செம்மொழி மாநாடு ஜோக்ஸ், தமஷாக்கள், கூத்துகள்!

செம்மொழி மாநாடு ஜோக்ஸ், தமஷாக்கள், கூத்துகள்!

கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே வழங்கலாம்: மொழியால் வேறுபட்டிருந்தாலும் கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சாத்தனார் அரங்கில் நாணயவியல் தொடர்பாக ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர் பேசிய பின் உரைக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய கணபதி ஸ்தபதி தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்று தெரிவித்தார். கலைஞரின் புத்தகங்களை ஏற்கெனெவே அவசர-அவசரமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அடுத்த வருட நோபெல் இலக்கிய பரிசிற்கு பரிந்துரை செய்ய ஏற்கெனெவே முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. ஆகவே, கணபதி ஸ்தபதி கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டும். இவரி வேறு, நாங்கள்தாம் கடவுள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார், அதாவது, கடவுளையேப் படைப்பவர்கள் இவர்கள்தாம் என்று அகங்காரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

வாலியின் ஜோக்கான/ ஷோக்கானக் கவிதை:

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்‌னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/world-tamil-conference-vaali-jaya-sasikala.html

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று நடந்த கவியரங்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும், அவரது தோழி சசிகலாவையும் மாமிகள் என்று கூறி கடுமையாக சாடினார் கவிஞர் வாலி.

அதே போல துக்ளக் ஆசிரியர் சோவையும் தாக்கினார்.

செம்மொழி மாநாட்டில் நேற்று முதல் அரசியல் வாடை அதிகம் வீச ஆரம்பித்துவிட்டது. நேற்று நடந்த கருத்தரங்கு மற்றும் கவியரங்கில் பேசியவர்களும், கவிதை பாடியவர்களும், முதல்வரகருணாநிதியை வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.

இந் நிலையில் இன்று நடந்த கவியரங்கில், அதற்குத் தலைமை தாங்கிய கவிஞர் வாலி ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ‘மாமிகள்’ என்று சாடி கவிதை பாடினார். தனது கவிதையில் அவர் சொன்னது:

ஆலயம்தானே சாமிகளுக்கான இடம்; சாமிகள் மாறலாமா தடம்;
இதை உணர்ந்து இப்போது அறிவாலயத்தில் வந்து அமர்ந்து கொண்டன முத்துச்சாமி, சின்னச்சாமி எனும் இரு சாமிகள்;
இதற்கு காரணம் இரு மாமிகள்! என்றார்.

மேலும் தமிழ் மாநாட்டை விமர்சிக்கும் சோ ராமசாமியையும் தாக்கினார்.

அது அய்ய நோக்கு அல்ல.. ‘அய்யர் நோக்கு’:

அதேபோல சோவையும் கடுமையாக சாடினார் வாலி. சோ குறித்து அவர் கூறுகையில்,

”புணைந்தான் அய்யா ஒரு பாட்டு அது செம்மொழி மாநாட்டின் மையநோக்கு.
அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு

ஆனால் என் அருமை நண்பர் சோ’வுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யநோக்கு
அது அய்ய நோக்கு அல்ல.. ‘அய்யர் நோக்கு’
அதுவும் வையநோக்கையும் வையும் நோக்கு! என்றார்.

இலையை விட்டு வந்த பூ.. குஷ்பு:

தொடர்ந்து நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தது குறித்து வாலி தனது கவிதையில் கூறுகையில்,

‘பூ’ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது.
ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது
அப்பூ… எப்பூ?’’
புடவை கட்டிய பூ! என்றார் வாலி.

தமிழ்தான் கருணாநிதி , கருணாநிதி தான் தமிழ்: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, “தமிழ்தான் கருணாநிதி , கருணாநிதி தான் தமிழ். கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது”, என்று  கூறினார்.

தான்தோனி தலைவரை திடீரென்று தாயாக்கிய மாயம்: கருணாநிதி ஒரு தான்தோனி தலைவர் என்று சொல்லிவரும் திருமா, திடீரென்று அவரை தாயாக்கிவிட்டார். கருணாநிதியிடம் பால் குடிப்பேன் என்று அடம் பிடித்த திருமாக்குழந்தை!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: