தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை!

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26380

பாவம், எந்த அளவிற்கு நொந்து போயிருக்கிறார் என்பதனைப் பார்க்கவும்!

இப்படி பட்ட அரசியல் மாநாட்டில் வந்தால், பாட்டு, கூத்து, கேளிக்கை, முகஸ்துதி, தனிநபர் சிரப்புப் பாடுதல் என்றுதான் இருக்குமே தவிர, ஆராய்ச்சி, படிப்புத்திறன் வெளிப்பாடு, ஆரோக்யமான விவாதங்கள், கேள்விகள் கேட்பது, பதில் சொல்வது என்பனவெல்லாம் எப்படி இருக்கும்?

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அதைத் தவிர மற்ற வேலைகளை செய்கிறார், எல்லாவற்றையும் தருகிறார், பதிலுக்குப் பெற்றுக்கொள்கிறார்.

இவரைப்போன்ற ஆராய்ச்சியாளர் என்ன தரமுடியும்?

ஓலச்சுவடிகள்?

அதை வைத்துக் கொண்டு மின்னாக்குவோம் என்று வியாபாரத்தில் கிளம்பினால், கொஞ்சம் காசாவது கிடைக்கும்.

அதற்கும் ஒரு கூட்டம் வந்து லட்சங்களை அள்ளியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை: கோவை : “தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை’ என்று மூத்த ஓலைச்சுவடி நிபுணர் நாகராஜன் தெரிவித்தார். இது குறித்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கில், தினமலர் இதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழில் உள்ள பழம் பெரும் செல்வங்கள் ஓலைச்சுவடியிலிருந்துதான் வந்தன. ஓலைச்சுவடி பதிப்புகளுக்குப் பிறகுதான் தமிழ் ஆராய்ச்சி முறையாக வந்தது. இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட தகவல்கள் அங்கிருந்து தான் பெறப்பட்டன. உ.வே.சா., அவர்கள் தான் சுவடியிலிருந்து துல்லியமான தகவல்களைப் பெற்று நூல்கள் வெளியிட்டார். அப்போது அவருக்கு எந்த விதமான அறிவியல் சாதனங்களும் இல்லை. கையால்தான் அவர் எழுதியாக வேண்டும். தற்போது, அறிவியல் சாதனங்கள் இருந்த போதிலும், சுவடியிலுள்ள கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் வேலை வேகமாக நடக்கவில்லை.

தரம் குன்றிவரும் ஆராய்ச்சி, ஆராய்ச்சிமுறை: இன்று சுவடியிலிருந்து தகவல்களைப் பெறுவதில் தரம் குன்றி வருகிறது. அதே சமயத்தில் இம்முயற்சி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பேர் இத்துறைக்கு வருகிறார்கள். அதனால் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.இது கட்டாயமும் கூட. இது தமிழ் பதிப்பு உயரவும், தமிழ் உயரவும் வழி வகுக்கும். இன்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றை புத்தகங்களாக வெளியிட இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். இவற்றில் பெரும்பாலானவை மருத்துவத் தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இது அறியப்பட்டால் தமிழ் மருத்துவத்துக்கு என தனிப் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு தகவல்கள் பெறப்படும். சுவடியில் பிற இலக்கியமும் கிடைக்க வாய்ப்புள்ளது. பாரம்பரியமாக பலர் சுவடிகளை பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் அந்த சுவடிகளை பொதுப் பயன்பாட்டுக்குத் தர மறுக்கிறார்கள். என்றாலும் தொடர்ந்து சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆப்பு பற்றிதான் நமது இளைஞர்கள் அறிவார்கள், யாப்பு பற்றி அறிவரோ? சுவடியில் உள்ள தகவல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலானவை. அவற்றை பெயர்த்து புத்தகங்களாக மாற்ற வேண்டுமானால், யாப்பு தெரிய வேண்டும். பின்னர் உரைநடைக்கு மாற்ற வேண்டும். ஆனால் இன்று முதுகலை படிக்கும் மாணவர்கள் கூட, யாப்பு தெரியாமல் வெளி வந்துவிட முடியும். ஏனென்றால் இன்று ஆய்வு செய்யும் அளவுக்கு தமிழ் மொழியில் நூல்கள் வந்துவிட்டதால், யாப்பை மாணவர்கள் கற்பதில்லை.

யாப்பு தெரிந்த தகுதியுள்ள தமிழர்கள் எத்தனை பேர் உள்ளனர்? செய்யுளிலிருந்து யாப்புக்கு கொண்டு வருவதற்குத் தனித் தகுதிகள் வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தால்தான் சுவடியியலில் சிறந்து விளங்க முடியும். தமிழ்த் தகவல்கள் புத்தக வடிவுக்கு கொண்டு வர முடியும். சுவடியைக் கூட யாரும் படிக்கலாம். 15 நாளில் தெளிவு பெறலாம். ஆனால் யாப்பு படிப்பது அதைவிட கடினமானது. ஆகவே யாப்பு வளர வேண்டும். பழைய யாப்பு தெரிய வேண்டும்.பழைய பொக்கிஷத்தை அறிய இது அவசியம். இவ்வாறு நாகராஜன் தெரிவித்தார்.

வாலி போன்ற சோரம் போன்ற கவிஞர்கள் இருந்தாலே போதுமே? ஆராய்ச்சியில் திறன், மொழியில் திறன், யாப்பு……..இதெல்லாம் எதற்கு தெரிந்திருக்க வேண்டும்? வயதானாலும், விவஸ்தைக் கெட்டு, அசிங்கமாக, ஆபாசனாக, கேவலமாக, கவிதை என்று உளறிக்கொண்டிருந்தாலே போதுமே?

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: