Archive for the ‘இயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது’ Category

சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி? கண்காட்சி அரங்கில் ஆச்சரியம்

ஜூன் 25, 2010

சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி? கண்காட்சி அரங்கில் ஆச்சரியம்

http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=25658

கண்காட்சி: கோவை : செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிகம், பழங்கால தமிழர் பயன்படுத்திய பொருட்கள், சங்க இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் அடங்கிய கண்காட்சியைக் கண்டு பொதுமக்கள் பிரமித்து நிற்கின்றனர் [பிரமித்து நிற்பதற்கு என்ன விஷயம் என்று தெரிவவில்லை]. கோவையில் நடைபெற்று வரும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, பிரமாண்டமான முறையில் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த அரங்கின் துவக்க விழா இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

சிந்து சமவெளி நாகரிகம்: சிந்துசமவெளி நாகரிகம் குறித்த அரங்கில், எகிப்து, மெசப்பொட்டோமியா, ஹைட், ஈலமைட், சிந்து சமவெளி, சீனா ஆகிய உலகின் பழமையான நாகரிகங்கள் பற்றி அரங்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் பரப்பு, முக்கிய பகுதிகள், கண்டுபிடித்த ஆண்டு, கண்டு பிடித்தவர்களின் புகைப்படம், சிந்துவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், முத்திரைகள், முத்திரை வகைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அக்கால பெண்கள் அணிந்திருந்த சங்கு வளையல்கள் (இந்த வழக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில சமுதாய திருமணமான பெண்கள் மத்தியில் இப்போதும் உள்ளது), மொகஞ்சதாரோ பகுதியில் சேகரிக்கப்பட்ட தாயிடம் பால் குடிக்கும் சிற்பம், கட்டடக் கலையை விளக்கும் செங்கற்களால் ஆன மொகஞ்சதாரோ பொய்கை, நெசவு தொழில், விவசாயம், நிலத்தை உழ முதன் முதலில் பயன்படுத்திய “பலகு கட்டை’ ஆகியவை விழிகளை விரியச் செய்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பல உண்மைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை: இது பற்றி ஆய்வாளர் சுப்ரமணியம் கூறுகையில், “”சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பல உண்மைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரங்குகளில் இதுவரை கண்டறிந்த உண்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன.  சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்களின் வீழ்ச்சிக்கு, பெருகிய மக்கள் தொகை, இயற்கை சீரழிவு, இயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது, வேற்றுமொழி பேசியவர்களின் கலப்பு, தென்திசை நோக்கிய இடப்பெயர்ச்சி ஆகியவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன,” என்றார் [ஆனால், அங்கு பெரும்பாலோர் எல்லாமே தீர்மானித்துவிட்டது போலத்தான் பேசுகிறர்கள்].

சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி? சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்களின் வீழ்ச்சிக்கு,

  1. பெருகிய மக்கள் தொகை,
  2. இயற்கை சீரழிவு,
  3. இயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது,
  4. வேற்றுமொழி பேசியவர்களின் கலப்பு,
  5. தென்திசை நோக்கிய இடப்பெயர்ச்சி

ஆகியவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன

ஆரியர்கள் சிந்துசமவெளிக்கு வந்தபோது, திராவிடர்கள் இல்லை என்கிறார் பார்போல. அப்பொழுது, ஆரியர் படையெடுப்பு இல்லையென்றாகிறது.