நொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது!

மே 29, 2013

நொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது!

தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரு கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.

நொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார்.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா: கருணாநிதி ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[3]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை. மாறாக விலகிக் கொண்டார்[4]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[5]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[6] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[7]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[8]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[9]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் சோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[10].

சைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான  சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[11]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[12].  கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.
© வேதபிரகாஷ்

29-05-2013


[4] I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.

http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

[5] செம்மொழிமாநாட்டைதிசைதிருப்பமுயற்சி: கருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தைப் பார்க்கவும்.

https://chemozhi.wordpress.com/2010/06/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/

[11] Parvati Menon, Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘, an interview with Noboru Karashima in The Hindu dated December 2, 2010

[12] The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics asrajagurus by Rajaraja I and Rajendra I. These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.

http://www.thehindu.com/opinion/interview/unless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article925942.ece

Advertisements

சிந்துவெளித் தமிழ்ப் பெயர்கள்!

ஜூலை 17, 2010

சிந்துவெளித் தமிழ்ப் பெயர்கள்

http://www.viduthalai.periyar.org.in/20100717/snews12.html

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருது-கோளும் (Dravidian Hypothesis), திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன் மொழிவுகளும் இந்தி-யவியலின் மிக முக்கியமான ஆய்வுக்-களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரண்டு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக் கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அய்ராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள் சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்-தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்-பிற்கான வாய்ப்பைப் பெயராய்-வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப்பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாகரிகத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப்பெயர்கள் உதவக் கூடும் என்று அஸ்கோ பர்ப்போலா நம்புகிறார்.

மனித குலப் பண்பாட்டு வரலாறு ஒரு வகையில் பயணங்களின் வரலாறே. பயணப்பட்ட மனிதர்களோடு பயணித்-தது ஊர்ப்பெயர்களும் தான். அப்படி உலாப் போன ஊர்ப்பெயர்களின் தடங்களும், தடயங்களும் பூமியின் முதுகின் ஒவ்வொரு அங்குலத்திலும் உறைந்து கிடக்கின்றன _ பழைய பயணங்களின் பதிவுகளாய்.

இந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாகத் தமிழக ஊர்ப்பெயர்களைச் சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும், இந்நாடுகளின் ஊர்ப் பெயர்களைத் திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்-டுள்ள இடப்பெயர்கள் மற்றும் மானு-டப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்-துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்து உள்ளது.

ஒரு புறம், சிந்து சமவெளிப் பகுதி-யிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப்பெயர்கள் தற்போது தென்னிந்-தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப்பெயர்களை அச்சு மாறாமல் அப்படியே நினைவுப்-படுத்துகின்றன. அது மட்டுமன்றி, அவ்வடமேற்குப்புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்-களின், தலைநகரங்களின் பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழ்க் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்-பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத்-தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்தும் இடப்-பெயர்கள் இன்னும் வழக்கில் உள்ளன.

மறுபுறம், தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப்பெயர்களோடு ஒப்பிடத்தக்க இடப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதோடு ஏராளமான சிந்து வெளி மற்றும் வடமேற்குப்புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப்-பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப்பெயர்களாகவும் விளங்குகின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்குப் புதிய வெளிச்சம் தரும் என்பதில் அய்யமில்லை.

தரவுகள் வருமாறு:

1. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மொழிகளின் பெயர்களை நினைவுறுத்தும் இடப்-பெயர்கள் வடமேற்குப் புலங்களில் வழங்குகின்றன.

2. தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழ்-நாட்டில் வழங்கும் பல ஊர்ப் பெயர்களின் அச்சு மாறாத நகல் போன்ற பெயர்கள் வடமேற்குப் புலங்களில் உள்ளன. அவற்றில், சங்க இலக்கியப் பழைமை கொண்ட அமூர், ஆவூர், அய்யூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்களும் அடங்கும்.

3. தமிழ் ஊர்ப் பெயர்ப் பொதுக்-கூறுகளான (Suffixes) ஊர், நாடு, இல், ஆறு, வாயில், காடு, சேரி, துறை, குன்று, தலை, பள்ளி, பாக்கம், கானம், படப்பை, பொறை, சிறை, வாய், நகர், கூற்றம், கை, பேரி, பேர், பாரம், மணி, வரை மற்றும் மலை ஆகியவற்றை நினைவுறுத்தும் ஊர்ப்பெயர்கள் வடமேற்குப் புலங்களில் வழங்குகின்றன.

4. மேலும், தொல்காப்பியமும் ஏனைய சங்க இலக்கியங்களும் சுட்டும் நிலப் பிரிவுகளான (திணைப்பெயர்கள்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்கள் மேற் சொன்ன பகுதிகளில் உள்ளன.

5. சங்க இலக்கியங்களில் பதிவாகி-யுள்ள, அம்பர், கொற்கை, தொண்டி, தோன்றி, தொட்டி, கச்சி, காக்கை, கானம், கடவுட், கழாஅர், கொல்லி, கொங்கு, கோதை, கோழி, நாலை, நேரி, பாரம், பாழி, பூழி, பொத்தி, போஒர், மல்லி, மாந்தை, மோசி, வஞ்சி, வாகை, வீரை, துளு, மிளை போன்ற இடப்பெயர்கள் சிந்து வெளியிலும் அப்பாலும் அச்சு மாறாமல் அப்படியே வழங்குகின்றன.

6. மேற்சொன்ன பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்து சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியும்.

7. மேலும், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கிய நகரங்கள், போர்க்-களங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்களான வஞ்சி, தொண்டி, உறையூர், மதுரை, கூடல் கொற்கை, அட்டவாயில், கூடகாரம், தலையாலங்கானம், கழுமலம், காரியாறு, ஆமூர், வாகை, நேரி, பாழி போன்ற பெயர்களை நினைவுறுத்தும் இடப்-பெயர்கள்; பொதிகை, பொத்தி, பொதினி, அயிரை, ஆவி, நவிரம், பறம்பு, குதிரை போன்ற மலைப் பெயர்களை நினைவுறுத்தும் பெயர்கள்; கடல்-கோளில் அழிந்ததாகக் கருதப்படும் பஃறுளி ஆறு, குமரிக் கோடு, மற்றும் ஆற்றுப் பெயர்களான காவிரி, பொருநை, வையை, காரியா-று, சேயாறு போன்றவற்றை நினைவுறுத்தும் பெயர்-களும் உள்ளன. பக்ரோலி என்ற இடப்-பெயர் வழக்கிலுள்ள பகுதியிலேயே குமரி என்ற இடப்பெயர் வழங்கு-வதையும் இந்நிலப்பகுதி ஹரப்பா நாகரிகப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் புறக்கணிக்க இயலாது.

8. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தின் (வட்டார வழக்குப் பகுதிகள்) பட்டியலாக உரையாசிரியர்கள் குறிப்-பிடுகிற அனைத்து இடங்களையும் நினைவுறுத்தும் பெயர்களை வட-மேற்குப் புலங்களில் காணமுடிகிறது.

9. இடப் பெயர்களுக்கும் குடிப்-பெயர்கள், குலப்பெயர்கள், தனிமனிதர்-களின் பெயர்கள் போன்ற மானுடப் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அயர், களமர், மறவர், கோவலர், எயினர், காளை, விடலை, கானவர், மிளி, இடையர், பொதுவர் போன்ற குடிப்பெயர்களோடும், கொங்கர், கோசர், அண்டர், மழவர், மலையர், குறவர், ஆவியர் போன்ற பெயர்களோடும் நெருங்கிய தொடர்பு காட்டும் இடப்பெயர்கள் அங்கு உள்ளன.

10. சேர சோழ பாண்டியர் எனும் தமிழ் மூவரின் குடிப்பெயர்களையும், பொறை, கோதை, உதியன், ஆதன், குட்டுவர், கிள்ளி, வளவர், வழுதி, செழி-யன், மாறன் எனும் குலப்பெயர்/ குடும்பப் பெயர்களையும் ஒத்த பெயர்கள் அப்படியே இடப்பெயர்களாக விளங்குவது வியப்பை அளிக்கிறது.

11. இது மட்டுமன்றி, கரிகாலன், சிபி, கவேரன், மணக்கிள்ளி, செங்கணான், சேல்கெழு, களங்காய் கண்ணி, அந்து-வன், மாந்தரன், மார்பன், மாரிவண், மாறன் கீர்த்தி, காய்சின வழுதி போன்ற தமிழ் மன்னர்களின் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் மேற்-சொன்ன பகுதிகளில் வழங்குகின்றன.

12. கடையெழு வள்ளல்களின் பெயர்-களும், வேளிர், அதியர் மற்றும் ஏனைய குறுநிலக் குலத் தோன்றல்களின் பெயர்-கள், அவர்தம் நிலப்-பகுதிகள், ஊர்கள், காடுகள், மலைகள், போரிட்ட களங்கள் மட்டுமன்றி போர் செய்த எதிரிகளின் பெயர்களும் ஊர்ப் பெயராய் விளங்கி நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு வித்தியாசமான பல சங்கப் பெயர்கள் குறித்த நமது வினாக்களுக்கு விடையும் அளிக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி, தித்தன், திதியன், பன்னி, நள்ளி, கிள்ளி, பேகன், கோடன், பாரி, பிட்டன், கொற்றன், பிண்டன், மத்தி, கட்டி, மூவன், அன்னி, மிஞிலி, கீரன், அந்து-வன், அழிசி, வெளியன், உதியன் மற்றும் ஆதன் ஆகிய பெயர்களை அப்படியே நினைவுக்குக் கொண்டு வரும் பெயர்களை நமது ஆய்வு அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளோடு பட்டியலிடுகிறது.

13. தமிழ் முனிவர் அகத்தியர் மர-போடு தொடர்-புடைய இடப்பெயர்கள், மலைப்பெயர்-கள், கண்ணகி கதையோடு தொடர்புடைய இடப்பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்கள், சங்க இலக்கியங்கள் கூறும் கடவுட் பெயர்கள், முருகன் வழி-பாட்டோடு தொடர்புடைய பெயர்கள் என்று இந்த ஒப்புமைப் பட்டியல் இன்னும் நீள்கிறது.

மேற்சுட்டியபடி, சிந்து சமவெளி நாகரிகத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை சிந்து ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்-பாலும் வழங்கும் இடப்பெயர்வுகளைக் கொண்டு நிறுவுவது இயலும் எனில் அத்தொடர்பின் எச்சங்கள் தொன்மை-யின் தொப்புள் கொடியாய்த் தமிழ் நிலத்திலும் அங்கு வாழும் மாந்தர்தம் மாறாத அடையாளங்களி-லும் தென்பட-லாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்புடைய-தாகும். தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்-காலங்-களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழ்வாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்து வெளித் திராவிடத் தொடர்புக்குச் சான்றளிக்-கின்றன.

கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி–யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.

கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்-றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்ற-ளிக்கக் கூடும்.

இத் தரவுகளின் பெருவாரியான எண்ணிக்கை, பொருண்மை சார்ந்த தொகுப்பாக (Thematic cluster) வழங்கும் தன்மை, குஜராத், மகாராஷ்டிர மாநில ஊர்ப் பெயர்களில் காணப்படும் திராவிடக் கூறுகள் புலப்படுத்தும் பயன்பாட்டுத் தொடர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் கொண்-டால் இந்த ஒப்புமை யாவும் எதேச்சையாக நிகழ வாய்ப்பு இல்லை என்ற உண்மை தெள்ளத் தெளிவாகும்.

சிந்து சமவெளிப் பகுதியில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் ஒப்புமைச் சான்றாய் உறைந்-திருக்கும் ஊர்ப் பெயர்கள் மனித குல வரலாற்று மைல்கற்கள். பழைய பயணங்களின் பாதச் சுவடு-கள். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய வாய் மொழி வரலாறுகள் கற்பனை அல்ல எனக் காட்டும் வழித்துணைகள் பஃறுளி ஆற்றின் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டின் தேட-லுக்கான புதிய பரிந்துரைகள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தெளிவான உலகக் கண்-ணோட்டத்தின் பின்புலக் காரணிகள்.

புதுகைத் தென்றல் ஜூலை 2010

கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி

ஜூன் 30, 2010

கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28907

அரசியல் சார்பு ஆட்களுக்கு மரியாதை என்ற நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் அவமதிப்பிற்குள்ளாகினர்: கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடிகோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் கருத்தரங்கம் என்பது வருங்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.ஆனால், வெளிநாட்டு அறிஞர்களும், மற்ற அறிஞர்களும் அதிக சிரமப்பட்டனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். கட்சி, தெரிந்தவர்கள், ஜால்ராக்கள் என்றிருந்த ஆட்கள் எல்லோரும் பிழைத்துக் கொண்டனர். ஐந்து நாட்களிலும் நன்றாக அனுபவித்தனர்.

ஆய்வுக்கட்டுரைகளில் குளறுபடி: ஆய்வுக்கட்டுரை என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும் அம்சம். எல்லா ஆய்வரங்கங்களுக்கும் எல்லாரும் செல்ல முடியாது என்பதை அரசு முன்கூட்டியே அறியும். மாநாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களும் அறிவர். அரசு வெளியிட்ட தகவலின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த ஓட்டல்கள் எண்ணிக்கை 92. மொத்தம் 2,605 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தங்கும் இடங்களும், உணவும், அவர்களுக்கு பாதுகாப்பும், அவர்களை கூட்டிச் செல்ல தனி வண்டிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 50 நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் தாக்கல் செய்த கட்டுரைகள் 152 என்றும் கூறப்படுகிறது.

பல ஆய்வுக்கட்டுரைகள் விடுபடுள்ளன: பல ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்ட தேகிகளில் மின்னஞ்சல் மூலம் அனுப்பியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் பெயர்கள் பதிவு செய்யப் பட்டது என்று மின்னஞ்சல் செய்தி வந்தாலும், கடிதங்கள் அனுப்பப்பபடவில்லை. கட்டுரைகள் அனுப்பினாலும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கட்டுரைகள் உரிய தேதிகளில் அனுப்பினாலும், அவை, ஏதோ க்ஆரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மொத்த கட்டுரைகள் 913. ஆகவே உலகத் தனிமொழி,செம்மொழியை ஆய்வு செய்து தரப்பட்ட தகவல்கள் இனி நூலாக அல்லது குறுந்தகடாக வெளிவரும் என்பது வேறு விஷயம். அதே சமயம் கோவைக்கு வந்து ஆய்வரங்குகளில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் மாபெரும் அறிஞர்கள் சொல்லும் தகவல்களை நேரடியாகக் கேட்டு மகிழும் வாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வம் உள்ள ஆய்வாளர்களும், மாணவர்களும் இழந்தனர். இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் ஏற்பட்ட கெடுபிடிகள் ஒரு காரணம். இந்த அரங்குகளில் பங்கேற்று அரிய தகவல்களை கேட்க, நுழைவு அட்டை இல்லாவிட்டால் அரங்கில் நுழைய முடியாது.

நுழைவு அட்டை- மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் என்று அலைக்கழிக்கப் பட்ட ஆய்வாளர்கள்: நுழைவு அட்டை இருந்தும், மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்களுடன் இணைந்தில்லாததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பட்டிமன்றம் பங்கேற்றோர் எண்ணிக்கையை இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதைவிட, இங்கு பெறப்பட்ட கருத்தாய்வுகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டதற்கு சிலர் வருந்தினர். தாங்களே நேரடியாக அறிஞர்கள் பேசுவதைக் கேட்பதுடன், முக்கிய விளக்கங்கள் எனில் அதை அங்கேயே கேட்டுப் பெற வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் கருத்து தெரிவித்தனர்.மேலும் மேலைநாடுகளில், மற்ற பெரிய அளவில் நடக்கும் ஆய்வரங்குகள் என்பதில் பெரிய கல்லூரிகள் அல்லது தனியாக முழு வசதி கொண்ட இடங்களை தேர்வு செய்வது வழக்கம்.
ஆராய்ச்சி பின்தள்ளப்பட்டுவிட்டது, ஜால்ராக்கள் முன்னே வந்துவிட்டன: அதோடு அதில் பங்கேற்போருக்கு மதிய உணவு அல்லது காலைச் சிற்றுண்டிக்கு டோக்கன் தருவதும் உண்டு. அதன் மூலம் அங்கு வரும் அறிஞர்களும், மற்றவர்களும் இயல்பாக எந்தவித நெருக்கடியும் இன்றி அறிவுப்பூர்வமான கருத்துக்களை கேட்டு செல்வது உண்டு. உரிய நடைமுறைகளை பின்பற்றியிருந்தால், இன்னும் சற்று அதிகமாக ஆய்வரங்கில் அறிஞர்கள் எளிதாக கலந்து கொண்டு சிறப்பித்திருப்பர்.ஐந்து நாட்கள் நடந்த மாநாட்டில் நிறைய புதுக் கருத்துக்களை கேட்டு தமிழ் மொழிச் சிறப்பை மேலும் அறிய விரும்பிய பலரும் இந்த நிலைமை கண்டு ஒன்று அல்லது இரண்டு ஆய்வரங்குகள் உடன் முடித்துக்கொண்டு, தங்கள் அறைகளுக்கு திரும்பி விட்டனர். இந்த மாநாட்டின் பிரமாண்டத்தைக் கண்டு அதிசயித்த அவர்கள், அத்துடன் மனநிறைவு பெற்று திரும்பினதாக தெரிவித்தனர்.

சங்க காலம் என்பது எப்போது? நாணய ஆராய்ச்சியில் முக்கிய கண்டுபிடிப்புகள்

ஜூன் 29, 2010

சங்க காலம் என்பது எப்போது? :டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி

கடந்த 1894 ஆம் ஆண்டில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், சங்க இலக்கியமான  புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்த நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றிய செய்திகள் இருந்தன. பல மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் அறிந்தனர். ஆனால் அத்தகவல்களை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் கிடைக்காததால் அகில இந்திய அளவில் வரலாற்று ஆசிரியர்கள் அதிகமாக கண்டுகொள்ளவில்லை.

இந்நூல் வெளியாகி சுமார் நூறு ஆண்டுகளில் சதுர வடிவிலான செப்பு நாணயத்தின் மூலம் ஒரு முடிவு ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு நான் ஆய்விற்காக சில செப்புக்காசுகளை ஒரு மதுரை வணிகரிடம் வாங்கினேன். வாங்கிய காசு ஒன்றில் தமிழ் – பிராமி  எழுத்துமுறையில் “பெருவழுதி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. காசின் முன்புறம் நின்ற நிலையில் குதிரை ஒன்று இருந்தது. இக்காசைச் சங்ககால மன்னர் வெளியிட்டார் என்றும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட பெயர் காசிலும் இருக்கிறது என்பதும் உறுதியானது. இக்காசின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். இக்காசின் பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னமும் இருந்தது. ஆக பின்புறம், கோட்டு வடிவம் உள்ள காசுகள் அனைத்தும் சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்டனர் என்பது உறுதியானது.

Wildass-oranger-horse

Wildass-oranger-horse

சென்ற நூற்றாண்டில் மதுரை மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் வெள்ளிக்காசுகள் அடங்கிய புதையலை அரசு கைப்பற்றியது. அந்த புதையலில் இருந்த காசுகள் அனைத்தும் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் வழக்கில் இருந்த வெள்ளி முத்திரைக் காசுகளைப் போல் இருந்தன. வரலாற்று அறிஞர் டாக்டர் கேஸாம்பி அவர்கள் இக்காசுகள் அனைத்தும் மவுரிய பேரரசின் இறுதிக்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று எழுதினார். ஆனால் அக்காசுகளின் பின்புறத்தில் கோட்டு வடிவுள்ள மீன் சின்னம் மட்டும்தான் உள்ளது என்பதன் காரணமாக அக்காசுகளை சங்ககால பாண்டியர்கள்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று எழுதினேன். அக்கருத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

இந்த ஆராய்ச்சி மூலம், சங்க கால இலக்கியங்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும், புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்கள், கற்பனையானவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

சங்க கால சேரர் காசுகள் :பாண்டியர்களைப் போல், சங்க கால சேர மன்னர்களும், காசுகள் வெளிட்டுள்ளனர் என்பது கரூர், அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்த காசுகள் மூலம் தெரியவந்துள்ளது. சங்க கால சேர மன்னர்களின் தலைநகரமாக கரூர் விளங்கியது. கிரேக்க, ரோமானிய மன்னர்களுடன் சேர மன்னர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முசிறி துறைமுகம் வழியே, வெளிநாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, இறங்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.சேர மன்னர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ரோமானிய தாக்கம் உள்ள. செப்பு காசுகளை தற்போது பார்ப்போம்.

கொல்லிப்புறை காசு:கொல்லிப்புறை காசில் முன்புறம், ஒரு வீரர், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலில் நிற்கிறார். வலது கையில் கத்தி, நிலத்தில் குத்தியபடி உள்ளது. இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கையில், தரையை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேடயமும் உள்ளது. தொப்பி அணிந்துள்ளார். அவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது. இத்தோரணவாயிலைச் சுற்றி கொல்லிப்புறை என்ற பெயர் தமிழ் –  பிராமி எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. காசின் பின்புறம், வில், அம்பு மற்றும் பிற சின்னங்கள் உள்ளன.

கொல்லிப்புறைக்காசு

கொல்லிப்புறைக்காசு

கொல்லிரும்புறை காசு:முந்தையக் காசுகள்  போலவே, கொல்லிரும்புறை காசின் முன்புறம், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலின் முன், ஒரு வீரர் நின்று கொண்டிருக்கிறார். அவர் வலது கையில் ஒரு கத்தி; இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். ஒரு தொப்பி அணிந்துள்ளார். இவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது.இந்த சின்னத்தைச் சுற்றி தமிழ் – பிராமியில், “கொல்லிரும்புறை’ என்ற பெயர், இடது புறத்திலிருந்து வலது புறத்தை நோக்கி, வளைந்து எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம், ஒரு வில்லும், அம்பும், மற்ற சின்னங்களுடன் காணப்படுகிறது.இந்த இரு காசுகளின் முன்புறமும் நின்றிருக்கும் வீரர் சின்னங்கள், மன்னர் அகஸ்டஸ் மற்றும் அவருக்குப் பிந்தைய மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் காணப்படும் சின்னங்களை ஒத்துள்ளன.

அகஸ்டஸ் காசு 27-128

அகஸ்டஸ் காசு 27-128

கி.மு. 27 முதல் கி.பி. 128 வரை ஆண்ட ரோமானிய பேரரசர்கள் அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ மற்றும் ஹத்ரியன் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகளின் பின்புறம், இரண்டு அல்லது நான்கு தூண்கள் கொண்ட தோரண வாயிலில் ஓர் உருவம் நிற்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசுகள் பெரும்பாலானவற்றில், அந்த உருவம் பேரரசரின் உருவமாக கருதப்படுகிறது.

இந்த காசுகளில் உள்ள சின்னங்களைப் போலவே, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை ஆகிய சேர மன்னர்கள், தாங்கள் வெளியிட்ட காசுகளில் உருவங்கைள பதித்திருக்கின்றனர். இரண்டு தூண்கள் சின்னம் கொண்ட காசுகளை அகஸ்டஸ் பேரரசர் வெளியிட்டுள்ளார். சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும், இரண்டு தூண்கள்தான் உள்ளன. எனவே, இந்த இரு மன்னர்கள் வெளியிட்ட காசுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என நான் கருதுகிறேன்.

மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:சங்க கால சேரர்கள், வெள்ளி காசுகளும் வெளியிட்டுள்ளனர். தமிழ் – பிராமி எழுத்தில், மாக்கோதை என்று எழுதப்பட்ட காசு ஒன்றை நான் கண்டுபிடித்துள்ளேன். தலையில், ரோமானிய தலைக்கவசத்தை மன்னர் அணிந்து இருக்கலாம் என கருதுகிறேன். காசின் பின்புறம், எந்த சின்னமும் பொறிக்கப்படாமல், வெற்றாக உள்ளது.

மாக்கோதை - முன்புறம்

மாக்கோதை - முன்புறம்

என்னிடம் உள்ள மாக்கோதை காசுகளில் ஒன்று, வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். இந்தக்காசு, அது வெளிவந்த காலம் மற்றும் உலோகம் குறித்து சில தகவல்களை தந்தது. அந்தக் காசின் முன்புறம், மன்னர் கழுத்தின் கீழ் நான்கு சிறிய ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ரோமானி காசுகளில் காணப்படும் எழுத்துக்களின் சிதைந்த வடிவமாக அவை தோன்றின. காசின் பின்புறம், இரண்டு உருவங்கள் நிற்பது போன்ற வரைவுகள் காணப்பட்டன.

கவனமாக ஆராய்ந்தபோது, அவை ஏற்கனவே, அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளி காசை உருக்கி, அக்காசின் மேல் மறு அச்சு பதிந்து மாக்கோதையின் காசை உருவாக்கினர் என்பதை உணர்ந்தேன். பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளிக் காசின் முன்புறத்தில் அகஸ்டஸின் உருவமும், பின்புறம், அவருடைய பேரன்கள் கையஸ் மற்றும் லூசியஸ் ஆகியோர் நிற்பது போலவும் பொறிக்கப்பட்ட வெள்ளி காசை பயன்படுத்தியதால் மாக்கோதை காசுகள் உருவாகின என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து 1998ல், தென்னிந்திய நாணயங்கள் குறித்த ஆண்டுவிழா மலரில் கட்டுரை வெளிவந்துள்ளது.

அகஸ்டஸ் காசு

அகஸ்டஸ் காசு

அகஸ்டஸ் வெள்ளிக் காசில் சூடு ஏற்றி, காசின் விளிம்புப் பகுதிகளை வெட்டி விட்டு சூடேற்றிய காசை பிடிப்புள்ள அச்சின் மேற்பகுதியில் வைத்து, அக்காசின்மேல் மாக்கோதை காசின் அச்சைப் பொருத்தி பலமாக அடிக்கும்போது அந்த மாக்கோதை அச்சின் சின்னம் அகஸ்டஸ் வெள்ளிக் காசில் பதிவாகிறது. பொதுவாக, அதிக சூட்டில் ஒரு காசை மறு அச்சு செய்யும்போது, முந்தைய சின்னங்கள் முற்றிலும் அழிந்து, புதிய சின்னமே ஏறும். காசை போதுமான அளவு சூடேற்றாமல் அச்சிட்டால், பழைய சின்னங்கள் சில, அப்படியே தங்கிவிடும்.

மாக்கோதை

மாக்கோதை

மேற்கண்ட காசு, சரியாக சூடேற்றப்படாத காசாக, புது சின்னங்களுடன், பழைய சின்னங்களும் சேர்ந்து காணப்படுகிறது. அகஸ்டஸ் காசின் மீது மறு அச்சிற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு அச்சுகளில் ஒன்று மாக்கோதை தலையுடைய அச்சு முன்புறமும், மற்றொன்று வெற்றாக பின்புறமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. அதுவும், அகஸ்டஸ் மற்றும் டைபீரியஸ் காசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், கி.மு. 2ம் ஆண்டு முதல் கி.பி. 4ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சேர மன்னர் மாக்கோதை நாணயம் வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அதேபோல், குட்டுவன் கோதையும் காசு வெளியிட்டுள்ளார். இதிலும் ரோமானிய தாக்கம் தெரிகிறது. இந்த காசு கி.பி.100 முதல் 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இவை தவிர, அதியமானின் மோதிரம் ஒன்றை, கரூரிலிருந்து நான் வாங்கினேன். அந்த மோதிரத்தில், தமிழ் பிராமியில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. மோதிரத்தில் இருக்கும் அந்த பெயரை அதியமான் என்று காலம் சென்ற தொல் எழுத்தறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் படித்துரைத்திருக்கிறார். இந்த மோதிரம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.

மோதிரத்தில் பிரம்மி எழுத்துகள்

மோதிரத்தில் பிரம்மி எழுத்துகள்

மேலே குறிப்பிட்ட காசுகள் மற்றும் மோதிரத்தின் வாயிலாக, சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ரோமானிய காசுகளின் காலம் தெளிவாக தெரிந்ததால், அதை ஒத்துள்ள சேர காசுகளும் அக்காலத்தைச் சார்ந்தவையே என்பதும் தெளிவாகிறது.சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் ஆகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டும் சங்க காலத்தை கணித்தும், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, கோவையில் நடந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று படித்த கட்டுரையின் தமிழாக்கம்.

பன்னாட்டு மொழிகளுக்கும் தாய் – தமிழ்! 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு!

ஜூன் 28, 2010

பன்னாட்டு மொழிகளுக்கும் தாய் – தமிழ்! – 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு

http://viduthalai.periyar.org.in/20100628/news19.html

கோவை, ஜூன் 28_ தமிழ் மொழி 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், அது பல சர்வதேச மொழி-களுக்கு தாய்மொழியாக விளங்குவதாகவும் செம்-மொழி மாநாட்டு கருத்-தரங்கில் நேற்று முன்தினம் பேச்-சாளர்கள் தெரிவித்தனர். உலகத்தமிழ் செம்-மொழி மாநாட்டின் 4ஆவது நாளான நேற்றுமுன்தினம் பொது அரங்க நிகழ்ச்-சியில் செம்மொழி தகுதி என்ற தலைப்பில் கருத்-தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் மன்னர்மன்னன் தொடங்கி-வைத்தார். பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி தலைமை தாங்கி பேசி-னார். தமிழ் தொன்மை-யானது மட்டுமின்றி இலக்கிய வளம் மிகுந்-தது. சங்க கால இலக்-கியம் படைத்த புலவர்-கள் 475 பேர். கி.மு. 2 முதல் கி.பி. 2-_ஆம் நூற்-றாண்டுவரையிலான காலத்தில் 500 புலவர்-களை கொண்ட தமிழ் மொழிபோல் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை. இதை அறிஞர்-கள் சிறப்பான முறையில் ஆய்வு செய்யவேண்டும். இது மாபெரும் அதிசயம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மூத்த மொழி

செம்மொழி தகுதி தொன்மையில்: என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்-தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்-கப்படும் தொடைகள் 8 ஆயிரத்து 556 ஆகும். இந்த தொடைவகைகளில் கூறப்படும் தமிழ்மொழி-யின் காலம் 7 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்-டுக்கு முன்பு தோன்றியது என தொல்-காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்-பட்டது என்றால் மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்-கும் என்றே கருத தோன்-றுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மொழிகளுக்கெல்லாம் தாய்!

செம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில்: கருத்தரங்கில் செம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில் என்ற தலைப்பில் ஜி.ஜான் சாமுவேல் பேசும்போது கூறியதாவது: 18ஆம் நூற்றாண்-டுக்கு பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒரே குடும்-பத்தை சேர்ந்த மொழி-கள் என்று கண்டறிந்-தோம். அதன்பிறகு திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய்மொழி என தெரிந்தது. 1856இல் மொழிக்கு தமிழ் தாய்-மொழி என்றும், 1906இல் தமிழ் 14 மொழிக்கு தாய் என்றும் அறியப்பட்டது. இப்போது தமிழ் 30 மொழிகளுக்கு தாயாக விளங்குகிறது. அதே-போல் சுமேரிய, செமித் மொழிகளுக்கும், ஜப்-பானிய, கொரிய மொழி களுக்கும், தமிழுக்கும் தொடர்பு இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்-டறிந்து உள்ளோம். அத-னால் பல சர்வதேச மொழிகளுக்கும் தாயாக தமிழ் விளங்கி இருக்கும் என்ற அய்யப்பாடுகூட எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விருந்-தோம்பல் சிறப்பு செம்-மொழி தகுதி, பண்-பாட்டுக் கொடையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் வளனரசு பேசிய-தாவது: தமிழ் இலக்கியங்-களில் பத்துப்-பாட்டு, எட்டுத்தொகை, முத்-தொள்-ளாயிரம், திருக்-குறள் போன்றவை தமிழரின் தனித்தமிழ் பண்பாடுகளை எடுத்து சொல்கின்றன. தொல்-காப்பியத்தில் உள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்ற பாடலும் பண்பாட்டை விளக்கு-கின்றன. பண்பாடு என்று பார்க்கும்போது தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று வகுக்கிறது. உலகிலேயே தமிழர்-களின் விருந்தோம்பல் பண்பு சிறப்பானது. அதேபோல் கலைகளி-லும் வளர்ந்தவன் தமிழன். அதனால் தமிழ் மொழியின் பண்பாடு-களுக்கு ஈடு இணை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

செம்மொழி தகுதி, இலக்கிய செழுமையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் ஆறு.அழகப்பன் பேசிய-தாவது:: தமிழ் மொழி ஒரு கோவில்-போன்றது. கோவிலின் சுவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற மண்களால் உருவாக்கப்-பட்டதாக கருதலாம். முதல் மாடத்தை சங்க இலக்கியம் என்றும், 2ஆவது மாடத்தை நீதி நூல்கள் என்றும், 3ஆவது மாடத்தை அய்ம்-பெருங்காப்பியங்-களாகவும், 4ஆவது மாடத்தை சைவ சித்தாந்த நூல்களாகவும், 5-ஆவது மாடத்தை பிர-பந்தமாகவும், 6ஆவது மாடத்தை தனிப்பாடல்-களாகவும், 7ஆவது மாடத்தை இஸ்லாமிய இலக்கியமாகவும், கிறிஸ்-தவ இலக்கியமாகவும் கருதலாம். அந்த கோவி-லின் 9 கலசங்களாக இயல், இசை, நாடகம், அறிவியல், ஊடகம், மொழி பெயர்ப்பு, உரை-நடை, நாட்டுப்புறவியல், செம்மொழி என்றும் அலங்கரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ் மொழி சிறப்புடையது. இவ்வாறு அவர் பேசினார். பொதுவுடைமைச் சிந்தனைகள்

செம்-மொழி தகுதி, உலகப்-பொதுமையில் என்ற தலைப்பில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: பொதுவுடைமை தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு எழு-தப்பட்டு உள்ளன. திருக்-குறளில் பல குறள்கள் உலக மக்கள் அனைவ-ராலும் ஏற்கும் வகையில் உள்ளது. திருக்குறள்-போல் உலகில் பிற-மொழி நூல்களில் எந்த நூலும் பொதுவுடைமை சிந்தனை-யோடு இருந்த-தில்லை. உடலில் இருப்-பது ஊனமல்ல. உழைக்-கும் தகுதி உடையவன் உழைக்காமல் இருந்தால் அவனே ஊனன் என்-கிறான் வள்ளுவன். பணத்தை தொழிலாக்கு, தொழிலை உழைப்பாக்கு, உழைப்பை செல்வமாக்கு என்று அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் வள்ளுவன் கூறி இருக்கிறான். பாரதி, பாவேந்தர் பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள் என தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற நூல்கள் பொதுவு-டைமையை பிரதிபலிக்கின்றன. இவ்-வாறு அவர் பேசினார்.

செம்மொழி தகுதி, இலக்கணச் செப்பத்தில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் இலக்குவனார் மறைமலை பேசிய-தாவது:: உலகறிந்த இலக்கண நூல்களில் தொல்காப்-பியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொல்காப்-பியம் எழுத்து, சொல், பொருள் என 3 அதி-காரங்-களை கொண்டது. தொல்காப்பியர் தமிழில் 30 எழுத்துகள்தான் இருப்ப-தாக கூறுகிறார். அதை அவர் சொன்ன காலம் 3000 ஆண்டுக்கு முன்பு… சொல் அதிகாரம் என்று பார்க்கும்போது தமிழில் உள்ள ஒருவர் என்ற சொல் உலகில் எந்த மொழியிலும் இல்லாதது. பொருள் அதிகாரத்தில் ஆண்பால், பெண்பால் என்று மனித இனத்தை பிரித்துக்-காட்டும் தொல்காப்பியர் பெண்கள் அறிவு மிகுந்த-வர்களாக காட்டியுள்-ளார். இவ்வாறு அவர் பேசினார்.

சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில்? : கலந்தாய்வரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்

ஜூன் 28, 2010

சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில்? : கலந்தாய்வரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27587

சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு: கோவை : “சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது எந்த நூற்றாண்டில்’ என்பது பற்றி செம்மொழி மாநாட்டில் நடந்த ஆய்வரங்கத்தில், தமிழறிஞர்கள் விவாதித்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் ஆய்வரங்கத்தில், சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு செய்ய இதுவரை நடத்திய ஆய்வுகள் குறித்த விவாதம் மாநாட்டின் நான்காவது நாளில் நடந்தது. கொடிசியா வளாகத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடந்த இந்த கலந்தாய்வில் தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார்.

சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து: பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் தலைமை வகித்துப் பேசியதாவது: “சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை. அதனால் அதற்கேற்ப சரியான ஆதாரங்களை கொடுக்கும் அளவிற்கு ஆய்வுகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது: பேராசிரியர் பொற்கோ(பொன் .கோதண்டராமன்) பேசுகையில்,””பிற்காலத்தில் எழுந்த உளப்பாட்டுத் தன்மைப்பன்மை (நாம் என்பது) சங்க இலக்கியங்களில் இல்லை. இன்னும், “செய்யா’ போன்ற வினையெச்ச வடிவங்கள் மொழிப்பழமையைக் காட்டுகின்றன. சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது’ என்றார்.

சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது: பேராசிரியர் மணவாளன் பேசுகையில்,””பிறமொழிகளிடம் இல்லாத பொருளிலக்கண மரபை உருவாக்கிய சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது’ என்றார். பேராசிரியர் கந்தசாமி பேசுகையில், “பக்தி இலக்கியத்தில் மானுடக்காதல் பொருளை மையப்படுத்தும் இலக்கிய மரபு, யாப்புமுறை, தத்துவ சிந்தனை, அதியமான் கல்வெட்டுச்சான்று ஆகியவற்றின் அடிப்படையில் சங்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது’ என்று கூறினார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்: தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “”பெருவழுதி, கொல்லிப்புறை, மாக்கோதை காசுகள் மற்றும் அதியமான் மோதிரத்தில் பிராமி எழுத்துக்கள் இருப்பதை பார்க்கும் போது நாணயவியல் சான்றுகளில் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்,” என்று கூறினார்.

கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன: பேராசிரியை சம்பகலெட்சுமி பேசுகையில்,” அரசியல் உருவாக்கம், சமூக அமைப்பு, வணிகவளர்ச்சி, நகர உருவாக்கம், சமய நிலை எழுத்துருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சங்கப்பாடல்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன’ என்றார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு., முதல் நூற்றாண்டை ஒட்டியே அமையும்: முனைவர் நாகசாமி பேசுகையில்,” சங்க காலத்திய பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி சொற்களைக் காண முடியாது. அதியமான், கொற்றன், பெருங்கடுக்கோ, பிட்டன் போன்றவர்களின் பெயர்கள் கி.மு., முதல் நூற்றாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும், மட்பாண்ட ஓடுகளிலும் காணப்படுகின்றன. எனவே சங்ககால இலக்கியங்கள் இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்’ என்றார்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்: பேராசிரியர் சுப்பராயலு பேசுகையில்,”தமிழகத்திலுள்ள அரிக்கமேடு, கரூர், அழகன்குளம், கொடுமணல், கொற்கை போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தமிழகத்தில் 120 இடங்களில் பதிவாகியிருக்கும் இரும்புக் காலச்சின்னங்கள், புலிமான் கோம்பை, தாதப்பட்டி போன்ற இடங்களில் கிடைத்த எழுத்துடை நடுகற்கள், சங்கப்பாடல்களில் காணப்படும் ஆகோள் போன்ற சொற்கள் பதிவு செய்திருக்கும் எழுத்துக்களை பார்த்தால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் ‘ என்றார்.

சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு: பேராசிரியர் சண்முகம் பேசுகையில், ” தமிழக ரோமானிய வணிகம் பற்றிய பயணக்குறிப்புகள் இரு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட வணிக உடன்படிக்கைகளில் காணப்படும் பெயர்கள் சாத்தன், கணணன், கொற்றப்பூமான் போன்ற தமிழ் வணிகர் பெயர்கள், முசிறி போன்ற இடங்களில் நடந்த வாணிபத்தை வருணிக்கும் சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது’ என்றார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம்: பேராசிரியர்கள் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கொடுத்த கருத்துக்களின் படி சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளிவோடு உறுதி செய்கின்றன, என்று ஆய்வரங்கம் நிறைவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, கனிமொழி எம்.பி., ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விமர்சனம்:

 1. பெரும்பாலானக் கருத்துகள் அரைத்தமாவை அரைத்துவிட்டது போன்றுதான் உள்ளது, ஏனெனில் புதியதாக அவர்கள் ஒன்றும் சொல்லிவிடவில்லை.
 2. 100-200 வருடங்களில் ஏற்கெனெவே அச்சிடப்பட்டுள்ள புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலேயே, இதைவிட ஏராளமான விஷயங்கள் உள்ளன.
 3. வீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மு. ராகவ ஐயங்கார், பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.டி. சிவராஜப்பிள்ளை, ………….முதலியோர் ஏற்கெனெவே அலசியிருப்பதைவிட புதியதாக ஒன்றும் காணோம்.
 4. காட்டுக்கழுதையே மேற்கிலிருந்து சிந்துசமவெளியாக இந்தியாவில் நுழைந்தது என்று அஸ்கோ பார்போல இதே மாநாட்டில் கூறும்போது, இவர்கள் இப்படி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது வேடிக்கையே.
 5. இந்த காலம் என்று சொல்லும்போது, ஆதாரங்களை சொல்ல வேண்டும். விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, – …………சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை, ……..இயற்றப்பட்டிருக்கலாம், இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்…………., சேர்ந்ததாக இருக்கலாம்…………….., என்று நீட்டி மடக்கிக் கொண்டிருந்தால், என்னத்தான் ஆராய்ச்சியின் தன்மை வெளிப்படுகிறது என்பது தெரியவில்லை.
 6. தமிழ் பேசத்தெரியும்-மேடையிலே மணிக்கணக்காகப் பேசத்தெரியும்-என்ற ரீதியில் உள்ளவர்கள் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக அல்லது அவ்வாறு நடித்துப் பேசி கற்றுத்தேர்ந்தவர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டால், இப்படித்தான் இருக்கும்.
 7. ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதுதான் சரி என்ற ரீதியில், வட்டத்தைப் போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்றனரேத் தவிர, மற்றவகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை.
 8. இப்படி சங்ககாலத்தை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போனால், பிறகென்ன செம்மொழி காலம், செவ்வியக்காலம், பொற்காலம்…………………….என்ற கூப்பாடெல்லாம்?
 9. பல்-கல்-மரம்-உலோகம் ……………….என்ற என்ற வளர்ச்சிக் காலத்தை ஏன் கணக்கீடு செய்யவில்லை?
 10. சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது – என்றால், தமிழ் எப்படித் தோன்றியது, தமிழ் எப்பொழுது எழுதப்பட்டது, ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது, எங்கே-எப்பொழுது எழுதப்பட்டது…………என்ற முக்கியமான கேள்விகளுக்கும் விடை காணவேண்டும்.
 11. எல்லாவற்றிற்கும் மேலாக, சமஸ்கிருதத்திலிருந்து ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு சமஸ்கிருதத்தையே குடிகாரன் மாதிரி தூஷித்துக் கொண்டு எந்த அராய்ச்சியாளனும் ஆராய்ச்சி செய்யமுடியாது. ஆனால், இந்நிலைதான் மாநாட்டில் முழுவதுமாக வெளிப்பட்டுள்ளது.

கருணாநிதி என்ன கடவுளா? – பழ. கருப்பையா

ஜூன் 28, 2010

கருணாநிதி என்ன கடவுளா? – பழ. கருப்பையா

தினமணியில் முன்பு பதிவாகியிக்கும் கட்டுரை
First Published : 28 Apr 2010 12:44:04 AM IST

கருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே. எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், “அடித்து வைத்திருப்பதைக்’ காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும் கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள்.

ஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன்? இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும் கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம் உடையவரில்லை. மேலும் கருணாநிதி என்ன தயரதனா?

மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? “”எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்” என்று பற்றற்று உதற? வதற்கு! தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி? ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன? தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.

கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர். அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி.

அதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா? பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம்? இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸிக்கு? கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே! இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார்? கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல,கட்சியும் வலிவு பெற முடிந்தது.

அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும். அவரிடமிருந்த “செல்வம்’ அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர். தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர்.

மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார். அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி. தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி. ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம்.

ஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே. “உனக்கு இது, உனக்கு அது” என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா? ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும், அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே! சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாய்ப் பங்கிட முடியுமா என்ன? இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே?

இரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும்? கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி “திருமங்கலம் சூத்திரம்’ என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா? அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா? கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்? மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா? பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா?

அப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும்? அழகிரிக்குமல்லவா வந்திருக்கும்! “கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்’ என்று அழகிரி சொன்னதன் பொருள், “நீ விலகி நில் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதுதான்! கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார் பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி. தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி.

கட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி. இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு. இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன விசுவாசம்? மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி?

திமுக என்ன சங்கர மடமா? என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி! சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும். திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா? “அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்’ என்று வெளிப்படையாக
அந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே! “நீயாக ஏன் முடிவு செய்கிறாய்? குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்’ என்பது அழகிரியின் கூக்குரல். “என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்” என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி? யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே! 1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே!

முதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை. அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும். தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸால் களமிறக்கப்படுவார். தயாநிதியிடம் இல்லாத பணமா? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் “போதும்; போதும்’ என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும்? திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும்.

கருணாநிதி என்ன கடவுளா? தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்! தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும்என்பது இயற்கை விதி! அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?

செம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது!

ஜூன் 28, 2010

செம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது!

அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்

First Published : 28 Jun 2010 01:53:57 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx…..d=263510&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

தாக்குதலுக்கு உள்ளான அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையாவின் வீடு மற்றும் கார்.
சென்னை, ஜூன் 27: அதிமுக இலக்கிய அணியின் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டார்.சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் பழ. கருப்பையாவின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டார்.மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பழ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது:மதியம் 2 மணிக்கு என் வீட்டு தொலைபேசிக்கு தமிழ்வாணன் என்பவர் பேசினார். உங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் ஊரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். ஊரில் தான் இருக்கிறேன். நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன். பதில் சொல்லாமல் மோசமான ஒரு வார்த்தையைக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார். எனக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வருவது புதிதல்ல என்பதால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.மாலை 3.30 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஏழெட்டு நபர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் எனது மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.என்னைப் பார்ப்பதற்காக பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். அதனால், வந்தவர்களை எனது மனைவி வரவேற்றார். வந்தவர்களின் தோற்றத்தை பார்த்ததும் நீங்கள் யார் என்று கேட்டேன்.நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது என்று சொல்லி வாயில் குத்தினார்கள். கையால் கன்னம், உடலின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி குத்தினார்கள். இது ஆரம்பம்தான் என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.கார், மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் என்று பல பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எனது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.  கருணாநிதி என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று முதல்வர் கருணாநிதியை விமர்சனம் செய்து கட்டுரை எழுதினேன். அதனாலேயே என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இது ஆரம்பம் தான் என்றார்கள். தீய சக்திகளுக்கு எதிரான என் எழுத்துக்கும், பேச்சுக்கும் இதுதான் ஆரம்பம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் பழ. கருப்பையா.தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்த வீட்டை துணை கமிஷனர் கே. சண்முகவேல், ராயப்பேட்டை உதவி கமிஷனர் பி. வசந்தகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர். இது குறித்து ராயப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிமுக எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பழ. கருப்பையாவைச் சந்தித்து தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.


பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல்: சோ’ கண்டனம்
: சென்னையில் அதிமுக இலக்கிய அணித்தலைவர் பழ. கருப்பையா வீடு மற்றும் வீட்டில் இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர்தான் இந்த செயலை செய்தனர் என்று பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.  உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை விமர்சித்ததால் திமுகவினர் இந்த தாக்குதல் நடத்தினர் என்று கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடந்த வீட்டை நேரில் சென்று பார்த்தார் பத்திரிக்கையாளர் சோ’. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘’திமுகவை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக்கூடாது.   அப்படி கொடுத்தால் இப்படித்தான் தாக்குதல் நடத்துவார்கள். இது ஒன்றும் புதிதல்ல;  1971ல் இருந்தே அவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

பழ.கருப்பையா மீது தாக்குதல் இரண்டு தனிப்படைகள் அமைப்பு: சென்னை : அ.தி.மு.க., பேச்சாளர் பழ.கருப்பையாவை தாக்கியவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வசித்து வருபவர் பழ.கருப்பையா. அ.தி.மு.க., பேச்சாளரான இவரது வீட்டிற்கு நேற்று  வந்த ஆறு மர்ம நபர்கள், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில், பழ. கருப்பையாவை கை மற்றும் முகத்தில் தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றனர்.இந்த தாக்குதல் குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

பழ. கருப்பையா மீது தாக்குதல்: அரசியல் கட்சிகள் கண்டனம்
தினமணி – First Published : 29 Jun 2010 02:41:30 AM IST
சென்னை, ஜூன் 28: அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பா.ஜ.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர்களையும், பத்திரிகை அலுவலகங்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், கட்சி அலுவலகங்களையும் தாக்குவது வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க. அரசு செய்யும் தவறுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் யார் இறங்கினாலும் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை.   பழ. கருப்பையா மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்கியவர்கள் வெறும் அம்பாகத்தான் இருக்க முடியும். அந்த அம்பை எய்தியவர்கள் யார் என்பதை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த காவல் துறை முன்வருமா என்பது கேள்விக்குறியே. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் .
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை சர்வாதிகாரம், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரையும், தி.மு.க. அரசையும் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தியும், குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியும், கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. கோவையில் முதல் அமைச்சர் நடத்திய தன் குடும்ப விழா விளம்பர மாநாட்டைப் பற்றித் துணிச்சலாக, உண்மையாக, எடுத்து உரைத்ததால், பழ. கருப்பையா மீது தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இத்தகைய அராஜக அடக்குமுறையை ஏவிய சர்வாதிகாரிகள், மக்கள் சக்தியால் தூக்கி எறியப்பட்டதுதான் வரலாறு.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: பழ. கருப்பையாவின் வீடு புகுந்து சமூக விரோதிகள் தாக்கியது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும். இது எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் உரிய தண்டனை பெற அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் ந. சேதுராமன்: குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும். விமர்சனம் செய்வோரைத் தாக்குவது என்பது நாகரிகமற்ற செயல்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத்: பழ. கருப்பையா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், எதிர்கட்சி பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழக காவல் துறைத் தலைவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு!

ஜூன் 27, 2010

குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு!

கருணாநிதி முன்னிலையில், குலுங்கும் கோவையில் அறிவிப்பு,

எல்லோருமே நமிதா, குஷ்பு, என்ற நினைப்பில் இருந்தது

அந்த கிழங்களின், காமக்கவிகளின், வாலிகளின் விரசங்கள், விசனங்கள், கிரக்கங்கள், மூச்சுகள், பெருமூச்சுகள்……..இவற்றைத்தான் வெளிப்படுத்தின.

பட்டிமன்றம் என்ற பெயரில், பெருசுகள் விவச்தையில்லாமல் பேசிக்கொண்டிருந்தன.

இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார்.

பாவம், துண்டு யாருக் கொடுக்கவில்லை போலும்.

அவர் பேசுகையில், “”கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், “ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா’ போட்டு பேசுவர். கலைஞரும் “அண்ணா, அண்ணா’ என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான்.

எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ்.

கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர்.

விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்.

தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள்.

எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான்.

செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,” என்றார்.

வாலியின் கூட்டத்தில் கவிக்குரங்குகளின் அட்டகாசம்: கழுதையிலிருந்து குரங்குகள் வரை!

ஜூன் 27, 2010

வாலியின் கூட்டத்தில் கவிக்குரங்குகளின் அட்டகாசம்: கழுதையிலிருந்து குரங்குகள் வரை!

அஸ்கோ பர்போல காட்டுக்கழுதையைப் பற்றி சொன்னதால், முந்தைய திராவிடர்களுக்கு கிரக்கம் ஏற்பட்டுவிட்டது போலும்.

மேற்கிலிருந்து இந்தக் காட்டுக்கழுதை புதியதாக சிந்துசவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது”, என்று வேறு சொல்லிவிட்டதால், மேனாட்டு சரக்கு தூக்கிவிட்டது போலும்.

காட்டுக்கழுதை போய், வாலியின் அரங்கம் வந்தது, நேற்று.

கழுதைகளின் கூட்டம், கழகத்தில் கேட்கவே வேண்டாம்.

அஸ்கோ பர்போலவே அதற்கு விளக்கம் வேறு அளித்துள்ளார்.

சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரைக்கும் “குரங்கு” என்றால் “குதிரை” என்ற பொருளும் உண்டு. ஆனால் அஸ்கோ பர்போல “காட்டுக்கழுதை”தான் முந்தைய-திராவிடர்களுக்குத் தெரியும் என்று சொல்லியுள்ளார்.

கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ ………என்றெல்லாம் இங்குண்டு

ஆமாம், கவிக்குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

அனைத்து கட்சிக்கும் கலைஞர் தான் ரிங்டோன்: “துதியரங்கம்’ ஆக மாறிய கவியரங்கம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26962

ஆல்பம்

கோவை (சனிக்கிழமை, 26-06-2010) : கோவை செம்மொழி மாநாட்டில் நேற்று கவியரங்கம் நடந்தது. தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல் பேசவும் மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர் கருணாநிதி தான் தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.

தலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, “”தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,” என்றார். சமீபத்தில் அ.தி.மு.க., கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை வாலி. “”ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, “சாமிகள்’ அறிவாலயம் நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,” என்றார்.

மேத்தா கருணாநிதியை வணங்கலாமா? கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், “”இதுவரை தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த் தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல் வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும் அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு. இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,” என்றார். முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை. “”இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர். சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத்ததில் முதல்வர். அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும் வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,” என்றார்.

கவிஞர் தணிகாசலம் பேசுகையில், “”இன்று காவிரியை கடக்க ஓடம் வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம் நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில் நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம், நியாயம்,” என்றார்.

கவிஞர் இளம்பிறை பேசுகையில், “”கடல் அலையாக பொங்கும் உணர்வை கம்பி வலைகளா தடுக்கும்? படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள் விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,” என்றார்.

கவிஞர் பழனிபாரதி பேசுகையில், “”நீ சுவாசிப்பது காற்றை அல்ல; தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன். நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற அத்தனை தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராகி விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம் சூரியனின் உயரம்,” என்றார்.

இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில், “”கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், “ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா’ போட்டு பேசுவர். கலைஞரும் “அண்ணா, அண்ணா’ என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ். கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர். விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள். எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான். செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,” என்றார்.

இவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடைசி செய்தி:சில கவிக்கள் சென்னையில் பழ.கருப்பைய்யா வீட்டுக்குள் நுழைந்து அடித்து, கலாட்டா செய்து விட்டு போனதால், கவிக்குரங்குகளின் அட்டகாசம் தொடர்கிறது போலும். மாலையில் ரோஜா முத்தையா அரங்கத்தில் “காட்டுக்கழுதை” சொற்பொழிவு வேறு உள்ளது. என்ன நடக்குமோ?