“சமயம் வளர்த்த தமிழ்” கருத்தரங்கு!

“சமயம் வளர்த்த தமிழ்” கருத்தரங்கு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26193

சமயம் வளர்த்த தமிழ்” என்ற போர்வையில் திட்டமிட்டே சமயத்தைக் கேவலப்படுத்தியிருக்கின்றனர்.

கத்தோலிக்கத்தைப் பற்றி, ஒரு ஆயர் வரவழைக்கப் பட்டுள்ளார், பிறகு மற்ற சமயங்களில் அதே மாதிரி நிலையில் உள்ளவர்க்லளைத்தானே அழைக்கப்படவேண்டும்?

சாந்தலிங்கசாமி, கருணாநிதியை வழிமொழிந்து பேசியுள்ளது வேடிக்கையான சமயம்!

சாரதா நம்பி ஆரூரான்,”உதயசூரியன் குறித்து முதலில் பாடியவர் நக்கீரர்”, என்பது கிறுக்குத்தனமானது. சைவம் என்ற தலைப்பில் பேசவந்து, சைவத்திற்கே இழுக்கேற்படுத்தியுள்ளது, மிகக் கேவலமானது.

“சமணத்தை தவிர்த்தால் தமிழ் இல்லை”, என்று ஸ்ரீபால் பேசியதில் மதவெரித்தான் மேலோங்கிக் காட்டுகிறது.

ஞானசுந்தரம், “தமிழும்,வைணவமும் வேறல்ல”, என்றுகூறும்போதும், அதே குறுகிய நோக்கம்தான் வெலிப்படுகிறது.

“கடல் வழியாக வந்தது இஸ்லாம்”, என்கிறார், காதர் பாய் தமக்கேயுரித்தான தோரணையில்!

ஆகமொத்தத்தில் “இந்துமதத்தை” இழிவு படுத்த கங்கணம் கட்டிக் கொண்டது, இவ்விதமாக வெளிப்பட்டுள்ளது.

இந்த அழகில், பார்ப்பான்களுக்கெல்லாம் இடம் கொடுத்து விட்டார்கள் என்ற ஓலங்கள் வேறு கேட்டாகிவிட்டது.

அரசியலாக்கப் பட்ட சமய கருத்தரங்கு: கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை “சமயம் வளர்த்த தமிழ்’ கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான மொழி தமிழ் மொழி.கொங்கு நாடு மிகச் சிறந்த பண்பாடு கொண்ட நாடு. தலை சிறந்த புலவர்கள், அறிஞர்கள், சமய வழியில் தமிழை வளர்த்தவர்கள் வாழ்ந்த நாடு. கொங்கு நாடு மலை மற்றும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சியை சேர்ந்தது. பழங்காலம் முதல் இப்பகுதி மக்கள் தெய்வபக்தியோடு வாழ்ந்தனர் என்பதை சமய நூல்கள் எடுத்துரைக்கிறது.

ஆறாம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை இலக்கிய காலம் ஆகும். இனி வரும் காலங்களில் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ், என்பதை வலியுறுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உதவும். இவ்வாறு, சாந்தலிங்க ராமசாமி அடிகள் பேசினார்.

பேராயர் சின்னப்பா பேசியதாவது (கத்தோலிக்கக் கிருத்துவம்): கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தொன்மை மற்றும் பழமை வாய்ந்த மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விழா. இதன் மூலம் உலகளவில் செம்மொழியாக திகழும் தமிழ் மொழி கொண்டுள்ள பெருமை குறித்து உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்த முடியும். திராவிட மொழிகளில் பழமையானது தமிழ் மொழி. மொழிகளில் வணிகத்துக்கு-ஆங்கிலம், இசைக்கு-கிரேக்கம், சட்டத்துக்கு-லத்தீன், தத்துவத்துக்கு-ஜெர்மன், காதலுக்கு- இத்தாலி என உள்ள நிலையில் தமிழ் மொழி-பக்தியை அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாறு, சின்னப்பா பேசினார்.

உதயசூரியன் குறித்து முதலில் பாடியவர் நக்கீரர்: “சைவம்’ குறித்து சாரதா நம்பி ஆரூரான் பேசுகையில், “”சைவ இலக்கியங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. உதயசூரியன் குறித்து முதலில் பாடியவர் நக்கீரர். சைவ இலக்கியங்கள் சிவனை அடிப்படையாக கொண்டது. நமச்சிவாயம் என்றால் அருள் பெறலாம்” என்றார்.

“சமணம்’ குறித்து ஸ்ரீபால் பேசுகையில்,””வாழ்க்கையில் அனைவரும் தங்களது ஆன்மவை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமணத்தை தவிர்த்தால் தமிழ் இல்லை. தமிழ்மொழியும், சமணமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. தொன்மையான மொழியாக திகழும் தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமணத்தின் பங்கு அதிகம் உள்ளது,” என்றார்.

“வைணவம்’ குறித்து பேராசிரியர் ஞானசுந்தரம் பேசுகையில்,”” மற்றவர்கள் படும் துன்பம் கண்டு கவலைப்படும் குணம் கொண்டவர்கள் வைணவர்கள். வைணவம் வளர்ச்சியில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் மற்றும் உரையாசிரியர்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது. தமிழும்,வைணவமும் வேறல்ல” என்றார்.

“கிறுத்துவம்’ குறித்து அமுதன் அடிகள்: “கிறுத்துவம்’ குறித்து அமுதன் அடிகள் பேசுகையில்”” செம்மொழியான தமிழ் மொழி வளர கிறுத்துவர்கள் அக்காலத்திலேயே பேச்சு தமிழ் இலக்கணத்தை வகுத்து செயல்பட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சியில் கிறுத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்றார் [அதென்ன “கிறுத்துவம்” என்பது தெரியவில்லை, ஒருவேளை, தாங்கள் “கிருத்துவத்தை” விடுத்து, புதியதாக “கிறுத்துவத்தை” பிடித்திருக்கிறோம் என்கிறார்களா?].

கடல் வழியாக வந்தது இஸ்லாம்: “இஸ்லாம்’ குறித்து பேராசிரியர் காதர் மொகிதீன் பேசுகையில்,”” கடல் வழியாக வந்தது இஸ்லாம். தமிழ் மொழியின் வளர்ச்சியில் இஸ்லாம் அறிஞர்கள் பங்களிப்பு உள்ளது. இயல், இசை, நாடகத்தில் துவங்கி சமயத்தமிழ், அறிவியல் தமிழ், கம்ப்யூட்டர் தமிழ் வரை தமிழ்மொழியின் வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு இன்றும் தொடர்கிறது,” என்றார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: