Archive for the ‘மணியரசன்’ Category

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? திராவிடத்துவப் பிடிவாதத்தில் தொடரும் சித்தாந்தம் (3)

செப்ரெம்பர் 5, 2021

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? திராவிடத்துவப் பிடிவாதத்தில் தொடரும் சித்தாந்தம் (3)

திராவிடம் இயக்கம் திராவிடம் என்பதை எப்படி விளக்கியது. ஸ்டாலின் ராஜாங்கம், தொடர்ந்து விளக்கியது, “அதனால், என்னமாதியான பிரச்னைகள் வந்தது என்று அவர்கள் ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள் என்றால் அது நியாயமானது. ஆனால், இங்கே என்ன பிரச்னை என்றால், திராவிடத்தை எதிர்க்கிற இடத்தில் இத்தகைய தமிழ்த்தேசியர்கள் வைப்பது எதுவாக இருக்கிறது என்றால், திராவிடத்தைவிட எந்த வகையிலும் முற்போக்காக இல்லாத ஒரு தமிழ் அடையாளத்தை வைக்கிறார்கள். திராவிடத்திடம் ஒரு பிரச்னை இருக்கிறது என்பது உண்மைதான். அதில் ஒரு குழப்பத்தை திராவிட இயக்கம் உண்டுபண்ணியிருக்கிறது. ஆனால், திராவிடம் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு பேசிய திராவிட இயக்கத்திடம் இருந்த ஒரு சமூக அக்கறை இருந்தது இல்லையா. அந்த அக்கறை திராவிட அடையாளத்தை புறக்கணித்துவிட்டு தமிழ்த்தேசியர் முன்வைக்கிற தமிழ் அடையாளத்தில் திராவிட இயக்கத்தினர் கொடுத்த உள்ளடக்கம் இல்லை. என்னைக் கேட்டால், திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஒரு தலித் பார்வையில் ஒரு பெரிய வித்தியாசமும்ம் இல்லை,” என்று கூறினார்.

தங்கம் தென்னரசுவின் அறிவிப்பு: தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்ட துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனத் தொடராச் செலவீனமாக ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதனிடையே, சங்க இலக்கியங்களை  தொகுத்து அவற்றுக்கு திராவிட இலக்கியம் என தமிழக அரசு பெயர் சூட்ட முயற்சிப்பதாக இந்த அறிவிப்பு தவறாக பரப்பப்பட்டத். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினர்.

திராவிட களஞ்சியம்தேவையற்ற சர்ச்சைதங்கம் தென்னரசு: இந்நிலையில், அரசின் அறிவிப்பு தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்[1]. அதில்,  “திராவிட களஞ்சியம் தேவையற்ற சர்ச்சை என்றும்  என்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம் என்று முறையாக படிக்க வேண்டும், படித்துவிட்டு கருத்துக்களை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்[2]. திராவிட களஞ்சியம் என்பது 150 ஆண்டுகளாக திராவிட இயக்கம், திராவிட உணவாளர்கள், திராவிட மொழிகள் சார்ந்து அவர்கள் தொடர்ச்சியாக நாம் சமுதாயத்தில் எடுத்து வைத்துள்ள மொழிக்கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகியவை[3]இதையெல்லாம் குறித்து இந்தத் தளங்களில் பல ஆய்வுக் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துக்கள், கவிதைகள் எல்லாம் ஒன்று சேர்த்து தற்காலத்தில் இருப்பவர்கள் வரை சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் நமக்குள் இருக்கக்கூடிய மொழி தொடர்புகள் வரலாற்று இணைப்புகள் எல்லாம் விளக்கக் கூடிய வகையிலே ஒரு தொகுப்பாக திராவிட களஞ்சியம் என்ற பெயரிலே ஒரு தொகுப்பாக வருகிறது,” என்று கூறினார்[4].

திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு[5]: “சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிட களஞ்சியம் என்ற பெயரை சூட்ட தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது என்ற கூற்று அடிப்படை அற்றது, உண்மை அற்றது என்று விளக்கமளித்த அவர்செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொல்காப்பியத்திலிருந்து வரக்கூடிய செவ்வியல் இலக்கியங்களை எல்லாம் தொகுத்து அவர்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை தனியானவை தனித்துவமானவை, எனவே இவற்றை எல்லாம் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குழப்புவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், அப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும் முயல வேண்டாம்,” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்[6].

பாவாணரும், திராவிடமும், தீதும்: பாவாணருக்கு தமிழ் தெரியும், அதனால், வார்த்தை ஜாலத்திலேயே, தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு, புத்தகங்களை எழுதி வந்தார். “திராவிடம்” நிச்சயமாக, தமிழ் இல்லை, தமிழ் தொடர்பு, சம்பந்தம், சித்தாந்தம் இல்லை என்பதினால், அதனை எதிர்த்தார். இது, திராவிடத்துவ வாதிகளுக்கு திகைப்பாக, அதிர்ச்சியாக இருந்தது. கால்டுவெல்லின் “திராவிடம்,” “திராவிடனை” உருவாக்கி, அதனை, “திராவிடத்துவமாக்கி” அரசியலாக்கினாலும், ஜின்னாவால் அந்த மாயை தகர்க்கப் பட்டது. ஈவேரா மறைத்தாலும், திமுக அதனை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. திராவிடத்துவ வாதிகள், சினிமாவுடன் சேர்ந்து, கவர்ச்சி பாணியில், அடுக்கு மொழி வசனங்களில், மேடை பேச்சுகளில் உபயோகப் படுத்திக் கொண்டு, “திராவிடனை” ஒரு சின்னமாக்கி, அடையாளமாக்கி, மக்களை உசுப்பி விட்டனர்.

சங்க இலக்கியங்கள், ஆரியர், திராவிடர் முதலியன: இவர்கள் எல்லோருமே, எட்டுத்தொகை மற்றும் பத்துப் பாட்டு நூற்களை ஒரு தடவையேனும், கவனமாக வாசித்து, பொருள் அறிந்திருப்பார்களா என்ற சந்தேகம், அவர்கள் பேசியதிலிருந்தே அறிய முடிகிறது. “சங்கப் புலவர்களுக்கு” ஆரிய-ஆரியர்-ஆரியன் தெரிந்திருந்தது, ஆனால், “திராவிடன்” தெரியாமல் இருந்தது. ஏனெனில், அத்தகைய சொல்லும் இல்லை, பிரயோகமுகம் இல்லை. சமஸ்கிருதம் தெரியாது என்பதால், பற்பல புத்தகங்களில் உள்ளதை அரைகுறையாகப் படித்து அல்லது மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு, தங்களது வாதங்களை வைத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. செத்தப் பாடை என்பதால், “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்,” “தமிழோடு ஆரியமும் கலந்து,” என்பதெல்லாம்[7] தெரியாமல் இன்றும் இருக்கின்றனரா, இல்லை, அறிந்தும் அறியாதது போல நடிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும்.  7, 8 அல்லது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படும் நாமதீப நிகண்டு, “தமிழ்” என்பதற்கு “திரவிடம்” என்ற சொல்லைக் காட்டுகிறது[8]. 9வது நூற்றாண்டைச் சேர்ந்த, சேந்தன் திவாகரம் பேசப்படுகின்ற, 18 மொழிகளுள் ஒன்றாக “திரவிடத்தை”க் குறிப்பிடுகிறது. பிறகு வந்த “காந்தத்து உபதேசக் காண்டம்” என்ற நூல் சிவபெருமான் எப்படி அகத்தியருக்கு திரவிடத்தினுடைய இலக்கணத்தை வெளிப்படுத்தினார் என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. “பிரயோக விவேகம்” என்ற நூலின் ஆசிரியர் சமஸ்கிருத வார்த்தை “திரமிளம்” என்பதுதான் “தமிழ்” என்றாகியிருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர். ஆனால், “தமிழ்” என்பதுதான் சமஸ்கிருதத்தில் “திரவிடம்” என்று வழங்கப் படுகிறது என்கின்றனர். சிவஞானயோகியும் திரவிடம் என்பது தென்மொழி என்பதனைக் குறிக்க உபயோகப்படுத்த படுகிறது என்கிறார்[9].  கே.வி.ராமகிருஷ்ண ராவ் தனது ஆய்வுக் கட்டுரைகளில் இவற்றை விளக்கியுள்ளார்[10]. ஆனால், இதையெல்லாம் விடுத்து, அயோத்திதாசர் என்று ஸ்டாலின் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] NEWS18 TAMIL, திராவிட களஞ்சியம்சங்கத் தமிழ் நூல்களில் பெயரை மாற்றும் முயற்சியா? அமைச்சர் விளக்கம்!, LAST UPDATED : SEPTEMBER 02, 2021, 23:59 IST

[2]  https://tamil.news18.com/news/tamil-nadu/minister-thangam-thennarasu-clarifies-about-dravida-kalanjiyam-mur-551379.html

[3] நக்கீரன் செய்திப்பிரிவு, திராவிடக் களஞ்சியம் பெயர் மாற்றம்அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்! , Published on 02/09/2021 (10:49) | Edited on 02/09/2021 (11:04)

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dravidian-repository-name-change-minister-thangam-thennarasu-description

[5] தினமணி, திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு : தங்கம் தென்னரசு விளக்கம், By DIN  |   Published on : 03rd September 2021 06:40 AM

[6]https://www.dinamani.com/tamilnadu/2021/sep/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81–%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3692186.html

[7]  ஆறாம் திருமறை, திருநாவுக்கரசர் தேவாரம், திருமறைக்காடு, பாடல் எண் : 5             

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்

    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்

ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்

    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்

வாரி மதகளிறே போல்வான் கண்டாய்

    மறைக்காட் டுறையும் மணாளன் தானே

Tevaram of Tirugnana Sambandar, 6th Tirumarai, 23rd Padigam, Tirumaraikkadu-6479.

In another place, he says, “Aryan with chaste Tamil” – 46th Padigam, Tirumarakkadu-6710. Here, both ‘Aryan’ and ‘Tamizhan’ refer to God Shiva.

[8] Sivasubramanya Kavirayar, NamaThipa Nikandu, Thanjavur University, 1985.

[9] Sabapathy Navalar, Dravida Prakasikai, Madras, 1899, p.7.

[10] https://aryandravidian.wordpress.com/2010/04/04/3/