மண்டியிருக்கும் அழுக்கை, கசடை, அசுத்தத்தை மாநாடு நடத்தியா போக்குவது?

மண்டியிருக்கும் அழுக்கை, கசடை, அசுத்தத்தை மாநாடு நடத்தியா போக்குவது?

கோவையில் பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்: திறந்து வைத்தார் ஸ்டாலின்

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2010,23:37 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19956

கோவை;கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பளபளக்கும் பஸ் ஸ்டாண்டை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோவை – மேட்டுப்பாளையம் சாலையில், மாநகராட்சி சார்பில் ஏழு கோடி ரூபாய் செலவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் செல்லும் அனைத்து பஸ்களும் இன்று முதல் இங்கிருந்து இயக்கப்படவுள்ளன. தினமும் 119 அரசு பஸ், 33 தனியார் பஸ், 22 டவுன் பஸ்கள் இங்கிருந்து இயக்கும் வகையில் பஸ் ஸ்டாண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக, “ஏசி’ வசதியுடன் கூடிய ஓய்வு அறை, டிரைவர்களுக்கான ஓய்வு அறை, குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான தனி அறையுடன் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 25 பஸ்கள், 64 டூவீலர்கள், 20 ஆட்டோக்கள், முதல் தளத்தில் 18 கார்கள், 361 டூவீலர்கள் நிறுத்துவதற்கு இங்கு வசதி உள்ளது. தரை தளத்தில் பஸ் ஸ்டாண்டும், முதல் தளத்தில், “பார்க்கிங்’ வசதிகளும் அமைந்திருப்பது இந்த பஸ் ஸ்டாண்டின் சிறப்பம்சம்.டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர், அலுவலக அறைகள் இரண்டு, பொருள் பாதுகாப்பு அறை, ரெஸ்டாரென்ட், மணிக்கூண்டு, பத்திரிகை, பால் விற்பனைக்கடைகள் ஆறு, மின் அறை ஆகியவை தரை தளத்தில் உள்ளன.

அசிங்கங்களை, ஊழலை சென்ட் போட்டு மறைக்கும் வேலை: துர்நாற்றம் ஏற்படுத்தாத, “ஓசோனேட்டடு’ முறைப்படி நான்கு கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறெந்த பஸ் ஸ்டாண்டுக்கும் இல்லாத வகையில், “அல்பா பேனலிங்’ முறையில் அமைக்கப்பட்டுள்ள முகப்புப் பகுதி, “கார்ப்பரேட்’ நிறுவனங்களின் கட்டடம் போல வசீகரிக்கிறது. மின் சேமிப்பைக் கருத்தில் கொண்டு, 3.2 கிலோ வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் காற்றாலை, சூரியஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.காவல் கட்டுப்பாட்டு அறை, சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்க கேமரா வசதி, பயணிகளுக்கான நவீன இருக்கை வசதி, வண்ண மீன் காட்சியகம், பளபளக்கும் தரை தளம் என நம்மூர் பஸ் ஸ்டாண்ட்களுக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் ஜொலிக்கிறது.பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார்.

தமிழகமே மின்-பற்றாக்குறைகளில் அழும்போது, இந்த பகட்டுகள் தேவையா? அதன்பின், குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. பஸ் ஸ்டாண்டை பார்வையிட்ட துணை முதல்வர், சிறப்பாக இருப்பதாக பாராட்டுத் தெரிவித்தார்.””இந்த பஸ் ஸ்டாண்டுக்கு 50 கிலோ வாட்ஸ் மின்சாரம் தேவை; காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் 3.2 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இதைக் கொண்டு தினமும் 80 விளக்குகளை எரிய வைக்க முடியும். பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.””நாளையிலிருந்து (இன்று) இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் முகப்பின் மேற்புறம், “தமிழ் வாழ்க’ என்ற வாசகத்தை பெரிதாக வைக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,” என்று கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: