செம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது!

செம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது!

அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்

First Published : 28 Jun 2010 01:53:57 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx…..d=263510&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

தாக்குதலுக்கு உள்ளான அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையாவின் வீடு மற்றும் கார்.
சென்னை, ஜூன் 27: அதிமுக இலக்கிய அணியின் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டார்.சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் பழ. கருப்பையாவின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டார்.மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பழ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது:மதியம் 2 மணிக்கு என் வீட்டு தொலைபேசிக்கு தமிழ்வாணன் என்பவர் பேசினார். உங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் ஊரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். ஊரில் தான் இருக்கிறேன். நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன். பதில் சொல்லாமல் மோசமான ஒரு வார்த்தையைக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார். எனக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வருவது புதிதல்ல என்பதால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.மாலை 3.30 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஏழெட்டு நபர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் எனது மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.என்னைப் பார்ப்பதற்காக பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். அதனால், வந்தவர்களை எனது மனைவி வரவேற்றார். வந்தவர்களின் தோற்றத்தை பார்த்ததும் நீங்கள் யார் என்று கேட்டேன்.நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது என்று சொல்லி வாயில் குத்தினார்கள். கையால் கன்னம், உடலின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி குத்தினார்கள். இது ஆரம்பம்தான் என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.கார், மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் என்று பல பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எனது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.  கருணாநிதி என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று முதல்வர் கருணாநிதியை விமர்சனம் செய்து கட்டுரை எழுதினேன். அதனாலேயே என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இது ஆரம்பம் தான் என்றார்கள். தீய சக்திகளுக்கு எதிரான என் எழுத்துக்கும், பேச்சுக்கும் இதுதான் ஆரம்பம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் பழ. கருப்பையா.தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்த வீட்டை துணை கமிஷனர் கே. சண்முகவேல், ராயப்பேட்டை உதவி கமிஷனர் பி. வசந்தகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர். இது குறித்து ராயப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிமுக எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பழ. கருப்பையாவைச் சந்தித்து தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.


பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல்: சோ’ கண்டனம்
: சென்னையில் அதிமுக இலக்கிய அணித்தலைவர் பழ. கருப்பையா வீடு மற்றும் வீட்டில் இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர்தான் இந்த செயலை செய்தனர் என்று பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.  உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை விமர்சித்ததால் திமுகவினர் இந்த தாக்குதல் நடத்தினர் என்று கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடந்த வீட்டை நேரில் சென்று பார்த்தார் பத்திரிக்கையாளர் சோ’. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘’திமுகவை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக்கூடாது.   அப்படி கொடுத்தால் இப்படித்தான் தாக்குதல் நடத்துவார்கள். இது ஒன்றும் புதிதல்ல;  1971ல் இருந்தே அவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

பழ.கருப்பையா மீது தாக்குதல் இரண்டு தனிப்படைகள் அமைப்பு: சென்னை : அ.தி.மு.க., பேச்சாளர் பழ.கருப்பையாவை தாக்கியவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வசித்து வருபவர் பழ.கருப்பையா. அ.தி.மு.க., பேச்சாளரான இவரது வீட்டிற்கு நேற்று  வந்த ஆறு மர்ம நபர்கள், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில், பழ. கருப்பையாவை கை மற்றும் முகத்தில் தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றனர்.இந்த தாக்குதல் குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

பழ. கருப்பையா மீது தாக்குதல்: அரசியல் கட்சிகள் கண்டனம்
தினமணி – First Published : 29 Jun 2010 02:41:30 AM IST
சென்னை, ஜூன் 28: அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பா.ஜ.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர்களையும், பத்திரிகை அலுவலகங்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், கட்சி அலுவலகங்களையும் தாக்குவது வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க. அரசு செய்யும் தவறுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் யார் இறங்கினாலும் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை.   பழ. கருப்பையா மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்கியவர்கள் வெறும் அம்பாகத்தான் இருக்க முடியும். அந்த அம்பை எய்தியவர்கள் யார் என்பதை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த காவல் துறை முன்வருமா என்பது கேள்விக்குறியே. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் .
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை சர்வாதிகாரம், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரையும், தி.மு.க. அரசையும் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தியும், குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியும், கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. கோவையில் முதல் அமைச்சர் நடத்திய தன் குடும்ப விழா விளம்பர மாநாட்டைப் பற்றித் துணிச்சலாக, உண்மையாக, எடுத்து உரைத்ததால், பழ. கருப்பையா மீது தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இத்தகைய அராஜக அடக்குமுறையை ஏவிய சர்வாதிகாரிகள், மக்கள் சக்தியால் தூக்கி எறியப்பட்டதுதான் வரலாறு.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: பழ. கருப்பையாவின் வீடு புகுந்து சமூக விரோதிகள் தாக்கியது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும். இது எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் உரிய தண்டனை பெற அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் ந. சேதுராமன்: குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும். விமர்சனம் செய்வோரைத் தாக்குவது என்பது நாகரிகமற்ற செயல்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத்: பழ. கருப்பையா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், எதிர்கட்சி பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழக காவல் துறைத் தலைவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

2 பதில்கள் to “செம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது!”

 1. vedaprakash Says:

  வீடு புகுந்து அ.தி.மு.க., பேச்சாளர் மீது தாக்குதல் : பட்டப்பகலில் ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்
  பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010,23:37 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27645

  சென்னை : பட்டப்பகலில் அ.தி.மு.க., பிரமுகர் பழ.கருப்பையா வீட்டிற்குள் புகுந்த மர்மக் கும்பல், அவரை தாக்கியதோடு, பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வசிப்பவர் பழ.கருப்பையா; அ.தி.மு.க., பேச்சாளர். பல இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டிற்கு டூவீலரில் ஆறு மர்ம நபர்கள் வந்தனர். “பழ.கருப்பையா வீட்டில் இருக்கிறாரா’ எனக் கேட்டனர்.

  அவரது மனைவி கோமளா, “இருக்கிறார்; உள்ளே வாங்க’ என்றார். ஆறு பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர். “இந்த கை தானே எழுதியது, இந்த வாய் தானே பேசியது’ எனக் கூறியவாறு, பழ. கருப்பையாவை வாய், கைகளில் சரமாரியாகத் தாக்கினர். அறையில் இருந்த மின் விசிறிகள், இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தினர்; வளாகத்தில் நின்ற கார் கண்ணாடிகளையும் நொறுக்கினர். வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தபோது, அவர்களையும் தாக்கிவிட்டு, டூவீலரில் ஏறி தப்பிச் சென்றனர்.

  இதுகுறித்து பழ.கருப்பையா கூறும் போது, “மதியம் 2.30 மணிக்கு ஒருவர் போனில் பேசி, பழ.கருப்பையா இருக்கிறாரா என விசாரித்தார். சரியாக ஒரு மணி நேரம் ஆன நிலையில், ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து, சரமாரியாகத் தாக்கியது; கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

  இந்த தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பழ.கருப்பையா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுத்த ஆறு பேர் கொண்ட கும்பலை, ராயப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

 2. நெட்டிமையார் Says:

  “இந்த கை தானே எழுதியது, இந்த வாய் தானே பேசியது’ எனக் கூறியவாறு, பழ. கருப்பையாவை வாய், கைகளில் சரமாரியாகத் தாக்கினர் – என்று குறிப்பிட்டுள்ளதில், ஒரு உண்மை வெளிப்படுகிறது.

  இந்த நிகழ்ச்சியும், அந்த கேரள முஸ்லீம் தீவிரவாதிகளின் செயக்லிற்கும் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

  ஒருவேளை, மலையாளத்தில் அவர்களும் அதே மாதிரி சொல்லி, கையை வெட்டியிருப்பார்களோ என்னவோ?

  ஆக, திக-திமுக முதலியோர்க்கு அத்தகைய பொறுத்துக் ம்கொள்ளமுடியாத, தீவிரவாத மனப்பாங்கு ஏன் வருகிறது என்பதுதான், முக்கியமான ஆராய்ச்சிகுறிய விஷயமாகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: