றுள்ளார்: ஷேக் மைதீன் இப்படியென்றால், இன்னொரு முகமது அலி ஜின்னா, செம்மொழி ஆராய்ச்சி கழகத்திலிருந்து ஆராய்ச்சி செய்ய பணத்தைப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாது, திருக்குற்ளை, திருவள்ளுவரை ஆராய்ச்சி என்ற போர்வையில் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள், தூஷித்திருக்கிறார்கள்

அதையும் இந்த உற்சாகமுள்ள இளைஞர்கள் அறிந்து கொள்ளவேண்டும், அத்தகைய எத்ரிகளை இனங்கண்டுகொண்டு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், சித்தாந்த ரீதியில் அவர்களை எதிர்த்துப் போராடவும் வேண்டியுள்ளது.

செம்மொழி மாநாட்டையொட்டி, சாக்பீசில் தான் உருவாக்கிய 133 மில்லி மீட்டர் உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையுடன் கோவையைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் (நன்றி – தினமலர் 23-06-2010).

செம்மொழி மாநாட்டில் வாய்ப்பு கேட்டு வள்ளுவர் வேடமிட்டு போராடியவர் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19944

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2010,23:25 IST

சென்னை : செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தன்னை நிராகரித்ததை எதிர்த்து, திருவள்ளுவர் வேடமிட்டு உண்ணாவிரதம் இருந்தவரை போலீசார் தடுத்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம், கிரீப் பேட்டை, சாய்நகர் 2வது தெருவை சேர்ந்த திருமூர்த்தி மகன் முரளி (27). சென்னை, லயோலா கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கின்னஸ் சாதனைக்காக பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறார். ஏற்கனவே 72 மணி நேரம் தொடர் பேச்சு, 60 மணி நேரம் தொடர்ந்து நடனம், 112 மணிநேரம் தொடர்ந்து பாடுதல், 15 நிமிடங்களில் 15 வேடங்களில் வந்து அசத்துதல் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளார். இவர் நேற்று காலை 11 மணியளவில், சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை எதிரில் திருவள்ளுவர் வேடமணிந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடம் சென்று, அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்த முடியாதென்று கூறி, கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த மாதம் 28ம் தேதி சென்னை அறிவாலயத்தில் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களுக்கும் நடன வடிவில் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், முரளியை பாராட்டிய அவர், செம்மொழி மாநாட்டில் இந்த திறமையை காட்டலாமே என்று யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, முரளி தமிழக கலை பண்பாட்டுத்துறை அதிகாரி மணி என்பவரை தொடர்பு கொள்வதற்காக பல முறை சென்றும் முடியவில்லை. இறுதியில், அங்குள்ள அதிகாரிகள் செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான இறுதி பட்டியல் வந்துவிட்டதாகவும், இனி கலந்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

திருவள்ளுவர் உருவத்தில் திருக்குறள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23992

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2010,00:36 IST

கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, திருவள்ளுவர் உருவத்தில், 1,330 திருக்குறளை எழுதியுள்ளார், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த துளசி. நான்கரை அடி உயரமும், 133 செ.மீ., அகலமும் கொண்ட தாளில், திருவள்ளுவரின் உருவில், தலை முதல் கால் வரை திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு அதிகாரத்திற்குரிய 10 குறள்கள் எழுதப்பட்டிருக்கும். துளசி, இந்தி டியூஷன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியை. தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

துளசி கூறியதாவது: தமிழ் மீதுள்ள பற்றால், 3.5 செ.மீ., அகலம், 4.5 செ.மீ., உயரம் கொண்ட சிறிய திருக்குறள் புத்தகத்தை தயாரித்துள்ளேன். இது, 133 பக்கங்களை கொண்டது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அதிகாரம்; அதில், 10 குறள்கள் இடம் பெற்றிருக்கும். தவிர, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு நூலை, படம் வரைந்து அதில் எழுதியுள்ளேன். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வரைந்து, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் எழுதியுள்ளேன். தொடர்ந்து தமிழ் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்த, பல்வேறு சாதனைகள் செய்ய முயற்சித்

22 ஆயிரம் சதுரடி; 2200 மாணவர்கள் பிரமாண்ட திருவள்ளுவர் உருவம்http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23979

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2010,00:10 IST

சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 22 ஆயிரம் சதுரடியில் 2,200 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, திருவள்ளுவரின் பிரமாண்டமான தோற்றத்தை உருவாக்கினர். சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேசன் பள்ளியில், நடந்த இந்த சாதனையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி மைதானத்தில் திருவள்ளுவரின் முகமூடி அணிந்து, “செம்மொழியாம் தமிழ் மொழி’ எனும் வாசகத்தை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி நடந்தது.இதுதவிர, ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் – சிலம்பு, மணிமேகலை – இடையணி (ஒட்டியானம்), சீவகசிந்தாமணி – மணிமாலை, வளையாபதி – வளையல், குண்டலகேசி-குண்டலம் என ஐந்து மாணவியர் ஆபரணங்களை அணிந்து வந்து அசத்தினர். பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐந்திணையை மையப்படுத்தி முறையே, குறவர்,ஆயர், உழவர், மீனவர், கொள்ளையர் வேடமணிந்து, தமிழ் விழாவைக் கொண்டாடினர். தமிழின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த கண்காட்சியும் நடந்தது.

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 11:03 [IST]

ஆட்டோ சங்கர் என்பவன் ஒரு பலான விபச்சாரத்தொழில் செய்தவன்,பல கொலைகலைச் செய்தவன், ……………..1988ல் இவனைப் பற்றி செய்தித் தாள்களில் அதிகமாக செய்திகால் வெளிவந்து கொண்டிருக்கும்.

அவனது லிஸ்டில் இருந்த விபச்சாரிகள் யார், யார்………..எந்தெந்த அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர், என்றெல்லாம் செய்திகள் வரும்.

குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டான்.

குற்றங்களில் துணை போன பலர் – அவனது தம்பி மோகன், மைத்துனன் எல்டின் என்கிற ஆல்பர்ட், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ……இருந்தனர்.

சாவதற்கு முன்பு, கிருத்துவன் ஆனான், ஆனால், ஏற்கெனவே கிருத்துவனந்தான் என்றும் சொல்லப் பட்டது! எப்படியாகிலும், கிருத்துவர்களும் அதில் புகழ் பெற்றனர்!

நெல்லை: கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வுக் கட்டுரை அனுப்பிய பாளை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிகள் ஆறு பேருக்கு மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி இலக்கிய ஆய்வு கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு கட்டுரை போட்டியில் பாளை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஆட்டோ செல்வராஜ், சூசை மரியான், கல்கி மோகன், அய்யங்கனி, கிருஷ்ணன், ரமேஷ், பங்கேற்றனர்.

ஆனல், எத்தனை தகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: இவர்கள் இலக்கிய ஆய்வு கட்டுரை எழுதி உலக தமிழ் செம்மொழி மாநாட்டு குழுவிக்கு கடந்த மார்ச்சில் அனுப்பி வைத்தனர். இவர்கள் அனுப்பிய கட்டுரை குறித்து பரிசீலனை நடந்தது. இதற்கிடையில் இவர்கள் 6 பேருக்கும் மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கை எண் குறிப்பிட்டு மாநாட்டு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைவர் அனுமதி பெற்று 6 பேரும் முந்தைய நாள் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் மாநாட்டில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்டோ சங்கரின் கூட்டாளி: ஆய்வு கட்டுரைகளை செம்மொழி மாநாட்டு குழுவிற்கு அனுப்பிய 6 பேரும் இலக்கிய அறிவு நிரம்பியவர்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்டோ செல்வராஜ் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை குற்றவாளி ஆட்டோ சங்கரின் கூட்டாளி ஆவார். இவர் பிஏ பட்டதாரி. ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இதேபோல கைதி, கல்கி மோகன் ஓவியங்கள் வரைவதில் நிபுணராம். ஆறுபேரும் சிறையில் நடக்கும் கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றவர்கள். தமிழக அளவில் இலக்கிய ஆர்வம் காரணமாக பாளை சிறைக்கைதிகளுக்கு மட்டுமே செம்மொழி மாநாட்டில் பங்கேற்க இத்தகைய அழைப்பு கிடைத்துள்ளது.

கொலைக்குற்றங்களை செய்துவிட்டு இப்படி இருப்பதென்ன? தேர்வு செய்யப்பட்ட 6 கைதிகளுக்கும் கூட்டங்கள், விழாக்களில் பேசுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அறிவுரைப்படி சிறை ஆசிரியர்கள் இருதய அரசு, செல்வராஜ் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கூடுதல் தேர்ச்சி, மாநில அளவி்ல் எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் இரு இடங்கள், 16 பேர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி, இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் 46 பேர் பங்கேற்பு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு என பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாளையங்கோட்டை சிறைச்சாலை, நல்ல போதனைகளைக் கொடுக்கும் சோலையாக மாறி வருவது உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான் [என்ன போதனைகளைக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை].

ஆமாம், ஏன் நளினி, முருகன்………………………….முதலியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவில்லை? அவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லையா?

பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீளும் போது, மற்ற சிறைகளின் பட்டியல் நீளாதா?

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

ஒரு பதில் to “கொலைகாரர்கள், கிறுக்குகள், வயதானவர்கள், குழப்பவாதிகள் இவர்கள் எல்லோரும் மாநாட்டில் கலந்து கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?”

 1. vedaprakash Says:

  தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம்
  பதிவு செய்த நாள் : ஜூன் 22,2010,00:20 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23985

  கோவை : இணைப்புச்சாலைக்கு ஒருவர் இலவசமாய் இடம் கொடுக்கிறார்; ஒருவர், அரிசியில் லச்சினையை வரைகிறார்; ஒருவர், வானிலே பறந்து வள்ளுவர் சிலைக்கு மலர் தூவ புறப்பட்டிருக்கிறார். எல்லாமே, பொங்குகிற உற்சாகத்தோடு அரங்கேறும் செம்மொழி திருவிழாவுக்கு கொங்கு மக்களின் உணர்வுமயமான பங்களிப்புகள்.

  செம்மொழி மாநாட்டுக்காக வரும் தமிழர்களை தம் வீட்டு விருந்தாளிகளாக பாவித்து, புதிய முறையில் விருந்தோம்பல் செய்கிறார் தர்மலிங்கம் (74).ஓய்வு பெற்ற வேளாண் விஞ்ஞானியான இவர் செய்யப்போகும் உதவி, செம்மொழி மாநாட்டுக்கு கோவையில் வந்து தங்கும் நாட்களில் அவர்கள் தங்குகிற விடுதிகளில் உள்ள படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை இலவசமாக இயந்திர சலவை செய்து தருவதுதான். கோவையில் உலகத்தரத்துக்கு இணையாக சலவைத் தொழிலை அதிநவீன முறையில் எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறது இவரது “வி3 கிரியேட்டிவ் பினிஷர்ஸ்’ நிறுவனம். உலகிலுள்ள அதிநவீன சலவை இயந்திரங்களையும் வாங்கி அடுக்கியுள்ள இந்நிறுவனம், சமீபத்தில் விடுதிகளுக்கான சேவையையும் விரிவுபடுத்தியுள்ளது.

  இந்நிலையில்தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டது. தமிழ்ப் பற்று அதிகமுள்ள தர்மலிங்கம், மாநாட்டுக்கு பங்களிப்பாக ஏதாவது செய்ய நினைத்தபோது, உதித்த யோசனைதான் இந்த இலவச சலவை. ஜூன் 22 முதல் 26ம் தேதி வரை இந்த இலவச திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இலவச சேவையை விளம்பரப்படுத்த இவர் கையாண்டுள்ள விதத்திலும், இவரது தமிழ் நேசம் மிளிர்கிறது. திருக்குறள் அறத்துப்பாலில் வரும் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள அனைத்து குறள்களையும், அதற்குரிய தெளிவுரையையும் தந்து, இலவச திட்டத்தையும் அசத்தலாய் அச்சடித்திருக்கிறார். செம்மொழி மாநாட்டுக்கு வரும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்றோர் பெருமக்கள் அனைவரையும் வரவேற்று, விருந்து உபசரித்து, தமிழ்ப்பற்றை பதிவு செய்ய வேண்டியது, கோவை மக்களின் தலையாய கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக ஒரு படுக்கை விரிப்புக்கு வாசனை சலவைக்கு ஒன்பது ரூபாயும், தலையணை உறைக்கு ஐந்து ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், முற்றிலும் இலவசமாக வாசனை சலவை செய்து தருவதாக அறிவித்துள்ளது “வி3′ நிறுவனம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: