செம்மொழி மாநாட்டிற்கும், மதுக்கடைகளுக்கும் என்ன தொடர்பு?

செம்மொழி மாநாட்டிற்கும், மதுக்கடைகளுக்கும் என்ன தொடர்பு?

செம்மொழி மாநாடு; விடுப்பு எடுக்க மதுக்கடை ஊழியர்களுக்கு தடை! விற்பனையை இரட்டிப்பாக்க கட்டளை

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010,01:42 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22854

மதுக்கடைகள் செம்மொழி மாநாடு முடியும் வரை திறந்திருக்கவேண்டும்: கோவை : செம்மொழி மாநாடு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைப் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல், பணியில் இருக்க வேண்டுமென்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல்வேறு அமைப்பினரும், வக்கீல்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

மாநாட்டிற்காக அதிக சரக்கு வைத்திருக்கவேண்டும்: அதற்கு மாறாக, ஒவ்வொரு மதுக்கடையிலும் கூடுதலாக 20 லட்ச ரூபாய் சரக்கு இருப்பு வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, கடந்த மாதத்திலேயே மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு சிறப்புக் கூட்டத்தை கோவை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நடத்தியுள்ளார். அப்போதே, ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பெட்டிகளை இருப்பு வைக்க முடியும் என்று கேட்டு, ஜூன் 20க்குள் கடையில் இருப்பு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில், எக்கச்சக்கமான சரக்குகளை கடைகளில் நிரப்பி வருகிறது டாஸ்மாக் நிர்வாகம்.

செம்மொழி மாநாட்டுக்கு வரும் “குடிமகன்’களை மகிழ்ச்சிப்படுத்துவதாகவுள்ளன: எல்லாக் கடைகளிலும், ஊழியர்கள் நகரவே முடியாத அளவுக்கு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் போதாதென்று, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் என்று 14 கட்டளைகளை உடைய ஒரு சுற்றறிக்கையும் அனைத்து மதுக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் அனைத்தும், செம்மொழி மாநாட்டுக்கு வரும் “குடிமகன்’களை மகிழ்ச்சிப்படுத்துவதாகவுள்ளன. அதேநேரத்தில், மதுக்கடை ஊழியர்கள் அனைவரையும் வெறுப்பேற்றுவதாகவும், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனும் உள்ளன.

14 கட்டளைகளை உடைய ஒரு சுற்றறிக்கையும், மது விற்பனையும்: அனைத்து மது பானம் மற்றும் பீர் வகைகளை அடுக்கி வைத்து, தூசியில்லாமல் சுத்தமாக, நுகர்வோர் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். பணி நேரங்களில் கடை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது சுற்றறிக்கையிலுள்ள முக்கிய அறிவுரை. மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால், மின் வாரியத்திற்கு தொடர்பு கொண்டு மின் இணைப்புப் பெற உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடையில் சேகரமாகும் காலி அட்டைப் பெட்டிகளை ஒப்பந்ததாரர் வசம் உடனே ஒப்படைத்து, கடையில் அதிகமாக சரக்கு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது இன்னொரு கட்டளை.

சரக்கு, விற்பனை என்றிருப்பதால், விடுமுறை இல்லை: இவை எல்லாவற்றையும் விட, முக்கியமான உத்தரவு ஒன்றும் தரப்பட்டுள்ளது. ஜூன் 20லிருந்து ஜூன் 28 வரையிலும் விடுப்பு எதுவும் எடுக்காமல், தவறாது கடைப்பணியில் இருக்க வேண்டுமென்பதே அந்த உத்தரவு. இதன் மூலமாக, மதுக்கடைகளுக்கு விடுமுறையில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. செம்மொழி மாநாடுக்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கும் தமிழக முதல்வர், நாங்களும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் விடுமுறை அளிக்க வேண்டுமென்று குமுறுகின்றனர் கோவையிலுள்ள மதுக்கடைகளின் ஊழியர்கள்.

தமிழர்கள் எல்லோரும் குடிகாரர்களா அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் குடிகாரர்களா? மாநாட்டை முன்னிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டுமென்ற கோரிக்கையை அரசு புறக்கணித்திருப்பதோடு, செம்மொழி மாநாட்டு நாட்களில் கடை விற்பனையை இரட்டிப்பாக்க வேண்டுமென்று நிபந்தனையையும் விதித்திருப்பது, தமிழ் மாநாடு நடத்தப்பட்டதன் நோக்கத்தை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்காக இல்லாவிட்டாலும், தமிழர்கள் எல்லோரும் குடிகாரர்கள் என்று மற்றவர்கள் நினைப்பதைத் தவிர்க்கும் பொருட்டாவது, மாநாட்டு நாட்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாவிட்டால், சுழற்சி முறையில் ஏதாவது ஒரு நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளவாவது மதுக்கடை ஊழியர்களை அனுமதிக்க வேண்டும்.

தமிழுக்கும் மரியாதை! சரக்கிற்கும் மரியாதை!! தமிழுக்கும் மரியாதை! தமிழ் மாநாடுக்கு சரக்கு விற்பனையை அதிகரிக்கச் செய்து, தமிழர்களை போதைப் பாதைக்கு அழைத்துச் செல்லும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழ்ப்பற்றே இல்லையா என்று யாரும் கேட்கத் தேவையில்லை. மதுக்கடைகளுக்கு வந்த சுற்றறிக்கையில், அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும், “கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம், மதுபானக் கடை எண், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு’ என்று தமிழில் பெயர்ப்பலகை வைத்து, அதுபற்றி அறிக்கை அனுப்ப வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

2 பதில்கள் to “செம்மொழி மாநாட்டிற்கும், மதுக்கடைகளுக்கும் என்ன தொடர்பு?”

 1. vedaprakash Says:

  நடப்பது செம்மொழி மாநாடு; மது எதற்கு?
  பதிவு செய்த நாள் : ஜூன் 16,2010,23:24 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=20620

  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது மதுக்கடைகள் செயல்படுவதால், சாலை விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நேரிடும் அபாயம் உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிமாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி, “டாஸ்மாக்’ மதுக்கடைகளை ஐந்து நாட்கள் மூட, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

  கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்தும் பல லட்சம் மக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் வெளிமாவட்ட மக்கள் கோவை நகருக்கு வரவுள்ளதால், சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடவுள்ளனர்.மாநாடு முன்னிட்டு கோவையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என, அதன் ஊழியர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, மாநாடு நடக்கும் நாட்களில் கடைக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கூடுதலாக இருப்பு வைத்திருக்க, ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருவோர் மது கிடைக்காமல், “அவதி’ப்படக் கூடாது என்ற முன்னேற்பாட்டில் டாஸ்மாக் நிர்வாகம், இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் மது விற்பனையால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற போதிலும், அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாகவே இருக்கும்.

  வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் மது அருந்தி, போதையில் சாலை, ஓட்டல், வர்த்தக நிறுவனங்களில் தகராறில் ஈடுபடவும், பொது இடங்களில் அத்துமீறிய செயல்களில் இறங்கவும் வாய்ப்புகள் உள்ளன.டிரைவர்கள், போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது, விபத்து உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் அதிகமுள்ளன. வெளியூர்களில் இருந்து மாநாட்டுக்கு வருவோர் பாதுகாப்பாக, ஊருக்கு திரும்பிச் செல்வதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய தமிழக அரசு, கடைகளில் கூடுதல் எண்ணிக்கையில் மதுபானங்களை இருப்பு வைக்க உத்தரவிட்டிருப்பது, விந்தையானது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க கோவைக்கு வரும் வேளையில், “குடிமகன்’கள் போதையில் ஆங்காங்கு அத்துமீறலில் ஈடுபடுவதை கண்டால், நிச்சயம் முகம் சுழிப்பர்; தமிழ் கலாசாரத்தின் மீதான பார்வையும் வேறுவிதமாக அமைந்துவிடும்.

  இதனால், மாநாடு நடக்கும் நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.அப்போது தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நோக்கம் நிறைவேறும். மாநாடு நாட்களில் மதுக்கடைகளை மூடுவதற்கான வாய்ப்பு குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது, “இந்த யோசனை அரசுக்கு தெரியப்படுத்தப்படும்’ என்றார்.

  முடிவு யார் கையில்? போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:செம்மொழி மாநாட்டின் போது, மதுக்கடைகள் திறந்திருப்பது சட்டம் ஒழங்கு பிரச்னையை ஏற்படுத்தும். பல லட்சம் பேர் கூடும் இடத்தில், அனைவரையும் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். நகரின் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.தலைவர்களுக்கான பாதுகாப்பு, மாநாடு நிகழ்விட பாதுகாப்பு, அலங்கார வாகன அணிவகுப்புக்கான பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்கே போலீசாரின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கும். மாநாடு நடக்கும் வேளையில் குடிபோதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டுவோரால் விபத்து ஏற்படும்.அடிதடி தகராறு, ஈவ்-டீசிங் பிரச்னைகளும் தலைதூக்கும். மதுக்கடைகளை மூடுவதே சிறந்தது. எனினும், போலீஸ் தரப்பில் இருந்து அரசுக்கு யோசனை தெரிவிக்க வாய்ப்பில்லை. மாவட்ட நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

 2. K. Venkatraman Says:

  Most of the Tamils have become drunkards. As for as the dravidian politicuans and the modernday Tamils, it is open secret that they may come only second to Kralites in drinking.

  Moreover, the so-called foreign “Tamils / Tamil scholars” coming from other countries have been drunkards and they cannot spend evening / night time without booze.

  Long live semmozhi and sarayam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: