Posts Tagged ‘திமுக’

திராவிட களஞ்சியம் – தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? 1970 லிருந்து எத்தனை சங்க இலக்கியம் வெளியிடப் பட்டுள்ளது? (1)

செப்ரெம்பர் 5, 2021

திராவிட களஞ்சியம்தமிழ்திராவிட சண்டையா, ஆரியதிராவிட இனப் போராட்டமா, இனமாஇனத்துவமா, இனத்துவமாஇனவெறித்துவமா? 1970 லிருந்து எத்தனை சங்க இலக்கியம் வெளியிடப் பட்டுள்ளது? (1)

திராவிடக் களஞ்சியம் தொகுப்பு வெளியீடு அறிவிப்பு, எதிர்ப்பு: சங்கத் தமிழ் இலக்கியங்களை, எளிய தொகுப்பாக வெளியிடப் போவதாகவும் இதற்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், “சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல்இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து விகடன் நிருபரிடம் பேசிய அவர், “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும்திராவிடஎன்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்குதிராவிடக் களஞ்சியம்என்று தி.மு. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும். எது எப்படி இருப்பினும், சங்கத் தமிழ் நூல்களைத்திராவிடக் களஞ்சியம்என்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது தமிழ் மொழிதமிழினம் இரண்டையும் மறைக்கும் செயலாகும். ‘அவன் கையைக் கொண்டு அவன் கண்ணையே குத்து!’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது,” என்றார்[2]. உள்நோக்கம் இருந்தால், மணியரசன் தாராளமாக எடுத்துக் காட்டியிருக்கலாம்.

1970 முதல் 2020 வரை இல்லாத விருப்பம், காதல் மோகம் திடீரென்று வந்துள்ளது ஆச்சரியம் தான்:  19ம் நூற்றாண்டில் ஓலைச் சுவடிகளைத் தேடி, பதிப்பித்து, அச்சில் புத்தகங்களாக வெளிக் கொண்டு வந்திருக்கின்ற கால கட்டத்தில், திராவிடத்துவ வாதிகள், திராவிட இனம்-மானம் பேசும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகள் பதவிக்கும், அந்தஸ்த்திற்கும், பலவிதங்களில் ஆங்கிலேயரை எதிர்த்தும்-ஆதரித்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நீதி கட்சி, திராவிட கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சிதான் பெருகின. உதாரணத்திற்கு சில சங்க இலக்கிய பதிப்பு விசயங்கள் கொடுக்கப் படுகின்றன:

சங்க இலக்கியம்வருடம்பதிப்பாளர் / உரையாசிரியர்
கலித்தொகை1887 சி.வை. தாமோதரம்பிள்ளை
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்1889உ. வே. சாமிநாதையர்
புறநானூறு1894உ. வே. சாமிநாதையர்
ஐங்குறுநூறு1903உ. வே. சாமிநாதையர்
பதிறுப்பத்து1904உ. வே. சாமிநாதையர்
நற்றிண1915பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர். சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை
குறுந்தொகை1915சௌரிப் பெருமாள் அரங்கனார்
பரிபாடல்                     1918உ. வே. சாமிநாதையர்
அகநானூறு1920கம்பர் விலாசம் இராஜகோபாலய்யங்கார். ராகவையங்கார் (பதிப்பாசிரியர்)

பிறகு மற்ற நூல்கள் பலரால் வெளியிடப் பட்டன[3].

  1. ஆறுமுக நாவலர் சைவ இலக்கிய நூல்களை (ஸ்தல புராணங்கள் உட்பட) வெளியிட்டுள்ளார்.
  2. இலங்கையிலும் பல பதிப்புகள் 19ம் நூற்றாண்டிலிருந்து வெளி வந்துள்ளன.
  3. உ.வே.சாமிநாத ஐயர் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இன்றும் நூல்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
  4. திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் செய்த பணியை இது வரை யாரும் விஞ்சியதாகத் தெரியவில்லை.
  5. சமீப காலத்தில் வர்த்தமான பதிப்பகம், எல்லா தமிழ் இலக்கியங்களையும் வெளியிட்டுள்ளது. ஆக, இவற்றை விட, தமிழக அரசு செய்து விட முடியுமா என்று பார்க்க வேண்டும்.  1970 முதல் 2020 வரை இல்லாத விருப்பம், காதல் மோகம் திடீரென்று வந்துள்ளது ஆச்சரியம் தான். ஏனெனில், ஒரு ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்று வெளியிட்டிருந்தால் கூட 70 புத்தகங்கள் வெளியிட்டிருக்கலாம்[4].

ஆகவே, அப்பொழுதெல்லாம் செய்யாமல், இப்பொழுது, செய்யப் போகிறேன் என்று தினம்-தினம் அறிக்கைகள், திட்டங்கள் வெளியிடுவது தமாஷாக இருக்கிறது.

முரசொலி கொடுத்த விளக்கம் (02-09-2021)[5]: முரசொலியில், “திராவிடம் என்றால் எரிகிறதா?” என்ற தலையங்கத்தில் திராவிடம் மற்றும் தமிழ் பற்றி விளக்கம் கொடுக்கப் பட்டது. ‘திராவிட’ என்பதை வடசொல் என்பது வேர்ச் சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’தேவநேயப் பாவாணர் அவர்கள், ‘திராவிடம்’ என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திரவிடம் என்பது தென் சொல்லே என்றுஅவர் நிறுவி உள்ளார். பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும், மொழிப் பெயர்களும் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. ஈழம், கடாரம், சீனம், யவனம் தமிழம் -த்ரமிள (ம்) – த்ரமிடன் (ம்) -த்ரவிட (ம்) – திராவிட (ம்) – என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது – தவிள – தவிட – என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி தவிட என்னும் வடிவங்கள் த்ரமில,திரவிட, த்ரவிட என்று வடமொழியிற் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்கள் கூறுவர். எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை,” என்று எழுதி இருக்கிறார் பாவாணர்[6]. தமிழ், திராவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும் ஒரு பொருட்சொற்களில் தமிழையே குறித்து வந்திருப்பினும் இன்றைய நிலைக்கேற்ப தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன என்றும் சொன்னவர் அவரே. “திரவிட மொழிகளெல்லாம், முதற் காலத்தில் வேறுபாடின்றி அல்லது வேறு படுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப் பெற்றமை” என்ற அவர், தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம் -த்ரமிடம் – த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை என்கிறார்.

முரசொலி கொடுத்த விளக்கம் (02-09-2021) – திராவிடம் தமிழ் மொழி: முரசொலி விளக்கம் தொடர்கிறது, “தமிழ்தமிழன்தமிழ்நாடுதிராவிட மாடல்நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன் என்று முதலமைச்சர் ஒலித்து வருவது இரண்டும் ஒரே பொருளைத் தருவதால்தான். இதில் குற்றம் காண எதுவும் இல்லை. வேறு குற்றம் காண முடியாதவர் வேண்டுமானால்திராவிடக் குற்றம்கண்டு வருகிறார்கள். இதுதான் புரட்சிக் கவிஞர்தமிழியக்கம் கண்ட பாவேந்தர்பாரதிதாசன் அவர்களின் கூற்றுமாகும். “நான்மூவேந்தர் நாடெனநவில்வதும் தென் மறவர் நாடென்று செப்பலும் பழந்தமிழ் நாடெனப்பகர்வதும், இந்நாள் வழங்குதிராவிடர் நாடெனவரைவதும் ஒன்றே! அதுதான் தொன்று தொட்டு வென்ரு புகழோங்கு நம் அன்னைநாடு! திராவிடம் என்று செப்பிய தேன் எனில்திருத்தமிழம்எனும் செந்தமிழ்ப் பெயரை வடவர் திரமிளம் என்று வழங்கினர். திரமிளம், பிறகுதிராவிடம் ஆனது. வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே! அதுபோல் திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால் இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்!….உறுதி ஒன்று திராவிட மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே!” என்றுஎழுதினார் பாவேந்தர்! திருத்தமிழகத்தை மீட்டு வாழ்வதை, ஆள்வதைத்தான்திராவிட மாடல்ஆட்சி என்கிறார் முதலமைச்சர்”.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] விகடன், தமிழ் சங்க இலக்கியத் தொகுப்பிற்கு `திராவிடக் களஞ்சியம்எனப் பெயர் சூட்டுவதா?” – பெ.மணியரசன் கேள்வி, கு. ராமகிருஷ்ணன், Published: 01 Sep 2021 1 PM; Updated: 01 Sep 2021 1 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/literature/pe-maniyarasan-condemns-the-dmk-government-for-using-the-word-dravidian-instead-of-tamil-heritage

[3]  சுபாஷிணி, சங்க இலக்கியப் பதிப்புகள், ஜூலை 11, 2010.

[4] இதற்கெல்லாம் கோடிகள் செலவழிக்க வேண்டாம், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை என்பது தான் உண்மை.

[5] புதியதலைமுறை, சங்க இலக்கிய தொகுப்பும், திராவிடக் களஞ்சியமும்: எதிர்ப்புக் காரணங்கள் Vs முரசொலி தலையங்கம், சிறப்புக் களம்,    Web Team Published :02,Sep 2021 06:34 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/114613/Murasoli-article.html