Posts Tagged ‘குறுந்தொகை’

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? தமிழ் தேசியம் ஏன் திராவிட தேசியத்தை எதிர்க்கிறது? (2)

செப்ரெம்பர் 5, 2021

தமிழ்திராவிட சண்டையா, ஆரியதிராவிட இனப் போராட்டமா, இனமாஇனத்துவமா, இனத்துவமாஇனவெறித்துவமா? தமிழ் தேசியம் ஏன் திராவிட தேசியத்தை எதிர்க்கிறது? (2)

திராவிடம்என்ற சொல்லை மற்றவர்கள் எதிர்த்தது: மணியரசன்[1], “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் – தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக ‘திராவிட’ என்ற வடசொல்லைப் புகுத்திவருகிறார்[2]. தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக்கூட அவர் ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினார்[3]. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, ஸ்டாலின் அவர்கள் ‘திராவிடச் சிறுத்தை’ என்று சிறப்புப் பெயர் சூட்டியதையும் இங்கு நினைவுகொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் திருமாவளவன் அவர்களை ‘எழுச்சித் தமிழர்’ என்று அழைக்கிறார்கள். அதை ‘திராவிடச் சிறுத்தை’ என்று மாற்றுகிறார் ஸ்டாலின்,” என்று எதிர்ப்பை விளக்கினார். “அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில் ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாமல், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” (I belong to Dravidian Stock) என்று அறிவித்துக்கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றி பெற்றபின் ‘திராவிடத்தை’த் திணிப்பது என்ற தந்திரமாகத்தானே இதைப் பார்க்க முடிகிறது”.

திராவிடக் களஞ்சியம்என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம்: மணியரசன் தொடர்ந்து, விளக்கியது, “தமிழ்நாட்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு வந்த தமிழ் இலக்கியங்களில்தான்திராவிடஎன்ற சொல் இருக்கிறது. அசலாகதிராவிடஎன்ற சொல்லை உருவாக்கியவர்கள் ஆரியர்கள். தென்னக மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்திராவிடஎன்ற சொல்லை சமஸ்கிருத நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின்தந்திரவார்த்திகாநூலிலிருந்தும் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார். தமிழ் இன உணர்வும், தமிழ்த்தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ், தமிழினப் பெருமிதங்களைதிராவிட மாயையில் மறைக்கும் செயலை இனிமேலாவது தி.மு. கைவிட்டால் நல்லது. திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள தமிழறிஞர்களும், இன உணர்ச்சியுள்ள தமிழர்களும் தங்கள் தலைமைக்கு இதையெல்லாம் சுட்டிக்காட்டி, தமிழை திராவிடமாகத் திரிக்கும் வேலையைக் கைவிடச் செய்ய வேண்டும். தமிழர்களின் இந்த வேண்டுகோளைப் புறக்கணித்து, சங்கத் தமிழ் நூல்களைப் பிடிவாதமாகத்திராவிடக் களஞ்சியம்என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்..

 ‘தமிழ்க்களஞ்சியம்என்று பெயரிட வேண்டும்சீமான்: இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது[4]: “சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்குதிராவிடக் களஞ்சியம்எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும். மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாததிராவிடம்எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது. ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களைதிராவிடக்களஞ்சியம்என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, ‘தமிழ்க்களஞ்சியம்என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்,” என்று வலியுறுத்தியுள்ளர்[5].

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் கருத்து கேட்டது. அவர் கூறியதாவது: “ஒரு காலத்தில் திராவிடம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அன்றைய புரிதல் அதுதான். பிரிட்டிஷார் அந்த சொல்லை பயன்படுத்தினார்கள். நாமும் அதை பயன்படுத்தினோம். நாம் ஒரு வழக்கமான தமிழ்த்தேசியர்களைப் போல, திராவிடம் என்ற அடையாளம் உருவான காலகட்டத்தையே மனதில்கொள்ளாமல், திராவிடம் என்று சொல்லி வசைபாட வேண்டியதில்லை. அதே நேரத்தில், நம்முடைய சம காலத்தில், தமிழ் வேறு தெலுங்கு, மலையாளம், கன்னடம் வேறு என்ற மரபு உருவாகி நிலைத்துவிட்ட விட்ட பின்னால், தமிழ்மொழியை தமிழ் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தேவையற்ற குழப்பத்தையும் தேவையற்ற சிக்கலையும் ஒரு அரசே உருவாக்கக் கூடாது. அன்றைக்கு திராவிடம் என்ற ஒரு பொது சொல்லால் இவர்கள் எல்லாம் புரிந்துகொண்டிருந்தார்கள் என்று நாம் விளக்கிக்கொள்ளலாம். ஆனால், இவ்வளவு நடந்த பிறகு, சமகாலத்தில் தமிழை தமிழ் என்று சொல்லிவிட்டு போகலாமே அதிலென்ன இருக்கிறது.” என்று கூறினார்.

கால்டுவெல்லின் திராவிடம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது: இல்லாத ஒரு திராவிடம் இன்று குறிப்பிட்டு தமிழ்த் தேசிய கடும்போக்குவாதிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது: “பொதுவாக அது அவ்வளவு பொருத்தமான விமர்சனம் அல்ல. திராவிடம் என்பதை வெறும் மொழிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில் திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதற்கான இன்னொரு பேர்தான். அதை குழப்பியது திராவிட இயக்கம்தான். எனவே திராவிட இயக்கத்தைப் பற்றிய விமர்சனத்தைதான் இந்த வார்த்தையினுடாக அவர்கள் செய்கிறார்கள். மற்றபடி, திராவிடம் என்பது ஒவ்வொருத்தருக்கும் அவர்களுக்கு ஏற்றமாதிரி கடந்த காலத்தில் பொருள்பட்டிருக்கிறது. திராவிடம் என்ற சொல் பெரியாருக்கு ஒரு விதமாக பொருள்பட்டிருக்கிறது. அயோத்திதாசருக்கு ஒருவிதமாக பொருள்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கு ஒருவிதமாக பொருள்பட்டிருக்கிறது. அதனால், திராவிடம் என்பதை ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரியாக பொருள் கொண்டார்கள். உதாரணத்துக்கு தலித்துகள் ஆதி திராவிடர்கள் என்று பொருள்கொண்டார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு பொது சொல்லாக அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். பெரியார் அதை ஒரு மாதிரி விளக்கினார். அதனால், திராவிடம் என்ற சொல்லையே எதிர்ப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இந்தியத் தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to secede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும், தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த்தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும், இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும்

[2] தமிழ்.இந்து, சங்கத் தமிழ் நூல் தொகுப்புக்குதிராவிடக் களஞ்சியம்என பெயர் சூட்டுவதை கைவிட வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 02 Sep 2021 03:13 AM; Last Updated : 02 Sep 2021 06:46 AM.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/711647-maniyarasan-statement.html

[4] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழ் சங்க இலக்கியங்களைதிராவிடக் களஞ்சியம்என தொகுப்பது சரியா? தலைவர்கள், எழுத்தாளர்கள் கருத்து, Written By WebDesk

September 2, 2021 12:08:07 am.

[5] https://tamil.indianexpress.com/literature/sangam-literature-and-dravidian-kalanjiyam-controversy-political-leaders-and-writers-scholars-opinion-337927/