அரைகுறை ஆறுமுகசாமிக்கு ரூ.3000/-, ஓதுவாருக்கு ரூ.70/- இதுதான் தமிழைக் காக்கும் லட்சணமா?

அரைகுறை ஆறுமுகசாமிக்கு ரூ.3000/-, ஓதுவாருக்கு ரூ.70/- இதுதான் தமிழைக் காக்கும் லட்சணமா?

நாத்திகம் கழகத்திற்கு இருக்கலாம், ஆனால், ஆட்சி செய்பவர்கலுக்கு இருந்தால், அதனை ஏன் சட்டம் கேக=ட்கக் கூடாது? தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தம், பெரியபுராணம் மற்றும் பதிக பாடல்களை தெரிந்த ஓதுவார், அரையர்கள் பலர் இருந்தும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதை மாற்றி, பழைமை வாய்ந்த சைவ, வைணவப் பாடல்களை தினந்தோறும் கோவில்களில் ஒலிக்கச் செய்யவும், வகுப்புகள் எடுக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சைவக் கோவில்களில், பூஜையின் போது, தேவார திருமுறைகளைப் பாடும் பணியைச் செய்பவர்கள் ஓதுவார்கள். புகழ்பெற்ற சைவ மடங்களில், குருகுல முறைப்படி படித்து வந்த இவர்களுக்கு, அறநிலையத்துறையினர் உரிய பணி வழங்காமலும், வழங்கியவர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமலும் உள்ளனர்.

துலுக்கனிடம் கஞ்சிகுடிக்கும் ஆட்கள் எல்லாம் ஆட்சி செய்தால் அப்படித்தான் இருக்கும்: இதனால், பாடல்பெற்ற தலங்களில் கூட ஓதுவார்கள் பணியில் இல்லாத அவலம் நீடிக்கிறது. சைவப் பெரியார் திருநாவுக்கரசர் தேவாரத்தை அரங்கேற்றிய, கடலூர் மாவட்டம் திருவதிகை கோவிலிலும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அரங்கேற்றிய, திருவெண்ணெய் நல்லூரிலும் இன்று தேவாரம் பாட ஓதுவார் இல்லை.

பகலில் சாமி, இரவில் காமி, இப்படி சிலேடையில் மூழ்கியிருக்கும் போது எப்படி இதெல்லாம் புரியப்போகிறது? வைணவக் கோவில்களில் பாசுரம் பாடும் பணியில், “அரையர்’கள் ஈடுபடுத்தப்படுவர். வைணவத்தில் புகழ்பெற்ற வைபவமான வைகுண்ட ஏகாதசியன்று நடக்கும், பகல்பத்து, ரா பத்து ஆகியவை தமிழ் திருவிழாக்களாகவே நடந்து வருகின்றன. சைவக் கோவில்களைப் போல், வைணவக் கோவில்களிலும், “அரையர்’ சேவையின்றி பூஜைகள் அரங்கேறி வருகின்றன.

ஓதுவார்களின் கோரிக்கை குறித்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: பாடல் பெற்ற சைவ கோவில்களில் ஓதுவர்களும், புகழ்பெற்ற வைணவக் கோவில்களில் அரையர்களும் நியமிக்கப்படவில்லை. அப்படி நியமிக்கப்பட்ட ஒரு சில ஓதுவார்களுக்கு மாதம் 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளமும், தினமும் ஒரு பட்டைச்சாதப் பொட்டலமும் வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை ஈஸ்வரன் கோவிலில் ஓதுவார் சேவை செய்பவருக்கு மாதம் 70 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

அரைகுறை ஆறுமுகசாமிக்கு ரூ.3000/-, ஓதுவாருக்கு ரூ.70/- இதுதான் தமிழைக் காக்கும் லட்சணமா? ஆனால், சிதம்பரம் கோவிலில் போராட்டம் நடத்திய ஆறுமுகசாமிக்கு அரசு 3,000 ரூபாய் சம்பளம் வழங்கிறது. ஏன் இந்த பாரபட்சம்? தமிழில் பெயர் வைக்கும் சினிமாவுக்கு அரசு வரிச்சலுகை வழங்குகிறது. ஆனால், கோவில்களில் தமிழில் பாடுபவர்களுக்கு சம்பளமும் குறைவு; சலுகைகளும் இல்லை. தர்மாபுரம் சுவாமிநாதன் என்ற ஓதுவாரை தனது ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியும் கவுரவித்தார்.

நாத்திகம் பெயரில் இந்துக்களைக் கேவலபடுத்துதல், தூஷித்தல் முதலியவை நடப்பதால்தான் இந்நிலையுள்ளது: இப்போது அரசு முன்னுரிமை தராததால் யாரும் சமய இலக்கியங்களை படிக்க முன்வருவதில்லை. படித்தவர்கள் உதவியின்றி வறுமையில் உள்ளனர். தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த போது, 108 ஓதுவார்கள், அரையர்களைக் கொண்டு பாசுரம், தேவாரம் பாடி, மாநாடு துவங்கப்பட்டது. தற்போதைய செம்மொழி மாநாட்டில் ஓதுவார்களுக்கு அழைப்பும் இல்லை; மரியாதையும் இல்லை. ஓதுவார்கள், அரையர்களுக்கு அடிப்படை சம்பளம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அர்ஜுன் கூறினார்.

ஏ. பி. நாகராஜன் போன்றவர் மறுபடியும் பிறந்து வரவேண்டும், இல்லையென்றால் இப்படி லெனின் எடுத்த புளூஃபிளிம்தான் சன்-நெட்வொர்க்கில் கருணாநிதியின் தயவில் பார்க்கமுடியும்: தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம், ஆண்டாள் பாடல்கள், கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், பெரியபுராணம், குற்றால குறவஞ்சி, குமரகுருபரர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பதிகங்கள், திருப்புகழ். அந்தந்த திருத்தலத்திற்கு உரிய பாடல்கள், அவ்வையார், கபிலர், இரட்டை புலவர்கள் எனப் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த அருந்தமிழ் புலவர்களின் பாடல்களை கோவில்கள் முழுவதும் ஒலிக்கச் செய்ய வேண்டும். இதற்கான வகுப்புகளை தினமும், காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். ஏற்கனவே, பல கோவில்களில் சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அதுதான் ஏற்கெனவே செய்து வருகின்றனரே? அஞ்சுகம் அளித்த பொஉதல்வா போற்றி என்று கபாலீச்வரர் கோவிலில் போற்றியதை மறந்தது  அவமானம்: அனைத்து கோவில்களிலும் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கி, பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்த வேண்டும். பல நூறு கோடிகளை செலவு செய்து செம்மொழியை சிறப்பிக்க மாநாடு கண்ட தமிழக அரசு, சமயத்தமிழையும், பக்தி இலக்கியங்களையும் காக்க நடவடிக்கை எடுக்குமா?

– நன்றி-தினமலர்-

நமது சிறப்பு நிருபர் –

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

ஒரு பதில் to “அரைகுறை ஆறுமுகசாமிக்கு ரூ.3000/-, ஓதுவாருக்கு ரூ.70/- இதுதான் தமிழைக் காக்கும் லட்சணமா?”

  1. K. Venkatraman Says:

    This is very clear that Karunanidhi wants to destroy Hindu religion by all means.

    One of the main agendas of the Semmozhi conference has been to ban Hindu religion from all discussion, in spite of its relevance and inseperability with the Tamil literature.

    The fanatic idiots have gone to the extent of denying such roots without any regard for their own literature.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: