Posts Tagged ‘தமிழ் புலவர்கள்’

நொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது!

மே 29, 2013

நொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது!

தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரு கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.

நொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார்.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா: கருணாநிதி ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[3]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை. மாறாக விலகிக் கொண்டார்[4]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[5]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[6] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[7]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[8]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[9]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் சோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[10].

சைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான  சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[11]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[12].  கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.
© வேதபிரகாஷ்

29-05-2013


[4] I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.

http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

[5] செம்மொழிமாநாட்டைதிசைதிருப்பமுயற்சி: கருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தைப் பார்க்கவும்.

https://chemozhi.wordpress.com/2010/06/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/

[11] Parvati Menon, Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘, an interview with Noboru Karashima in The Hindu dated December 2, 2010

[12] The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics asrajagurus by Rajaraja I and Rajendra I. These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.

http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

Advertisements

கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி

ஜூன் 30, 2010

கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28907

அரசியல் சார்பு ஆட்களுக்கு மரியாதை என்ற நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் அவமதிப்பிற்குள்ளாகினர்: கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடிகோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் கருத்தரங்கம் என்பது வருங்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.ஆனால், வெளிநாட்டு அறிஞர்களும், மற்ற அறிஞர்களும் அதிக சிரமப்பட்டனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். கட்சி, தெரிந்தவர்கள், ஜால்ராக்கள் என்றிருந்த ஆட்கள் எல்லோரும் பிழைத்துக் கொண்டனர். ஐந்து நாட்களிலும் நன்றாக அனுபவித்தனர்.

ஆய்வுக்கட்டுரைகளில் குளறுபடி: ஆய்வுக்கட்டுரை என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும் அம்சம். எல்லா ஆய்வரங்கங்களுக்கும் எல்லாரும் செல்ல முடியாது என்பதை அரசு முன்கூட்டியே அறியும். மாநாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களும் அறிவர். அரசு வெளியிட்ட தகவலின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த ஓட்டல்கள் எண்ணிக்கை 92. மொத்தம் 2,605 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தங்கும் இடங்களும், உணவும், அவர்களுக்கு பாதுகாப்பும், அவர்களை கூட்டிச் செல்ல தனி வண்டிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 50 நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் தாக்கல் செய்த கட்டுரைகள் 152 என்றும் கூறப்படுகிறது.

பல ஆய்வுக்கட்டுரைகள் விடுபடுள்ளன: பல ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்ட தேகிகளில் மின்னஞ்சல் மூலம் அனுப்பியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் பெயர்கள் பதிவு செய்யப் பட்டது என்று மின்னஞ்சல் செய்தி வந்தாலும், கடிதங்கள் அனுப்பப்பபடவில்லை. கட்டுரைகள் அனுப்பினாலும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கட்டுரைகள் உரிய தேதிகளில் அனுப்பினாலும், அவை, ஏதோ க்ஆரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மொத்த கட்டுரைகள் 913. ஆகவே உலகத் தனிமொழி,செம்மொழியை ஆய்வு செய்து தரப்பட்ட தகவல்கள் இனி நூலாக அல்லது குறுந்தகடாக வெளிவரும் என்பது வேறு விஷயம். அதே சமயம் கோவைக்கு வந்து ஆய்வரங்குகளில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் மாபெரும் அறிஞர்கள் சொல்லும் தகவல்களை நேரடியாகக் கேட்டு மகிழும் வாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வம் உள்ள ஆய்வாளர்களும், மாணவர்களும் இழந்தனர். இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் ஏற்பட்ட கெடுபிடிகள் ஒரு காரணம். இந்த அரங்குகளில் பங்கேற்று அரிய தகவல்களை கேட்க, நுழைவு அட்டை இல்லாவிட்டால் அரங்கில் நுழைய முடியாது.

நுழைவு அட்டை- மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் என்று அலைக்கழிக்கப் பட்ட ஆய்வாளர்கள்: நுழைவு அட்டை இருந்தும், மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்களுடன் இணைந்தில்லாததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பட்டிமன்றம் பங்கேற்றோர் எண்ணிக்கையை இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதைவிட, இங்கு பெறப்பட்ட கருத்தாய்வுகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டதற்கு சிலர் வருந்தினர். தாங்களே நேரடியாக அறிஞர்கள் பேசுவதைக் கேட்பதுடன், முக்கிய விளக்கங்கள் எனில் அதை அங்கேயே கேட்டுப் பெற வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் கருத்து தெரிவித்தனர்.மேலும் மேலைநாடுகளில், மற்ற பெரிய அளவில் நடக்கும் ஆய்வரங்குகள் என்பதில் பெரிய கல்லூரிகள் அல்லது தனியாக முழு வசதி கொண்ட இடங்களை தேர்வு செய்வது வழக்கம்.
ஆராய்ச்சி பின்தள்ளப்பட்டுவிட்டது, ஜால்ராக்கள் முன்னே வந்துவிட்டன: அதோடு அதில் பங்கேற்போருக்கு மதிய உணவு அல்லது காலைச் சிற்றுண்டிக்கு டோக்கன் தருவதும் உண்டு. அதன் மூலம் அங்கு வரும் அறிஞர்களும், மற்றவர்களும் இயல்பாக எந்தவித நெருக்கடியும் இன்றி அறிவுப்பூர்வமான கருத்துக்களை கேட்டு செல்வது உண்டு. உரிய நடைமுறைகளை பின்பற்றியிருந்தால், இன்னும் சற்று அதிகமாக ஆய்வரங்கில் அறிஞர்கள் எளிதாக கலந்து கொண்டு சிறப்பித்திருப்பர்.ஐந்து நாட்கள் நடந்த மாநாட்டில் நிறைய புதுக் கருத்துக்களை கேட்டு தமிழ் மொழிச் சிறப்பை மேலும் அறிய விரும்பிய பலரும் இந்த நிலைமை கண்டு ஒன்று அல்லது இரண்டு ஆய்வரங்குகள் உடன் முடித்துக்கொண்டு, தங்கள் அறைகளுக்கு திரும்பி விட்டனர். இந்த மாநாட்டின் பிரமாண்டத்தைக் கண்டு அதிசயித்த அவர்கள், அத்துடன் மனநிறைவு பெற்று திரும்பினதாக தெரிவித்தனர்.

தமிழை மதிக்கக் கற்றுக் கொண்டார்களா? பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் என்ற போலித்தனம் ஏன்?

மே 2, 2010
தமிழை மதிக்கக் கற்றுக் கொண்டார்களா?
பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் என்ற போலித்தனம் ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
மே 02,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18257

தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் வரிகள் பிறழ்ந்து விட்டன என்ற குற்றம் எழுந்துள்ளது.

தமிழ் என்பது இந்த திராவிட அரசியல்வாதிகளுக்கு ஒரு வியாபாரப் பொருள் ஆகிவிட்டது.

அதுவும் ஒரு வியாபாரச் சின்னத்திற்கு அதனைக் குறைத்து விட்டார்கள், எப்படி செம்மொழி மாநாட்டிற்கு சின்னம் போட்டார்களோ அதுபோல.

இப்பொழுதுகூட, “செம்மொழி மாநாடு” என்று கூறி, தமிழ்த்தாயைக் கூறுபோட்டுவிட்டார்கள்.

கோடிகளை அள்ளுவோம், கொள்ளையடிப்போம் என்ற உன்மத்த உத்வேகத்தில், “செவ்வியக் காலம்” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு தமிழ்த்தாயை “கற்பழித்து” விட்டனர் என்றே சொல்லலாம்.

பிறகு எதற்கு இந்த போலி நாடகம், கூத்து எல்லாம்?

முதலில் தாய் மொழி என்ற உணர்வு, தாயை, பெற்றத் தாயைப் பேணிக் காக்கும் மகனைப் போன்ற உணர்வு இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான் அவன், தனது தாயை தாயாகப் பாவிப்பான்.

பணம் கொடுக்கிறேன் எனக்கு சேவை செய் என்றால், வேலைக்காரிக் கூட தொடமாட்டாள்.

அந்நிலையில், இந்த திராவிட அரசியல்வாதிகள் உண்மையாக தமிழ் வளர்க்க என்ன செய்திருக்கிறார்கள்?

தமிழ் உணர்வை எப்படி பேணி வளர்த்திருக்கிறார்கள்?

மணப்பாறை: பள்ளி விழாவில் மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாததால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

மாணவிகள் பாடத் திணறியனராம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள, செவலூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா, நேற்று õலையில் நடந்தது.  போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, கல்வித்துறை அதிகாரிகள்  பங்கேற்றனர். விழா துவங்கியவுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒலிப்பெருக்கியை ‘ஆன்’ செய்தனர். ஒலிபெருக்கி சரியாக இயங்காததால், பள்ளி மாணவிகள் எட்டு பேர், தமிழ்த்தாய் வாழ்த்து பாட, மேடைக்கு வந்தனர். துவக்கத்தில் நன்றாக பாடிய மாணவிகள், பாதிக்கு மேல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் தவித்தனர்.மாணவிகள் பாடத் திணறியதை கண்ட அமைச்சர் நேரு, தானே தொடர்ந்து பாடலை பாடினார்.

தலைமை ஆசிரியர் மீது  நடவடிக்கை: அவருடன் விழாவுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் பாடி முடித்தனர். விழா முடிந்ததும் அமைச்சர் நேரு, பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்தார். அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறிது காலத்துக்கு முன் இறந்து விட்டதால், பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்த, ராமகிருஷ்ணன் அமைச்சரிடம் சென்றார். அவரை அமைச்சர் நேரு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடத் தெரியாமல் மாணவிகள் உள்ளனர். ஆசிரியர்கள் என்ன தான் சொல்லித் தருகின்றனர்’ என்று கூறி கடுமையாக திட்டினார். அதன் பின் அமைச்சர் நேரு, திருச்சி கலெக்டர் சவுண்டையாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு,’தமிழ்த்தாய் வாழ்த்து கூட மாணவர்களுக்கு சரியாக சொல்லித்தராமல் உள்ளனர். உடனடியாக, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுங்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள் முதலியோருக்கு சரித்திர ஞானம் வேண்டும்

பிப்ரவரி 14, 2010

தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள் முதலியோருக்கு சரித்திர ஞானம் வேண்டும்

பொதுவாக இக்கால தமிழ் தெரிந்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், புலவர்கள், முதலியோருக்கு தமிழ் நன்றாகத்தெரியுமேத் தவிர, சரித்திர ஞானம், ஆராய்ச்சி நெறிமுறை முதலியவைப் பற்றி தெரிவதில்லை அல்லது தெரிந்தும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மணிக்ககணக்காக தமிழில் மக்களை மகிழ்விக்க அடைமொழிகளோடு பேசுவார்கள். ஆனால் மொத்தத்தில் என்ன பேசினார்கள் என்று பார்த்தால் மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கும். காலம், முக்கியமாக சரித்திர காலக்கணக்கீட்டுமுறை முதலியவைப் பற்றியும் கவலைப் படமாட்டார்கள்.

ஒருவர் முன்னே சொன்னதை திரும்பத் திரும்ப சொல்லியே காலத்தை ஓட்டிவிடுவர். தொடரந்து ஒரு குறிப்பிட்டப் பேச்சாளரின் பேச்சை ஒன்றிற்கு மேலான இடத்தில் கேட்க நேர்ந்தால், அவர் முதல் மேடையில் என்ன பேசினாரோ, அதையே அடுத்த மேடையிலும் பேசுகிறார் என்பதனை அறியலாம். குறிப்பிட்ட பாடல்கள், சொற்றொடர்கள், அடுக்கு மொழிகள், பழமொழிகள், விட்டுகள் / ஜோக்குகள், பாடல்கள் முதலியவற்றை திரும்பத் திரும்ப கூறுவது, பாடுவது, சொல்வது என சுலபமாகக் கவனிக்கலாம்.

பழக்கதையை விடுத்து, என்ன புதியதாக என்ன பேசுகிறார்கள், சொல்கிறர்கள் என்று பார்த்தாலும், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.  பேசுவதெல்லாம் வீண்பேச்சு / வாய் சவடால் (rhetoric), சொற்விளையாட்டு / வார்த்தை ஜாலம் (gimmick), தேவையற்ற அடுக்குமொழி (wordy / verbose) என்பதை எடைபோடலாம்.

விஞ்ஞான தொழிற்நுட்ப அறிவு, காலத்தினால் மாறிவரும் அறிவியல் உண்மைகள் முதலியவற்றை அறியாமல் பேசுவதும், இக்கால மாணவர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது எனலாம், இருப்பினும், ஏதோ பெரியவர், முக்கியமானவர், அரசியல் தலைவர், எம். எல். ஏ / எம்.பி, அமைச்சர் என்பதாக் பொறுத்துப் போகிறர்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், சில நேரங்களில் அவையிலிருந்து எழுந்து சென்றாலோ, இவரது போரடிக்கும் பேச்சை கவனிக்காமல், பேசிக்கொண்டிருந்தால், அவருக்கு கோபம் வேறு வரும்.

உலகத்தில் மற்ற நாடுகளில் கி. மு / கி. பி என்று குறிப்பிடுவதை நிறுத்து விட்டார்கள். அதற்கு பதிலாக CE = Current Era மற்றும் BCE = Before Current Era என்றுதான் உபயோகப் படுத்துகிறார்கள். இதை தமிழில் நடப்பு சகாப்தம் = நச மற்றும் நடப்பு சகாப்தத்திற்கு முன்பு = நசமு என்று குறிப்பிடவேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்த வழக்கம் இன்னும் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.

தமிழகத்தின் செவ்வியல் காலம் 6ம் நூற்றாண்டிற்கு முன்புதான் இருந்ததா?

பிப்ரவரி 14, 2010

தமிழகத்தின் செவ்வியல் காலம் 6ம் நூற்றாண்டிற்கு முன்புதான் இருந்ததா?

தமிழின் பொற்காலமெனக் கருதப்படும் செவ்வியல் காலத் (கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட) தமிழ் இலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்துறை ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதென முடிவுசெய்யப்பட்டது”.

இவ்வாறு, செம்மொழி செய்திமடல் 1 2006 மார்ச்சு-2008 மே, ப.2 கூறுகிறது. அதாவது அதன் ஆசிரியர் பேராசிரியர் க. இராமசாமி குறிப்பிடுகின்றார்.

மேலும் முதன்மைத் திட்டப்பணிகள் என்பதில் (ப.11), “அனைத்துத் திட்டப்பணிகளும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய செம்மொழி தமிழை மையப்படுத்தியே அமைய வேண்டும் எனத் தீர்மானித்துச் செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில், உடனடியாகச் செயற்படுத்த வேண்டிய பத்து முதன்மைத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன“, என்றும் கூறப்பட்டுள்ளது.

பிறகு, தொன்மை காலம் தொடங்கிக் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன:

தொல்காப்பியம்

1

பத்துப்பாட்டு

10

எட்டுத்தொகை

8

பதினெண் கீழ்கணக்கு

18

சிலப்பதிகாரம்

1

மணிமேகலை

1

முத்தொள்ளாயிரம்

1

இறையனார் களவியல்

1

மொத்தம்

41

இப்படி குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போதுதான், ஏதோ இதில் குழப்பம் இருக்கிறது என்று தெரிகிறது. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டது என்று இக்கால ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். இறையனார் களவியலைப் பற்றியக் கருத்துகள் நிச்சயமாக திராவிடத்திற்கு ஏற்புடையதல்ல, அந்நிலையில் இவ்வாறு பிரித்திருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஏதோ பார்ப்பனர் தாம் அப்படி “இறையனார் களவியலுக்கு” பாயிரம் எழுதி வழக்கில் விட்டான் என்று அவதூரு பேசுவர் தமிழ்-திராவிட வெறியர்கள். ஆனால், அதே நேரத்தில் மூன்று சங்கங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள், இத்தனை மன்னர்கள் ஆண்டார்கள் என்று எண்ணிக்கைகள் வேறு…………….இப்படியுள்ளது தமிழர்களது போலித்தனமான சரித்திர ஆராய்ச்சி!

ஆழ்வார்கள், நாயன்மார்களின் இலக்கியங்களை விலக்கும் போக்குத்தான் இதில் தெரிகின்றது.