Archive for the ‘மாநில சுயயாட்சி’ Category

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா?  சாதியமா, ஜாதியமா அல்லது கலப்பின பரிசோதனையா? (4)

செப்ரெம்பர் 5, 2021

தமிழ்திராவிட சண்டையா, ஆரியதிராவிட இனப் போராட்டமா, இனமாஇனத்துவமா, இனத்துவமாஇனவெறித்துவமா?  சாதியமா, ஜாதியமா அல்லது கலப்பின பரிசோதனையா? (4)

 கருணாநிதி குடும்பத்தில் பிராமண மறுமகள்கள் சேர்ந்தது, இனகலப்பு ஏற்படுத்தவா?: கருணாநிதி குடும்பத்தவர் கருப்பாக இல்லை, நன்றாக வெளுப்பாக-சிகப்பாகத்தான் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பார்ப்பவர்கள், “பிராமணர்கள் / பார்ப்பனர்கள்” என்று தான் சொல்வார்கள். கருணாநிதி, “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்,” என்று சுவரொட்டி ஒட்டியதைப் போல, யாரும் “சூத்திரர்” என்று சொல்லப் போவதில்லை. தமிழில் “இனம்” என்ற வார்த்தை “Race” என்ற பிரயோகத்தில் தான் இன்றும் உபயோகப் பட்டு வருகிறது. ஒரு பக்கம், “முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்” என்றதும், இன்னொரு பக்கம் ஸ்டாலினின் “Dravidian stock” என்பதும், அவ்வாறே வெளிப்பட்டுள்ளது போலும். விசயம் தெரிந்தவர்கள் அவ்வார்த்தைகளை அவ்வாறு இனவெறி-இனவெறித்துவம் ரீதியில் உபயோகப் படுத்த மாட்டார்கள். திராவிடர் அல்லது தமிழர் பிரயோகம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற விளக்கமும், ஏதோ தீர்மானத்துடன் வெளிப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஒருவேளை கருணாநிதி குடும்பத்தில், பிராமண பெண்களை சேர்த்துக் கொண்டதால், அத்தகைய பரிசோதனை அல்லது மாற்றம் எற்படுகிறதா என்றும் கவனிக்க வேண்டும். அதனையும் மறந்து, “நான் திராவிடன்” என்றெல்லாம் ஸ்டாலின் பேசுவது, நிச்சயமாக தமிழரை ஏமாற்றத்தான். பிரஷாந்த் கிஷோர் அத்தகைய போதனையை சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆக, இவையெல்லாமே, திராவிடத்துவ யுக்தியான, உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போக்கே எனலாம்.

இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism]: இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றுடன், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்ன்மையாஅ இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரின் மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்ல்லொரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜென்டுகள், “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றானர். கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் [Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். திராவிடத்துவவாதிகளை, இதைப் பற்றி வருவதாகத் தெரிகிறது.

சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக மோதல்கள் [class conflict] : அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய சமூகங்களில் சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக வர்க்க / மோதல்கள் [class conflict] இருப்பதை இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றால் அறியப் பட்டு, ஒப்புக் கொண்டு, திராவிடத்துவ வாதிகளால் நியாயப் படுத்தப் படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் வளர்ந்தாலும், பொருளாதாரம் வளர்ந்து, வசதிகள் பெருகினாலும், புறத்தோற்றங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், பெரிய நகரங்களில் அவை இல்லாமல் இருப்பது போன்று உள்ளது. ஆனால், நகர, கவுன்டிகளில் வெளிப் படுகின்றன. கருப்பர், பழுப்பு நிறத்தவர், குடிபெயர்ந்தவர் தவறுகளை, பிழைகளை, குற்றங்களை செய்வர் என்ற பொது நம்பிக்கை உள்ளது[1]. அதன்படியே, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமூல் படுத்தும் துறைகள், அதிகாரிகள் வேறுபாட்டை, வெறுப்பைக் காட்டி வருகின்றனர். வெள்ளைக் காரர்கள் அத்தகையோரை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களது உரிமைகளை, வசதிகளை, வேலைகளை அவர்கள் பரித்துக் கொள்கின்றனர் என்ற எண்ணம் தான், அவர்களது இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றில் வெளிப் பட்டுள்ளன. இங்கு, தமிழக்த்தில் அத்தகைய நிறவெறி இல்லையென்றாலும், இனவெறி இவ்வாறு ஊக்குவிக்கப் படுவதால், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் அவ்வாறு நடந்து கொள்ளலாம். தமிழக அரசுத் துறையினர் லஞ்சம் வாங்குவது, போலீஸார் கடுமையாக நடந்து கொள்வது, ஊழல் செய்வது, முதலியவற்றில் வெளிப்படுகிறது. ஏனெனில், மாட்டிக் கொண்டாலும், தப்பித்துக் கொள்ளலாம் என்ற “ஃபார்முலா” தெரிந்துள்ளது.

ஈவேராவின் திராவிடஸ்தான், அண்ணாவின் திராவிட நாடு: “திரவிடஸ்தான்” ஜின்னா-பெரியார்-அம்பேத்கர் கூட்டத்தில், ஜின்னா “பாகிஸ்தான்” அறிவித்ததிலேயே செத்து விட்டது. 1948ல் திமுக தோன்றியதிலிருந்து, ஈவேராவின் “திரவிடஸ்தான்” முழுமையாக சமாதிக்குள் சென்று, “திராவிட நாடு,” என்ற கோரிக்கையானது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையில், அண்ணா அதையும் மறந்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு,” போன்றவை குப்பையில் போடப் பட்டன. “தமிழ் நாடு” என்று பெரயர் மாற்றம் செய்து, அந்த களிப்பில் இருந்து விட்டனர். பிறகு, கருணாநிதி, “மாநில சுயயாட்சி,” என்றெல்லாம் கூறிக் கொண்டு, பொழுதை ஓட்டினார். இந்திரா காந்தியுடன் கூட்டு வைத்தவுடன், அதையும் மறந்தாகி விட்டது. பிறகு, பொழுது போகவில்லை என்றால், அவ்வப்பொழுது, கருணாநிதி, பேசுவதுண்டு. ஆனால், இடையில், இலங்கைக் குழுக்களால் மற்றும் தீவிரவாத கம்யூனிஸ்ட் இயக்கங்களால், “தமிழ் தேசியம்” போர்வையில், “தனித்தமிழ்நாடு” கோரிக்கையுடன், சில கூட்டங்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. அவை, “தமிழ் தேசியத்திற்கு” கொடி பிடித்தன. பாமக கூட 1980களில் “சுய நிர்ணயம்” என்றெல்லாம் பேசி, மாநாடு நடத்தியது. அதனால், “திராவிடத்தை” மறுத்தனர். “திராவிடத்தால் வீழ்ந்தோம்,” என்று குணா எழுதியது, திராவிடத்தைக் கேள்விக் கேட்டது. 1984ல் கொஞ்சம் அடங்கியது, வீரப்பன் மற்றும் பிரபாகரன் கொலையுண்ட பிறகு, அவை அடங்கி விட்டன. இருப்பினும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சாக்கில், அவ்வப்பொழுது, வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.

முரசொலி மாறனும், அவரது மகன்களும்திராவிடம் மற்றும் தமிழ் குழி தோண்டி புதைக்கப் பட்டது: திராவிடன் என்றெல்லாம் பேசி, ஊரை ஏமாற்றி, கருணாநிதியின் குடும்பம் பார்ப்பனப் பெண்ணை மறுமகளாக்கிக் கொண்டது. அரசியலிலும், வடக்கத்தி “இந்திரா காந்தி,” ஆரிய பார்ப்பனர் வாஜ்பேயி என்று கூட்டு வைத்துக் கொண்டு பிழைப்பை நடத்தினர். “வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது,” என்பதெல்லாம் அண்ணாவோடு போய் விட்டது. கருணாநிதி குடும்பம் வாழ்கிறது, மற்றவர்களின் குடும்பங்கள் தேய்கின்றன என்று மாறி விட்டது. கருணாநிதி, மத்திய அரசுடன் கூட்டு வைத்து, தேசியத்தில் கலந்து, வியாபாரம், வணிகம் என்ற ரீதியில் கம்பெனிகளைக் பெருக்கிக் கொண்டார். அத்தகைய தேசிய வியாபாரத்தில், தமிழும் வேகவில்லை, திராவிடமும் செல்லுபடியாகவில்லை, அதனால், “ஏன் வேண்டும், இந்த இன்ப திராவிடம்?,” என்று எழுதிய முரசொலி மாற வாரிசுகளே, பலமொழிகளில் டிவி-செனல்களை ஆரம்பித்து, கோடிகளில் வியாபாரத்தைப் பெருக்கினர். திரைப்பட வியாபாரமும் சேர்ந்த போது, எல்லா மொழிகளிலும் படங்களையும் கருணாநிதி சொந்தக் காரர்கள் எடுத்து, பணம் சம்பாதித்தனர். அரசியலுக்காக, அவ்வப்பொழுது, “இந்து எதிர்ப்பு” என்று மிரட்டி வந்ததோடு, திராவிடத்துவத்தின் தேசியம் ஒடுங்கியது. சன் பிக்சர்ஸ் படம் எடுத்தாலும், உதயநிதி நடித்தாலும், நீக்ரோ பெண்களை கதாநாயகிகளாகப் போடுவதில்லை. வெளுத்தத் தோல் பெண்களைத் தான் தேடிப் பிடித்து போடுகிறார்கள்!

திராவிடம், ஆரியத்துடன் கூட்டு வைப்பது ஏன்?: இவ்வாறு, திராவிடஸ்தான், திராவிட நாடு, திராவிட தேசம், திராவிடதேசியம், தமிழ் தேசியம், தேசிய மொழி இனங்கள், சுய ஆட்சி, மாநில சுய ஆட்சி, சுய நிர்ணயம், தமிழகம், தமிழ் தேசியம், தமிழீழம், அகண்ட தமிழகம் என்றெல்லாம் பேசிவந்தாலும், தேர்தலில் போட்டியிட, அண்ணாதுரை [முதலியார்], பிரிவினைவாதத்தை கைவிட்டார், தேர்தலில் நின்றார், முதலமைச்சர் ஆனார். கருணாநிதி, ஜாதியம் வைத்து, நெடுஞ்செழியினை [முதலியார்] ஓரம் கட்டி ஆட்சியினை பிடித்தார். எம்ஜிஆரை “மலையாளத்தான்” என்று வைது அரசியல் நடத்தி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று வெறுப்பைக் கக்கி, காலத்தை ஓட்டினார். ஆனால், திராவிடம் வீழ்ந்ததா, எழுந்ததா என்று அவ்வர்கள் தான் சொல்ல வேண்டும். இங்கு ஜாதியமும் இனவெறித்துவ ரீதியில், திராவிடத்துவத்தில் வேலை செய்வதைக் கவனிக்கலாம். அதனால், ஜாதிய அரசியல், சாதிய ஓட்டு வங்கி முதலியவை தொடர்ந்து வருகின்றன. ஆரிய-பார்ப்பனக் கட்சி பிஜேபியுடன், கருணாநிதி கூட்டு வைத்துக் கொண்டதும், இப்பொழுது அணியில் சேர தயாராக இருப்பதும், அவர்களது “செக்யூலரிஸ” அரசியலைக் காட்டுகிறது. திராவிடத்துவம் இனவெறித்துவம் போன்றே செயல்படுகிறது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[2]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

ஆரியதிராவிட கூட்டணியா, “திராவிடியன் ஸ்டாக்செய்யும் வேலையா?: ஸ்டாலினும், கிஷோர் பிரஷாந்த் என்ற ஆரிய-பார்ப்பன அரசியல் ஆலோசகரை கோடிகள் கொடுத்து, அரசியல் வியாபாரத்திற்கு வைத்துக் கொண்டு, “திராவிடத்துவ இந்துத்துவத்தை” கையில் எடுத்து, பார்ப்பன-பாஜக கூட்டணியைத் தோற்கடித்து, ஆட்சிக்கு வந்தாகி விட்டது. உடனே, “திராவிடியன் ஸ்டாக்,” என்று இனவெறியோடு குறிப்பிட்டு, “ஹாட்-அன்ட்-கோல்ட்” (Hot and cold) யுக்தி ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதிமுகவை ஒடுக்குவது, பாஜகவை மடக்குவது, எப்படியாவது, 2021-2026 வரை வெற்றிகரமாக ஆட்சியை நடத்துவது என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தாகி விட்டது. திமுக 2024 பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டு வைக்கவும் தயாராகத்தான் உள்ளது. ஒருவேளை பாஜக ஜெயிக்காது என்றால், திட்டம் மாறும்.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] இன்றும், டிவி-செனல் சீரியல்களில் அவ்வாறே காட்டி வருகின்றனர். “சுந்தரி” சீரியல் இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. காபி மிஷினை ரிப்பேருக்கு ஆக்கிய காட்சி வேறு, பிறகு காபி போட்டுக் கொடுத்து, வெள்ளைதோல் எஜமானி ஆனந்தம் அடையும் காட்சி வேறு.

[2] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.